logo

|

Home >

sivaprakramam-64-forms-of-lord-shiva >

sivaparakramam-umesha-murthi

உமேச மூர்த்தி

உமேச மூர்த்தி
உமேச மூர்த்தி
  • பண்டொரு பதுமகற்பத்தில், நான் முகன் வழக்கப்படி பல கோடி ஜீவராசிகளையுஞ் சிருட்டி செய்வான் கருதி, ஸநகன் – ஸநந்தனன் - ஸநாதனன் - ஸநற்குமாரன் என்னும் நான்கு புத்திரர்களை யுண்டு செய்து அவர்களைக்கொண்டு உலகவிர்த்திசெய்ய உத்தேசித்திருப்ப, அப்புதல்வர் நால்வரும் நான்முகன் விருப்பத்திற்கிணங்காராய் நல்லுணர்வுற்றுத் தவச்செயலை நாடினர். அதன்பிறகு வேதா யாது வழியிலும் சிருட்டிச்செயல் செவ்வைப்படாமையால், சித்தந்திகைத்து மெத்தவும் பிரமித்துத் தான் முன்பெற்ற தநயரோடு தாமோதரனைச் சார்ந்து தரை மேல் வீழ்ந்து பணிந்து தனக்குச் சிருட்டித்தொழில் கைவராமையைக் கழறி நின்றான். கமலை கேள்வன் "பிரமனே! உன் கருத்து நம் மிருவராலு முற்றுறாது. பன்னகாபரணன்பாற் கூறின்பதப்படும்.” என்று பிரமனு முநிவருமுடன்வர, விஷ்ணு வெள்ளி மலையையடைந்து விடையூர்திபால் தமது வருகையை விண்ணப்பிக்கும் படி திருநந்திதேவரை நமஸ்கரித்துக்கூற, அவர் அவ்வாறே ஆண்டவர் சந்நிதியி லடைந்து சாற்ற, சங்கரன் ''அவர்களைத் தருக'' என்று ஆஜ்ஞாபிக்க, திருநந்திதேவர் அவர்களைச் செல்லும்படி விடைதந்தனர்.
  • கட்டளைப்படி உட்சென்று கண்ணுதலைத் தரிசித்து யாவரும் நிற்கையில், திருமால் “பெருமானே! பிரமன் சிருட்டிசெய்யவெண்ணிஎத்தனித்தபொழுது அது விருத்தியாகாமையின், அக்குறைதனை யகற்றவேண்டும்'' என்று பிரார்த்திக்க, சிவபெருமான் தனது தீவிழியால் திருமால் – திசைமுகன் - புதல்வர் நால்வர் ஆகிய இவரைச் சாம்பராக்கினர். அக்காலத் தவ்விடத்து ஒன்றியாக நின்ற பரமன் தமது வாமபாகத்திலுள்ள திருத்தோளைப் பார்க்க அதனின்றும் அப்பெருமானதுசத்தியே உமாதேவியாகத் திருவுருவுற்றது. அவ்வுமையம்மையாரைத் தமது இடப்புறத்தி லிருத்தி இருவருமாக ஒரு திருவிளையாடல் செய்து-விஷ்ணு – பிரமன் – நான்கு முநிவர்களையும் முன்வந்த வண்ணமே படைத்தனர். அவர்கள் அறுவரும், சிவபெருமானையும் உமையம்மையாரையும் பணிந்து பரவி நிற்கையில், பரமபதி பந்நகசயநனைப் பார்த்து "நாரண! நமதருளாகிய சத்தியோடு கூடிநின்றோம் ஆதலின், பண்டுபோற் பதுமனுக்குப் படைப்புத் தொழில்கை வரும்'' என்று திருவாய்மலர்ந்தருள, அவர்கள் அகமகிழ்ச்சியடைந்து அம்மையையும் அப்பரையும் பணிந்து வலம் வந்து விடைபெற்று அப்பாற் போயினர். அதுமுதல் ஆரணன் ஆன்மாக்களை யாக்குமாற்றல் பெற்றனன். அக்காலத்தில் ஆதிநாதன் உமாதேவியாருடன் ஒன்றிநின்றதனால் அகிலமெல்லாம் விருத்தியாகு மியற்கை யுற்றன.
  • சிவபெருமான் உலகத்திலுள்ள எல்லாப் பொருள்களையும் படைத்துக் காத்துத்துடைக்கும் வகையாய் நாநாபேதம்பெற்ற தமது திருவருளாகிய சத்தியே உமையம்மையாக வாமபாகத்திலிருக்கக்கண்டு வீற்றிருந்தமையின் உமேசமூர்த்தி யென ஒரு திருநாமமுற்றனர்.

கந்தபுராணம்.

"தந்துழி யீசன் றன்னைத் தனயரு மயனு மாலும்
வந்தனை செய்து போற்ற மாயவன் வதன நோக்கி
நந்தம தருள தாகு நங்கையோ டினிது சேர்ந்தா
முந்தையின் வேதாச் செய்கை முற்றிடும் போதி யென்றான்.”

உமேஶாய நம:

 

சிவபராக்கிரமம் 64 சிவ மூர்த்தங்கள்
 

Related Content

இலிங்கோற்பவ மூர்த்தி

முகலிங்க மூர்த்தி

ஸதாசிவமூர்த்தி

மஹாசதாசிவ மூர்த்தி

உமாமஹேச மூர்த்தி