logo

|

Home >

sivaprakramam-64-forms-of-lord-shiva >

sivaparakramam-lakuleshwara-murthi

லகுளேசுவர மூர்த்தி

லகுளேசுவர மூர்த்தி
லகுளேசுவர மூர்த்தி

இலகுளேஶ்வரர் வரலாற்றினை விளக்குவதற்கு முன்னர் அவரெழுந்தருளியி ருக்கும் புவனத்தைக் கூறுதல் இன்றியமையாததாதலின்அவ்வுலகவளவைச் சிறிது கூறுகின்றேன். அது எட்டுக் கொண்டது திரிசரேணு அது எட்டுக்கொண்டது இலீகைஅது எட்டுக் கொண்டது யூகைஅது எட்டுக்கொண்டது யவைஅந்த யவை குறுக்காக எட்டுக்கொண்டது மாநாங்குலம். அது இருபத்துநான்குகொண்டது முழம்அது நான்கு கொண்டது வில்அது இரண்டுகொண்டது தண்டம்அது இரண்டாயிரங்கொண்டது குரோசம்அது இரண்டுகொண்டது கெவியூதிஅக்குரோசம் நான்கு கொண்டது யோசனை அந்த யோசனை நூறுகோடி கொண்டது பிருதிவி தத்துவத்திலுள்ள வோரண்டத்தின் விரிவு. உயரமும் அவ்வளவினதே யாகும்.

 

பிருதிவி தத்துவத்தில் ஆயிரகோடி அண்டங்களுண்டு. இதை கடந்த அப்புதத்துவம் பதின்மடங்கு விரிவுமுயர்ச்சியு மேற்றங் கொண்டிருக்கும். அப்பு தத்துவத்தைப்பற்றதேயுமுதற் பிரகிருதியீறாக அண்டங்கள் பதின்மடங்குவிரிவு முயர்ச்சியு மிகுந்திருக்கும்முன்னைய பிரகிருதியைப்பற்றஇராகம் நூறுபாகம் விரிவுமுயர்ச்சியுமேற்றங்கொண்டிருக்கும். அவ்விராகத்தைப்பற்றவித்யாதத்துவம் நூறு மடங்குவிரிவு முயர்ச்சியுங் கொண்டிருக்கும். அவ்வித்தையைப்பற்ற நியதிதத்துவம் நூறுமடங்கு விரிவுமுயர்ச்சியுங் கொண்டிருக்கும். அந்நியதியைப் பற்றகாலதத்துவம் நூறு மடங்கு விரிவுமுயர்ச்சியுங் கொண்டிருக்கும். முன்கூறிய காலத்தைப்பற்றகலாதத்துவம் நூற்றொருபதினாயிரம் விரிவுமுயர்ச்சியுங்கூடும். அதன்மேல் மாயை - சுத்தவித்தை - ஈச்சுரம் – சாதாக்யம் முதலிய தத்துவங்கள் ஒன்றற்கொன்று முறையே கோடி – கோடியே பதினாயிரம் – இலக்ஷம் -இரண்டிலக்ஷம் மூன்றிலக்ஷ முதலிய பாகங்கள் அதிகப்பட்டு நிற்கும்.

 

இங்ஙன மிகுக்கு மண்டவிரிவில்பிருதிவிதத்துவமாகிய நிவர்த்திகலையின் ஒரு தட்டில்தேங்காய் விளங்காய் பரப்பினது போல ஆயிரக்கோடியண்டமுண்டுஅவை பொன்மயமாய் அருக்கர் பதினாயிரர் உதயமானாற்போலகுக்குடாண்டம் போலிருக்கிற அண்டகடாகப்புறம்பே இந்திரதிக்கு முதலிய பத்துத்திக்கிலுமுள்ள நூறு புவனத்தினும் நூறு உருத்திரரும்அவர்கள் புவனத்திற்குமேல்காலாக்கினி யுருத்திரர் முதலியோர் புவனமாறும்அவற்றின்மேலிரண்டுமாகஅக்கலையில் நூற்றெட்டுப்புவனங்களுண்டு. அவை: - பத்திரகாளி – வீரபத்திர – த்ரிலோசன – விப்ஸுநப – விவாக – ஸம்வாஹத்ரிதசேச – த்ரியக்ஷ - கணாத்யக்ஷ - விபுசம்பு – தமஷ்ட்ரீ – வஜ்ர – பணீந்த்ர – உதும்பரேச – கிரஸந - மாருதாசந – குரோதந – அந்த – விருஷதர - விருஷ – பலிப்பிரிய – பூதபால – ஜ்யேஷ்ட – சர்வ – சுரேச - வேதபாரக  - ஞாநபுக் - சர்வஞ்ஞ  -ஈஶ - வித்தியாதிப – ப்ரகாமத – பிரசாதக - சிரீத்ருக்கு ரத்த்ருக்கு – லஷ்மீத்ருக்கு – ஜடாதர – ஸௌம்யதேஹ – தந்யரூபவான் - நிதீதமேஹவாஹந - கபர்த்தி - பஞ்சசிக – பஞ்சாந்தக - க்ஷயாந்தக - தீக்ஷண – சூக்ஷ்ம - வாயுவேக – லகு - சீக்கிர – ஸுநாத – மேஹநாத - ஜலாந்தக - தீர்க்கபாகு - ஜயபத்ர – ஸ்வேத - மஹாபல - பாசஹஸ்த – அதீபல – பல – தமஷ்ட்ரீ – லோஹித – தூம்ரக – விரூபாக்ஷ ஊர்த்துவசேப - பயாநக – க்ரூரத்ருஷ்டி - விக்ந – ந்ஹத்ரு -மாரண – ந்ருதி – தர்மபதி – தர்ம – வ்யோக்த்ரு – ஸம்யோக்த்ரு – கர்த்ரு – விதாத்ரு – தாத்ருஹாம் – ம்ருத்யு – யாம்ய – க்ஷயாந்தக பஸ்மாந்தக – பப்ரு -  தஹந – ஜ்வலந – ஹாகாதக - பிங்கள – ஸுதாசந - அக்நிருத்ர – திரிதசாதிப – பிநாகி -சாஸ்த்ரு – அவ்யய – விபூதி – பிரமரத்ந – வஜ்ரதேக – புத்த – அஜ – கபாலீச - ரௌத்ர – வைஷ்ணவ – பிராஹ்ம – ஹாடக – கூஷ்மாண்ட - காலாக்கினி முதலிய மேற்கூறிய புவனங்கள் ஏற்றெட்டனுள் முதலிற்கூறிய இரண்டு புவனங்களும் பிரமாண்டத்தின் மேலிருக்கும். அவையொழியப் பத்துப்புவனங்கள் பூமியின்மேலு யரவிருக்கும். அவையொழியப் பத்துப்புவனங்கள் பூமியின் அதோமுகத்திருக்கும்.  அவையொழியப் பத்துப்புவனங்கள் பூமியின் ஈஶாநத்திலிருக்கும். மற்றவை பூமியின் வடக்கிலும்வாயுமூலையிலும்மேற்கிலும்நிருதிதிக்கிலும்தெற்கிலும்அக்கினிதிக்கிலும்கிழக்கிலும்முறையே பப்பத்துப்புவனங்களும்ஒழிந்த ஆறுபுவனமும் காலாக்கினி தத்துவத்திலுமிருக்கும். இவை முறையே நிவர்த்தி கலையிலிருப்பனவாம்.

இதன்மேற் பிரதிஷ்டாகலையில்ஸ்ரீகண்ட - ஒளம – கௌமார – வைஷ்ணவ - பிராஹ்ம பைரவ – கிருத - சுகிருத வென்கிற பிரகிருதியினுங் குணதத்துவத்தினு மிருக்கும் எட்டுப்புவனங்களுக்கும் ப்ராஹ்ம - ப்ராஜேச- சௌம்ய – ஜந்த்ர – காந்தர்வ - யக்ஷ - ராக்ஷச – பைசாச முதலிய புத்திதத்துவத்திலிருக்கும் எட்டுப் புவனங்களுக்கும்அகங்கார தத்துவத்திலிருக்கும் ஸ்துலேஶ்வர புவனத்திற்கும்மனஸ்தத்துவத்திலிருக்கும் ஸ்தலேம்வரபுவனத்திற்கும்ஞாநேந்திரியத்திலிருக்கும் ங்குகர் புவனத்திற்கும்கன்மேந்திரியத்திலிருக்கும் காளஞ்சரபுவனத்திற்கும்மண்டலேஸ்வர - மாகோட - த்விரண்ட சகலாண்ட முதலிய பூததன் மாத்திரையிலி ருக்கும் எட்டுப்புவனங்களுக்கும்ஸர்வணாக்ஷ - பத்திரகர்ண – கோகர்ண - மகாலய அவிமுக்த ருத்திரகோடீ வஸ்திரபாதமுதலிய ஆகாயதத்துவத்திலிருக்கும் எட்டுப்புவனங்களுக்கும்பீமேஶ்வர மகேந்த்ர அட்டாஹாஸ விமலேஶ்வர நகலாய நாகலாய குருக்ஷேத்திர கய முதலிய வாயுதத்துவத்திலிருக்கும் எட்டுப்புவனங்கட் கும்பைரவ சேதார மஹாகாள மத்தியமேச ஆம்ராதக ஜவபேச ஸ்ரீசைவ ஹரிச் சந்த்ர முதலிய தேஜஸ்தத்துவத்திலிருக்கும் எட்டுப்புவனங்கட்கும்இடையில் அப்புதத்துவத்தில் பாரபூத டிண்டி முண்டி ஆஷாட புஷ்கர நைமிச பிரபாச அமரேஸ்வர புவனங்களின் மத்தகத்தில் இலகுளேஶ்வரபுவனம் ஜோதிமயமுற்ற தாய்ப் பிரகாசித்துக்கொண்டிருக்கும். அதில் அவர் எழுந்தருளியிருக்கும் ஆலயத்தின் யோசனை அநேக கோடி. அவர் திருமேனியின் பிரகாசயோசனை அநேக கோடி. சிங்காதனத்தின் யோசனை அநேக கோடி. அவர் வலப்புறம் மழு சூலமும்இடப்புறம் கலசமுமெடுத்த திருக்கரமுந்தாங்கி அப்புவனத்திலுள்ள ஆன்மாக்கட்குப் பாசநீக்கத் தின்பொருட்டு ஆணவாதி மும்மலங்களைப்போக்கிநற்கதி அநுக்கிரகிக்க ஆசாரிய மூர்த்தியாய் வீற்றிருப்பர். இத்தகைய பெருமை கொண்டு ஒவ்வொருபுவனத்தும் ஒவ்வொரு மூர்த்தியா யெழுந்தருளியிருந்து ஆண்டுள்ள ஆன்மாக்களின் பரிபாகத்திற்குத் தக்கபடி யநுக்கிரகிப்பது போல லீண்டு எழுந்தருளியிருக்குஞ் சிவபேதமே இளகுளேஶ்வரமூர்த்தமெனப் பெயருறும்.

காஞ்சிப்புராணம்.

 

"அடுத்தங்குடனாம்பரம்பொருளையன்றேவிரவவொட்டாமல்

தடுத்துமுக்கூற்றுயிருணர்வைத்தகையுமவிச்சைமுழுதிரிய

மடுத்தகருணைத்திருநோக்கின்மாணாக்கருக்குப்பொருளுரைப்ப

எடுத்தகரத்தான்வீற்றிருக்குமிலகுளேசன்றிருவுருவம்.”

 

இலகுளேஶ்வரமூர்த்தயே நம:

சிவபராக்கிரமம் 64 சிவ மூர்த்தங்கள்    

 

Related Content

பாசுபத மூர்த்தி

கிராத மூர்த்தி