logo

|

Home >

sivaprakramam-64-forms-of-lord-shiva >

sivaparakramam-chandesha-anugraha-murthi

சண்டேசாநுக்ரஹ மூர்த்தி

சண்டேசாநுக்ரஹ மூர்த்தி
சண்டேசாநுக்ரஹ மூர்த்தி

 சோழவள நாட்டிலேபூர்வம் குமாரக்கடவுள் சூரபன்மனைச் சங்கரிக்குநிமித் தந் தென்றிசைநோக்கிச் செல்லுகையில்பரமபதியாகிய சிவபெருமானை யருச்சித்த தலங்களுளொன்றும்ஆசாரிய சுவாமிகளின் தேவாரத் திருப்பதிகம் பெற்றுள்ளது மான திருச்சேய்ஞலூரில் வேதியர் குலத்திற் காசிபகோத்திரத்தில் ஜனித்த யஜ்ஞதத்தன் என்றொருவனுளன். அவன் மனைவிபெயர் பத்திரை. அவ்விருவருக் குஞ் சற்புத்திரராக விசாரசருமர் என்பார் திருவவதாரஞ் செய்தனர். அவர்க்கு ஜந்மாந்தர அறிவுத் தொடர்ச்சியால் வேதவேதாகமங்களை யாவர்பாலு மோதா துணருமறிவு ஜனித்தது. தாய்தந்தையர் அவருக்கு ஏழுவயதிலேயே உபாயனஞ் செய்வித்துதக்க ஆசிரியரைக்கொண்டு வேதமுதலியகலைகளைக் கற்பிக்குமுன் தாமே யறியுந் திறமுடையோரா யிருத்தல்கண்டு வியப்புற்றனர்.

அவ்விசாரசருமர் அளவில்லாத வேதாகமங்களிற் கூறப்படும் உண்மைப் பொருனெல்லாம் சர்வலோகசரண்யராகிய சிவபெருமானது திருவடிகளே என்றும்சிருட்டி – திதி - சங்காரம் - திரோபவம் - அநுக்ரஹமென்னும் பஞ்சகிருத்திய காரணமாக ஆநந்தத்தாண்டவம் புரியும் எம்பெருமானே நம்மை யாளாக வுடையாரென்றும் உண்மையறிவு தோன்றுவதால்சர்வான்மாக்களிடத்தும் அன்பின்

வழியொழுகிவருங்காலத்தில்ஒருநாள் அவர் தம்மோடு வேதாத்தியயனஞ் செய்யும் அந்தணச்சிறுவரோடு அவ்வூரார் பசுநிரைகளுடன் கூடிச் செல்லுகையில்ஓரீற்றுப் பசுவொன்று அதனை மேய்ப்பானைக் குத்தப்போகஅவ்வாயன் சிறிதும் அஞ்சாமற் கோலினால் அதனை நன்றாய்ப்புடைத்தான். அதுகண்ட விசாரசருமர் சாஸ்திரங்களிற் கூறிய விஷயங்களை ஐயம்- திரிபு- அறியாமையாகிய முக்குற்றங்களு நீங்கத்தெளிந்தோராதலின் மனம் பொறாராகி அவ்விடையன் பாற்சென்று பசுக்கள் சமஸ்ததேவர்களும் முநிவர்களும் கணங்களும் பிரியாது சூழ்ந்திருக்கும் உறுப்புக்களை யுடையனவென்றும்சிவபெருமானுக்குத் திருமஞ்சனத்திற்குரிய பஞ்சகவ்வியங்களைக் கொடுப்பவையென்றும்சிவசாதனமா கிய திருவெண்ணீற்றுக்கு மூலம் அவற்றின் சாணமென்றுங்கூறி அப்பசுக்களைத் தாமே மேய்க்க விரும்பிஅவ்வாயனை நோக்கி நீயிப்பசுநிரையை இனி மேய்க்க வேண்டாம்யானே மேய்ப்பேன்'' என்றார். ஆயன் அஞ்சி வணங்கிச்செல்லவிசாரசருமர் அவ்வப்பசுக்களை உரியா ரநுமதிபெற்றுசமீபத்திலுள்ள மன்னியா ற்றங்கரையிலும் நிறைவாகிய புல்லுள்ள விடங்களிலும் மேய்த்துநீர்காட்டிவெயில்வேளையில் நிழலிலிருக்கச்செய்துஅருணன் அஸ்தமனமாகுமுன் அவரவர்

வீட்டிற்கனுப்பித் தம் வீடு சேருவர். இதனால் பசுக்கள் அழகோடு பெருகி மிகுதியாகப் பால் பொழிந்தன. பசுக்கட்குரியார் முன்னிலும் அதிகங் கறத்தல் கண்டு களித்தனர். அவை விசாரசருமரைச் சிறிதேனும் பிரியமாட்டாதனவாயும் அவரைக் கண்டவுடன் மடி சுரந்து பால் பொழிவனவாயு மிருந்தன.

அப்பசும்பால்சிவபெருமானுக்குத் திருமஞ்சனமாகுந் தகுதியுடைமையைக் கருதிஅப்பெரியார்க்குச் சிவார்ச்சனையில் அத்தியந்த ஆசை தலைப்பட்டது. உடனே மண்ணியாற்றங் கரையிலுள்ள ஓர் மணற்றிட்டையில் ஆத்திமரத்தின் கீழ் மணலினாலோர் சிவலிங்க நியமித்துகோயில் - கோபுரம் - மதில் முதலியவை வகுத்துபலவகைப் பத்திரபுட்பங்களைக் கொய்து சிவார்ச்சனை செய்துபுதுக் குடங்களைக் கொண்டுபோய்ப் பசுக்கள் மடியைத் தீண்ட அவைகனைத்துப்பால் பொழியும்அதனை யபிடேகஞ்செய்வார்தனக்குக் கிடையாத பூஜாவுபகரணங்களை மாநஸீகமாகச் செய்து முடிப்பார்இப்பூசையைப் பெருமான் அவ்விலிங்கத்தினின் றன்போ டங்கிகரிப்பர்பசுக்கள் இதனால் குறையாமல் முன்போலவே வீட்டுக்கும் பால் கொடுத்து வந்தன. இதனைப்போலவே விசாரசருமர் நெடு நாள் சிவார்ச்சனை செய்து வருகையில் ஒருவன் பார்த்து ஊராருடன் சொல்ல. அவர்கள் சபையாருக் கறிவிக்கசபையார் யஜ்ஞதத்தனை வருவித்து "உன் பிள்ளை பாலைக் கறந்து வீணேமணலிற் சொரிந்து விளையாடுகின்றானாம்'' எனயஜ்ஞதத்தன் "நான் அறியேன்இனி அவ்வாறு நடந்தால் அக்குற்றம் எனதே" என்று வீடு சென்றுமறு நாள் உதயத்திலதைச் சோதிக்கவெண்ணிவிசாரசருமர் பசு மேய்க்கச் செல்லுகையில்அவன் அவர் அறியாமல் பின்றொடர்ந்து சென்றுஅவர் மண்ணியாற்றின் மணற்றிட்டிற் போனதுகண்டு அருகிருந்த குராமரத்திலேறி யொளித்திருந்தான்.

விசாரசருமர் வழக்கம்போல ஸ்நானஞ்செய்துசிவலிங்கமுதலியன வகுத்துதிருப்பள்ளித் தாமஞ்சேகரித்துவைத்து பசுக்களிடங்குடங்கொண்டு சென்றுஅவைசொரிந்த பாலைக்குடத்தோடு வைத்துசிவார்ச்சனை முடித்துபாற்குடங்களை யபிடேகஞ் செய்தனர். குராமரத்திலிருந்த யஜ்ஞதத்தன் அதுகண்டிறங்கி விறைந்தோடிவந்து பலகொடுஞ்சொற்கள் கூறி விசாரசருமர் முதுகிலடித்தனன். அவர் மனம் சிவார்ச்சனையி லழுந்தியிருந்ததால் அவருக்குப் புலப்படவில்லை. யஜ்ஞதத்தன் தான் பலமுறையடித்தும் அவருணராமை சிவார்ச்சனை யா லென்றறியானாகிமிகக்கோபித்துப் பாற்குடங்களைக் காலாலிடரிச்சிந்தஉடனே விசாரசருமர் அது கண்டு செய்தவன் பிதா – குரு - பிராமணன் என்பதறிந்தும்அவன் செய்தது சிவபராதமாதலின்அவன் காலைத் துணிக்கக்கருதி அருகிருந்த ஓர் கோலையெடுக்க. அது மழுவாகஅதனாற் கால்களை வெட்டிச் சிவபூசையின் சேடத்தையுமுடித்தனர் சிவபெருமான் இடபாரூடராய் உமாதேவியுடன் தோன்றினர். விசாரசருமர் பேராநந்தமுட்டதும்பி இருவிழிவழியாய் ஆநந்த நீரருவிவார்தர மெய்ம் மறந்து பணிந்தனர். பெருமான் திருக்கரங்களாலெடுத்து ''நம்முடைய தொண்டர்களுக்கெல்லாம் உன்னைத் தலைவனாக்கி நாம் ஏற்றுக்கொண்ட அமுதும் பரிவட்டமும் புஷ்பமும் உனக்கே தந்

தோம்'' என்று தமது சடையிலணிந்திருந்த கொன்றைமாலையை அவருக்குச்சூட்டிச் சண்டேசுர பதவிதந்தருளினர். அவரால் தண்டிக்கப்பட்ட யஜ்ஞதத்தனும் சிவபதமடைந்தனன்.

விசாரசருமருக்குச் சண்டேசுர பதவியை அநுக்ரஹித்த அவசரமே சண்டேசா நுக்ரஹ மூர்த்தமெனச் சாற்றப்படும்.

 

திருத்தொண்டர் புராணம்.

 

"தொடுத்த விதழிசூழ் சடையார்துணைத்தா ணிழற்கீழ் விழுந்தவரை

யெடுத்து நோக்கி நம்பொருட்டா லீன்ற தாதை விழவெறிந்தா

யடுத்ததாதை யினியுனக்கு நாமென்றருள் செய்தணைத்தருளி

மடுத்தகருணை யாற்ற விழுயுச்சி மோந்து மகிழ்ந்தருள.

 

அண்டர்பிரானுந் தொண்டர் தமக்கதிபனாக்கி யணைத்துநா

முண்டகலமு முடுப்பனவுஞ் சூடுவனவு முனக்காகச்

சண்டேசனு மாம்பதந்தந்தோ மென்றங்கவர் பொற்றடமுடிக்குத்

துண்டமதிசேர் சடைக்கொன்றை மாலைவாங்கிச் சூட்டினார்.

 

சண்டேசாநுக்ரஹமூர்த்தயே நம:

 

சிவபராக்கிரமம் 64 சிவ மூர்த்தங்கள்

Related Content

The History of Chandesha Nayanar

சண்டேசுர நாயனார் புராணம்

திருமுறைகளில் சண்டேசுர நாயனார் பற்றிய குறிப்புகள்