logo

|

Home >

sivaprakramam-64-forms-of-lord-shiva >

sivaparakramam-maha-sadashiva-murthi

மஹாசதாசிவ மூர்த்தி

மஹாசதாசிவ மூர்த்தி
மஹாசதாசிவ மூர்த்தி
  • உமாஸஹாயம் பரமேஶ்வரம் ப்ரபும்த்ரிலோசனம் நீலகண்டம் ப்ரஶாந்தம் த்யாத்வா முநிர்கச் சதிபூதயோநிம் ஸமஸ்தஸாக்ஷிம் தமஸ:பரஸ்தாத்'' என்னுங் கைவல்யோபநிஷதத்தாலும் ''நாஸாதா ஸீந்துஸ ஏவாஸீத் தமஆஸீத்” என்னுஞ் சுருதிப்பிரமாணத்தாலும் பிரதிபாதிக்கப்பட்டும், படகாரியத்துக்குக் குவிந்தன்போல நிமித்த காரணமான எந்த நிஷ்கள சோதியினால் ஜங்கம ஸ்தாவர ரூபமான சராசரங்களனைத்தும் எக்காலத்தும் ஓதப் புரோ தரூபமாய் மேல் கீழாகச் சிருட்டிக்கப்பட் டிருக்கின்றனவோ, விஞ்ஞானகல பிரளயாகல சகலராகிய மூவகைப் பட்ட ஆன்மாக்களும், மல மாயை கன்மம் விந்து திரோதானசத்தி யென்னும் ஐவகைப் பாசசமூகத்தினின்று நீங்குகின்றனரோ, அத்தகைய பிரணவபிரசாத மந்திரோச்சாரண த்வநிகதமாயும், அநாஹதசிவ சதாசிவ மஹேஶ்வர ருத்ர விஷ்ணு பிரமாதிகளுக்குக் தேஜஸைக்கொடுப்பதாயும், வியாபிநிக்கு மேற்பட்ட வியோம வென்னுஞ் சமனை யிடத்தை வியாபித்த அநாஹதசிவத்திற்கு மேலானதாய்ப் பரிபூரணமாய் நிஷ்களமாய் எழுந்தருளிய ஸ்ரீசிவபெருமான், இச்சையாற் சத்திகாரியத் திருவுருக் கொண்டு ஆன்மாக்களை யநுக்கிரகிக்கவெடுத்த உமாமகேச முதலிய திருவுருவங்களை யதிஷ்டித்த ஸதாசிவனாயினார்; 
  • நிவர்த்தி – பிரதிஷ்டை – வித்தை - சாந்தி - சாந்தியத்தை முதலிய அபரவிந்து கலைகளானும், இந்திகை - தீபிகை - ரோசிகை - மோசிகை – ஊர்த்துவகாமிநி யென்னும் அபரநாத கலைகளானும், சூக்குமை – அதிசூக்குமை – மிருதை – அமிருதை – வியாபிநி  யென்னும் பரவிந்து கலைகளானும், வியாபிநி - வியோமரூபை - அநந்தை - அநாதை - அநாசிருதை யென்னும் பரநாத கலாபேதத்தாலும், இருபத்தைந்து திருமுகத்துடன் கூடிப் பரசிவாபேக்ஷையுற்ற திருவுருவமே மஹாஸதாஸிவம்.
  • இச் சதாசிவம் பரசிவ மிரண்டும் தர்மாதர்மி ஸ்வரூபமாதலால், ஸதாஶிவம் பரசிவமூர்த்தியாகவும், பரசிவம் ஸதாஶிவ அந்தர்யாமியாகவுஞ் சிவாகமங்கள் கூறும். அச்சதாஶிவ பரசிவமிரண்டுஞ் சேர்ந்தது பாவாகார மென்பர்.
  • இன்னு மிவற்றின் விரிவெல்லா மெழுதப்புகின், சாஸ்திர சங்கேதமாதலின், அச்சாஸ்திரமுதிர்ச்சி யுடையோர்க்கன்றி ஏனையோர்க்குப் பயனுண்டாகாதது கருதி இவ்வகை நிறுத்தினன். இதன் வித்தாரம் காமிகாதி சிவாகமப் பெருங்கடலுட் காண்க.
  • மேற்கூறிய இலக்கணமேயன்றி, இப்பெருமான் கணக்கிட்டுரைத்தற்கேலாத கரம் சிர முதலிய திருவுறுப்புக்களோடு கலந்த திருமேனியை யுடையராகவுமிருப்பர் எனவுங் கொள்க.

 

திருவிசைப்பா.

"எண்ணில்பல் கோடி சேவடிமுடிக ளெண்ணில்பல் கோடி திண் டோள்க,  
ளெண்ணில்பல் கோடி திருவுரு நாம மேர்கொண்முக்கண்முக மியல்பு,  
மெண்ணில்பல் கோடி யெல்லைக்கப் பாலாய் நின்றைஞ்னூற் றந்தண ரேத்து,  
மெண்ணில்பல் கோடி குணத்தரேர்வீழி யிவர் நம்மை யாளுடையாரே."

மஹாஸதாஶிவாய நம: 

 

சிவபராக்கிரமம் 64 சிவ மூர்த்தங்கள்
 

Related Content

ஸதாசிவமூர்த்தி