logo

|

Home >

sivaprakramam-64-forms-of-lord-shiva >

sivaparakramam-raktha-bhiksha-pradhana-murthi

ரக்தபிக்ஷாப்ரதாந மூர்த்தி

ரக்தபிக்ஷாப்ரதாந மூர்த்தி
ரக்தபிக்ஷாப்ரதாந மூர்த்தி

சிவபிரானை யிகழ்ந்து சிரித்த பிரமனது, நடுத்தலைகிள்ளியவைரவக்கடவுள் சிவாக்கினைப்படி உதிரப்பலியேற்க, அப்பெருமானால் அநுக்கிரகிக்கப்பட்ட காலவே கன் கனன்முகன் சோமகன் ஆலகாலன் அதிபலன் ஆகிய கணத்தலைவருடன் சிறந்த தவசிகள் வசிக்கும் வனங்களுந் தவச்சாலைகளுமடைந்து, அவர்களைச் சூலப்படையாற்குத்திச் சோரிநீரைக்கபாலத்தேற்று, உம்பருலகடைந்து அவ்வாறே உதிரமேற்று அவர்களுள் உயிர்துறந்தாரையுடனே யெழுப்பி அகந்தையொழித்து உலகமெங்குஞ் சஞ்சரித்து மாயகன்வாழும் வைகுந்தநகர மடைந்தனர்.

அவருடன் கூடிவந்த கணநாதர்கள் கொக்கரித்துக் கூச்சலிட்டு முன்செல்ல, விண்டுவின் சாரூபமுற்றுத் தண்டு கோதண்டம் சங்குகட்கம் சக்கரங்கொண்டு விடுவசேனனென்னும் பெயருடைய முதற்காவலாளன் வைரவப்பெருமானது பிரதாபத்தையறியாமல் சாமாந்யமாகக்கருதி முன்வந்துதடுத்து, எம்பிரான் கணத்துட
னெதிர்த்துச் செருச்செய, வைரவர் விசையுடன் சூலநுதியில் விடுவசேனனைக் குத்தித் தோள்மேற்சாய்ந்து, பூமகள் நிலமகள் இருபுறம் பொருந்த, பல தலையுடைய பன்னக சயனத்திற் படுத்துத் திருக்கண்வளருஞ் சீதரன்முன் சிவகணங்களோடணுக, திருமால் இருமாதருடன் துண்ணென்றெழுந்து மண்மிசைவிழுந்து மலரடி வணங்கி "எம்பெருமான் ஈண்டுற்றதென்?'' என வினாவ, வைரவப்பெருமான் ''பலிக்குவந்தோம்; சிரத்திலிருந் திழியுஞ்செச்சீரைச் சீக்கிரந்தருக” என்றனர்.

நாரணன் நன்றென்றிசைந்து தன் நகத்தினால் நெற்றியிலுள்ள நரம்பொன்றை ப் பிளந்து பரமன் கபாலத்திற் சோரி சொரியும்படிவிட, அதினின்றும் உதிரப்பெருக்கு ஓர் ஆயிரவருடமொழுக, மால் மயக்குற்றனன். கபாலத்திற்பாதியும் நிரம்பிய தில்லை. சீதரன் சோர்ந்ததால் மாதர்கள் வைரவரை வணங்கிநிற்க, "மாதர்களே! அஞ்சல்" என்றருளி வாசுதேவனைச் சுவாசமுற்றெழத் திருவுள்ளஞ் செய்து, "ஈங்கிருத்தி" என விடுத்துத் திரும்புகையில், விண்டு "பண்டுபோல விஷ்வக்சேனனைத் தலைவாயில்காக்கத் தயை செய்ய வேண்டும்'' என்று பிரார்த்திக்க, காரி சூலநுதியி லிருந்த விடுவசேனனையிறக்கி யுயிரளித்து விடுத்துப் பின்னுமுள்ள தேவர் முநிவர் செருக்கையொழித்துச் சேனாசமுத்திரஞ்சூழ அண்டங்கடோறுஞ் சென்றனர். இவர் ஸர்வஸம்ஹாரகாலமாகிய யுகாந்தங்கடோறும், வேதமேசுவாநமாகவர அதன்மீதேறி அகமகிழ்ந்துலவுவர். இவ்வாறு தேவர் முதலானாரது உதிரத்தைப் பலியேற்றது, அவர்கள் இறுமாப்பொழிக்கவேயன்றிப் பிறிதொரு காரணத்திற்கு மன்று.

இறுமாப்புற்ற இமையவர்பால் இரத்தத்தைப் பலியேற்று அவர்கள் அகந்தையை அடக்கிவைத்தமையாற் சிவபிரானுக்கு ரக்தபிக்ஷாப்ரதாநமூர்த்தியென வோர்பெயர் விளங்குகின்றது.

ப்ரஹ்மாண்டபுராணம்.

அவிஜ்ஞாயபர0தாம திவ்யதத்பாரமேஶ்வரம்
நிவாரயத்ரிஶூலாங்க0 த்வாரபாலோமஹாபல? | இத்யாதி
நிர்பித்யபாதயாமாஸஶூலேநோரஸிதம்புவி
தத்யாஜஜீவிதம்த்ருஷ்ட்வா ம்ருத்யுவ்யா திஹதோயதா.

ஶிவரஹஸ்யம்.

மஹதர்தேநதேவோஸ்மி மாஹத்ம்யேநவிமோஹிதா:
மா0நஜாந0திதாதார0கர்வக்ரஸ்தாஸ்ஸுராஸுரா:
ப்ரஹ்மவிஷ்ணுமஹேந்தத்ராத்யா ஸ்தாநஹ0லீலயாமுஹு-3
ரக்தபிக்ஷாடநவ்யாஜாத்வீதகர்வாந்விதாயச.

ப்ரஹ்மாண்ட புராணம்.

தேவநா0தாநவாநாஞ்ச ததாந்யேஷாஞ்சமாத்யதாம்
ரக்தபிக்ஷாச்சலேவை கர்வகண்டூம்ஹராம்யஹம்
இதிநிஶ்சித்யவிஶ்வாத்மா சசாரபுவநத்ரயம் - இத்யாதி
ஜகாமவிஷ்ணோர்பவந0 யத்தாஸ்தேமதுஶூதந- இத்யாதி
ந்யவாரயத்த்ரிஶூலாங்க0த்வாரபாலோமஹாபல: - இத்யாதி
விஷ்வக்ஸேநஇதிக்யாதோ விஷ்ணோரம்ஸஶமுத்யவ:
ஶூலேநோரஶிநிர்பித்ய பாதயாமாஸதம்புவி
விவேஶஶூலேநாதாய தத்களேபரமீஶ்வ்ர:- இத்யாதி
திவ்யவர்ஷஸஹஸ்ரந்து கபாலேபைரவஸ்யது
தயாபத0த்யாவிப்ரேந்த்ர தாரயாபரமேஷ்டிந:
கபாலஸ்யவிஶாலஸ்ய நார்தமப்யபிபூரிதம்
ரக்தஸ்யவிரஹாத்விஷ்ணு: பபாதபுவிமோஹிதா.

கந்தபுராணச்சுருக்கம்.

“உன்றலைப்படுசோரிநீரையு குத்தியென்னநகத்தினாற்
றன்றனெற்றிபிளந்துசோரி தனைப்பொழிந்திடநம்பிரான்
வென்றிசேரயனார்பெருஞ்சிர மீதிறேனனூறுநூ
றென்றுகூறிடுமாண்டுசெல்ல விளைத்துமாயன்விழுந்தனன்.”

ரக்தபிக்ஷாப்ரதாநமூர்த்தயே நம:
 

சிவபராக்கிரமம் 64 சிவ மூர்த்தங்கள்                         
 

Related Content

புராணம் - மண்டையோட்டை ஏந்தியது (பைரவர்)

பைரவ மூர்த்தி

ஆபதோத்தாரண மூர்த்தி

வடுக மூர்த்தி

க்ஷேத்திரபாலக மூர்த்தி