logo

|

Home >

sivaprakramam-64-forms-of-lord-shiva >

sivaparakramam-agorasthira-murthi

அகோராஸ்த்ர மூர்த்தி

அகோராஸ்த்ர மூர்த்தி
அகோராஸ்த்ர மூர்த்தி

சிவப்பிரசாதத்தாற் பல போக பாக்கியங்களையும் பெற்றுத் தனக்கொருவரு நிகரில்லாது தருக்குற்ற சத்ததந்து என்போன் செல்வச்செருக்கால், தான் அத்தகைய பேற்றினை யடைந்ததற்குக் காரணம் சிவார்ச்சனையென்பதை மறந்து மதிமயங்கி (தக்ஷப்பிரசாபதியைப்போலவே) தானோர் வேள்வி செய்ய வேட்கையுற்றவனாய், வானவர் இருடியர் முதலானாரை வரவேண்டுமெனவிளித்து, மேரு மலைச்சாரலில் ஓர் யாகஞ்செய்ய எத்தனித்து, பிரமதேவனைப்பார்த்து ''நீ யாகஞ்செய்விக்க" என்றனன், அருகிருந்த திருமால் வெருண்டு "முக்கண்ணான் சேவடியில் விழிமுளரி பெய்தன்றோ - சக்கரமு மலர்த்திருவுந் தணப்பருஞ்செல் வமுமடைந்தேன் - அக்கடவுளருள் சிறிது மடையாரேற் றம்பதத்தி - லெக்கடவுடேலென்றாங் கேமாப்புற்றிருக்குமால்'' என்றும், பிரமதேவன் "யாக புருஷனாகிய சிவபெருமான் எழுந்தருளியிராத யாகம் இடையூறு படுமே யன்றி ஒருகாலும் நிறைவேறாது'' என்றும், இந்திரன் முதலிய இமையவர் குழாமும் எஞ்சிய முனிவர்களும் "இஃதடாது; ஈசனையன்றி யாகஞ்செய்தல் நிஷ்பலம்'' எனவுங்கூறித் தடை செய்தனர்.

அவ்வாறு அமரரும் முநிவரும் சாற்றக்கேட்ட சத்ததந்து சாலவுங் கோபமுற்று, பற்களைக்கடித்து மீசை துடிக்கக் கண்களில் நெருப்புப்பொறிகள் கக்கினன். கமலாசனன் இனி இவனால் யாது தீங்கெய்துமோவென்று மனத்திலுன்னி, ஒன்றுக் கூறமாட்டாமல் உடன்பட்டு, சங்கரரைநீங்கிய சகலதேவர்களையும் பல முநிவரையும் . உடன் கொண்டு யாகஞ்செயத் தொடங்கினன். இஃதிவ்வாறிருக்கை யில், த்ரிலோக சஞ்சாரியாகிய நாரதமுறிவர் சத்ததத்து செய்யும் யாகச் செயலையறிந்து விரைந்து நடந்து வெள்ளியங்கிரியையடைந்து, திருநந்தி தேவர்பால்விடைபெற்றுத் திருச்சந்நிதானமுற்று, சிவபிரானைப் பலமுறைபணிந்து கை கூப்பி, தயாநிதிகளிக்கும்படி தனது மகதியாழையெடுத்து, சாமகீதம்பாடினர். சிவபிரான் ''நாரத முனிவரே! யாது விஷயம்?'' என ஒன்று மறியார் போன்று வினாவ, நாரதர் ''சர்வஜகத் சுதந்தரமுற்ற சம்புவே! தேவரீரையின்றிச் சத்ததந்து செய்கின்ற யாகத்தையழித்தல்வேண்டும்” என்று விண்ணப்பித்து, சிவாநுக்ஞைபெற்றுத் தமது விருப்பின்படி சென்றனர்.

சிவபெருமான் மண்டலத்தைத் தேராகவும், உலகத்தைச் சக்கிரமாகவும், அக்கினிபகவானை வில்லாகவும், சந்திரனை நாணாகவும், வருணனைப் பாணமாகவுமமைத்து, குமாரக்கடவுளைத் தேர்ச்சாரதியாக நியமித்து, யுத்தக்கருவிகளைச் சித்தஞ்செய்து, அருகிருந்த வீரபத்ரரைசோக்கி ''நீ அக்கொடியோனையும் அவன்யாகத்தையும் அழித்து வருக" என்று ஆஜ்ஞைசெய்ய வீரபத்திரர் அகோரரூபமுற்று அளவில்லாப் பூதசேனைகள் புடைசூழ்ந்துவர முருகப்
பெருமான் இரதாரூடராய்த் தேரைச்செலுத்த மேருமலைச் சாரலையடைந்தனர். அது சங்க தியறிந்த இந்திரன் – பதுமன் – பஞ்சாயுதன் முதலானோர் பதைபதைத்து நாற்பக்கங்களிலும் ஓடத்தலைப்பட்டனர். பெருமான் கணங்கள் கணக்கில்லாத தேவர் முநிவர் முதலானாரை முடித்து. இந்திரன் பிரமன் முதலிய இமையவர்களையுஞ் சந்திர சூரியரையும்பற்றிக்கொணர்ந்து முன்னிறுத்த, அவர்களைத் தமது திருவுள்ளத்திற் கியைத்தவண்ணந் தண்டஞ் செய்து, கையிலேந் திய வருணாஸ்திரத்தைப் பிரயோகித்து அந்தயாகத்தை யழித்தனர். சத்ததந்து சாலவுஞ்சினந்து சமர்க்கோலமுற் றெதிர்வர, அவனை அகோராஸ்திரமொன்றினால் ஹதஞ்செய்தனர். முநிவர் வெருண்டோடினர். இறந்த இமையவர் மனைவிமார் "எம்பிரானே சரணம்; எங்கட்கு மாங்கல்யப்பிச்சையருள்க” எனப் பிரார்த்தித்தனர். பெருமான் கருணை கூர்ந்து திருவுள்ளமிரங்கினர். அதனால் அவர்கள் அவ்வாறே உயிர்ப்பெய்திச் சாஷ்டாங்கமாகப்பணிந்து தத்தம் பதவிசார்ந்து வாழ்ந்தனர். ஏனைய தேவர்களையுஞ் செல்ல விடுத்து, தமது சேனாவெள்ளத்துடன் வீரபத்ரர் திருக்கயிலையை யடைந்து சிவபிரானிடம் விண்ணப்பித்து வீற்றிருந்தனர்.

அகோராஸ்த்ரமொன்றினாற் சத்ததந்துவைச்சங்கரித்து அவன் மகத்தையுஞ் சாய்த்தமையால், பெருமான் அகோராஸ்த்ரமூர்த்தி யெனப் பெயரடைந்தனர்.

“தக்கனைப்போ லோர்வேள்வி தான்செய்யத் தேவரெல்லா
மிக்கவலி யுண்ணவந்த வேலையின்கண் - அக்கணமே
விண்டலமே தேராக மேதினியே வண்டியெனக்
கொண்டிழுக்கும் வாயு குரகதமாய் - மண்டு
மணலே சிலையாக வம்புலியே நாணாப்
புனலே யடுசரமாப் பூட்டிச் - சினவடிவேற்
சேனா பதிதானே தேர்கடவிச் செல்லவெதிர்
வானோர்கள் கண்டு மருண்டோட - வானாத
விந்திரனை மாலயனை யீராறு சூரியரைச்
சந்திரனை மாதவரைத் தாக்கியே - வெந்திறல்சே
ரந்த மகமு மடந்து வருஞ்சத்த
தந்துவையு மாய்த்த தகை போற்றி''- என்றார் பிறரும்.

அகோராஸ்த்ரமூர்த்தயே நம:
 

சிவபராக்கிரமம் 64 சிவ மூர்த்தங்கள்         
 

Related Content

Narration of the Beauty

Shula vrata

வீரபத்ரமூர்த்தி

தக்ஷயஜ்ஞஹத மூர்த்தி