logo

|

Home >

sivaprakramam-64-forms-of-lord-shiva >

sivaparakramam-ekapada-murthi

ஏகபாத மூர்த்தி

ஏகபாத மூர்த்தி
ஏகபாத மூர்த்தி

கண் முதலிய உறுப்புகளின்றி, கருத்தினுக்கெட்டாதாகி வண்ணமுங்குணமு மின்றி மாறிலாப்பொருளாய் ஆதிமத்தியாந்த ரகிதமாய்ச்சுயஞ்சோதியாய்ச் சர்வான் மாக்களும் தோன்றி லயிக்குமிடமாயுள்ள சாக்ஷாத் சிவபெருமான் ஆன்மாக்கள் ஆணவகேவலத்திலழுந்தித் தம்மையறியாது கிடப்பதை யறிந்து சத்தியை க்ஷோபி த்து ஞானத்தை யுதிப்பித்து, அவ்வான்மாக்கள் ஆணவாதி மலபந்தங்கள் நீங்கித் திருவடியையடையத் திருவுள்ளங்கொண்டு சிருட்டியாதியைக்கருதி, மீண்டும் படைத்தும், அவற்றைக் காத்தும், சங்கரித்தும், திரோபவித்தும், அநுக்கிரகித்தும் வராநிற்பர்.

சர்வசம்ஹாரகாலத்திற் சத்தியில் அனைத்துயிரும் ஒடுங்க, அக்காருண்ய சத்தியார் தம்மிடத்தொடுங்க, சிவபிரான் ஒருவரே அழியாதிருந்தருளுவர்; எனவே வேதசிவாகமபுராணாதிகள் ப்ரதிபாதிக்கும். இவரே சர்வகாருண்யராகிய பகவான்; அணிமாதி அஷ்டசித்திக்கும் முதற்காரணர்; பிரணவவாச்சியர்; பர்க்கபகவத் சப்தவாச்சியர்; இவரே தனிப்பொருளாய் நிற்பவர். இவற்றைப் பின்வரும் உபநிடதாதி மஹாவாக்கியங்கள் வெளிப்படுத்தும்.

ஶ்ருதி வாக்கியங்கள்.

ஈஶாநஸ்ஸஏகோருத்ர: || ஶிவஏவகேவல: || ஏகஏவருத்ரோ நத்விதிய்யாயத ஸ்தே || த்யாவாபூமிஜயநந்தேவஎக: || ஸஶிவஏகோதேவ: || தமேகம்புருஷம்ருத்ரம்: || யஏகோருத்ரஉச்யதே || ஏகமே வாத்விதிய்யம்ப்ரஹ்ம || ஸர்வேவைருத்ர: ||   விஶ்வாதி கோருத்ரோ மஹருஷி: || ய:பரஸ்ஸமஹேஶ்வர: ||

இத்யாதிப் பிரமாணங்களால், பகவானாகவுள்ள சிவமூர்த்தியே தனித்து நிற்பவரெனவும், எஞ்சிய இமையவர்கட்கு முதல்வரெனவும் பெறப்பட்டது. இனி பகவத் சப்தவாச்சிய ரென்பதற்குப் பிரமாணங் கூறுவாம். பகவானென்பது அறுகுணச் செல்வனெனப்பொருளாகும்.

அவையாவன.

“ஐஶ்வர்யஸ்யமுக்ரஸ்ய வீர்யஸ்யயஶஸ:ஶ்ரிய: - ஜ்ஞாநவை ராக்யயோஸ் சைவஷண்ணாம்பக இதீரித:” - இத்தகைய அறுகுணங்களும் சிவபெருமானுக்குள்ள வை. எவ்வாறெனின், ஶ்வேதாஶ்வதரோபநிஷத்து "தமீஶ்வராணாம் – பரமம்மஹேஶ்வரம்'' என்றும், "ஸர்வஸ்யப்ரபுமீஶாநம்'' என்றும், தைத்ரீயகம் "யபரஸ்ஸமஹேஶ்பஸ்வர:” என்றும், அதர்வஶிரஸு "ஸர்வைஶ்வர்யஸம்பந்ந: ஶ0பு:'' என்றும், ஸௌப்திகபர்வத்தில், கண்ணன் வாக்கியம்" நூநம்ஸதேவம் தேவாநா0 ஈஶ்வஶ்ரேவரமவ்யயம்.'' என்றும் போந்த பிரமாணங்களால், எல்லாமுடைமைக் குணமுடையான் சிவபிரானென்பதும், இப்பகவானை யுபாசித்தே மற்றத்தேவர்கள் ஐசுவரியாதி சம்பத்துகளைப் பெற்றார்களென்பதும் விளங்குகின்றன.

இனிவீர்யன் என்பதற்கு , ஸ்ருதி "ம்ருகந்நபீமமுபஹத்துமுக்கரம்" என்று கூறிய உக்ரசப்தத்தால் வீர்யனெனப் பெறப்பட்டது. பாகவதம் சதுர்த்தஸ்கந்தம் பிரமன் வாக்கியம் "நாஹம்நயஜ்ஞாநசயஸ்யயூயம் -தேதேஜோவாஜாமுநயஸ்ச ஸத்வம் – விது:ப்ரமாணம்பலவீர்யயோர்வா – தஸ்யாத்தமந்த்ரஶ்சந உச்பிதித்ஸேத்'' என்றும், ஶருதி ''நஸந்நசாஸந்ஶிவ ஏவகேவல:” என்றும், காட்டிய பிரமாணங்களால் யஶோகுணமுடைமை நிரூபிக்கப்பட்டது. "அதவாசேஷகல்யாண குணைககன ஈஶ்வர: ஶிவஇத்யுச்யதேஸத்பி: ஶிவதத்வார்த வேதிபி:" என்றும், இராமாயணம் "ஶ் ரீமத: ஶிதிகண்டஸ்யகீர்திர்ஹிதுரதிக்ரமா" என்றும், ருக்வேதம் “ஶ்ரேஷ்டஜாதஸ்ய ருத்ரஸ் யஶ்ரியா ஶிதபஸ்ந மஸ்தபா0 வஜ்ரபாஹோ'' என்றும், விளக்கிய பிரமாணங்களால் ஐசுவர்யமுடைமையும் யஶோ குணமுடைமையும் அநந்தகல்யாண குணமுடைமையு நாட்டப்பட்டன. ஶ்வேதாஶ்வதரோபநிஷத்து “ஏநாவ்ருதம்ஸத்யமிதம்ஸர்வஜ்ஞ: காலகாலோகுணீஸர்வவித்யய:'' என்பதாற் செல்வமுடைமையும் ஞானவைராக்கிய முடைமையுஞ்சாற்றப்பட்டன. பின்னும் கூர்மபுராணம் ''யஸ்துயோகம்ததாமோக்ஷ மிச்சேதஜ்ஞாநமுத்தமம் ஸோர்த யேத்வை விரூபாக்ஷம்'' என்றும், ஸ்மிருதி "ஈஶ்வராதாத்ஜாநமீப்சேத்'' என்றும் காமாரி சப்தம் வைராக்யகுணத்தைக் கூறிற்று. பாகவதம் அஷ்டமஸ்கந்தம் "விரக்தஸ்த்வத்ருதேபுமாந்" என்றும் இவ்வாறு ஷாட்குண்ய ஸம்பத்தியும் சிவபிரானிடத்தே அநந்ய சாதாரணமாயுள்ளன.

அன்றியும் மந்த்ரோபநிஷத்து ''தர்மாவஹம் பாப நரம்பகேUTO” என்றும், வேறோர் மந்த்ரம் "ஸர்வாநநஶிரோக்ரீவ: ஸர்வபூதகுஹாஶய: ஸர்வவ்யாபீஸ பகவாந் தஸ்மாத்ஸர்வகத:ஶிவ:” என்றும் பகவத் ஸப்தவாச்சியம் நிர்த்தேசிக்கப் பட்டது. இனிச்சிவபிரானே பிராணவாச்சியரென்பதை விளக்குவாம். ஶ்ருதி “யோவா தாதௌஸ்வ ரஃப்ரோக்த:'' என்று பிரணவ சப்தவாச்சியத்துவம் மஹேஶ்வரைக நிஷ்டமாய்த்தெரிவித்தது. பின்னும் ஶ்ருதி ''ப்ரம்மாஶிவோமே அஸ்துஸதாஶிவோம்” என்றும், லிங்கபுராணம் ப்ரணவோவா வாசகஸ்தஸ்ய ஶிவஸ்யபரமாத்மந:" என்றும், ஆதித்தபுராணம் ''வாசக:- ப்ரணவோயஜ்ஞாந மூர்த்தேருமாபதே:" என்றும், கடவல்லீமாண்டூக்யாதர்வஶிர: ஶிகைப்ரஶ்நோபநிஷத் முதலியவற்றுள்ளும், பிரணவம் ஶிவைக்வாசங்களாகவே பிரதிபாதிக்கப்பட்டது.

இனி வேதங்களாற் கூறப்படும் பர்க்காதிசப்தப் பொருளாவார் சங்கரர் என்பதற்கு ஆதித்யபுராணம் ''பர்கோவிஶ்வஸ்யபரணாத்விஶ்வயோநிருமாபதி: தஶ்யஞாநமயிஶக்திபார்யாசகிரிஜாஶிவா'' என்று கூறிய ஏதுக்களால், சிவபெருமான் ஒருவரே மற்றத்தேவர்களுக்கு அருள்புரிந்து முதலிலும் கடையிலும் தனித்துநிற்பர் என்பது பெறப்பட்டது.

இத்யாதிபிரமாணங்களாற்போந்த பரமபதியாகிய சிவபெருமான் சர்வ ஸம்ஹார காலத்தில், யாவரும் லயமடைய எல்லாவுலகும் தமது திருவடியிற் பொருந்த நிற்பதால் ஏகபாதமூர்த்தியென்று சுருதியாதிகளாற் பிரதிபாதிக்கப்பட்டனர்.

இலிங்கபுராணம்.

''வெய்யதிரி சூலம்விழை வோடினிதி னேந்துங்
கைகளொரு நான்குமலர் கண்களொரு மூன்றுஞ்
செய்யமலர் வென்றவொரு தாளுமுறு தேவை
பொய்யென வமைத்தவர்கள் முத்தியுறு வாரே."

ஏகபாதமூர்த்தயே நம:
 

சிவபராக்கிரமம் 64 சிவ மூர்த்தங்கள்                  
 

Related Content

ஏகபாத த்ரி மூர்த்தி

த்ரிபாதத்ரி மூர்த்தி