திருமால் முன்னொருகாலத்திற் சிவபிரானை நோக்கிக் கடுந்தவஞ்செய்தனர். அரவாபரணர் அச்சுதன் செய்யும் அருந்தவத்திற்கு அகமகிழ்ந்து அவருக்குப் பிரசன்னமாய் ''விண்டுவே! தேவாசுரர்களாலே தீர்த்தற்கரிய வல்லமையும், எத்தகையினரா யிருப்பினும் அவர்கள் யாவரையும் மயக்கத்தக்க மாயையும் உனக்குக்கடாக்ஷித்தோம் மாயன் என்றினியுன்பெயர்வழங்குக. நீயே எனது இடப் புறமாவாய்." எனத் திருவாய்மலர்ந்தருளி அந்தர்த்தானமாயினர்.
''எரியலாலுருவமில்லையேறலாலேறலில்லைக்
கரியலாற்போர்வையில்லைக்காண்டகுசோதியார்க்குப்
பிரிவிலாவமரர்கூடிப்பெருந்தகைப்பிரானென்றேத்தும்
அரியலாற்றேவியில்லைஐயனையாறனார்க்கே''- எனவும்,
“வருக்கைத்தடம்பொழிலாமாதையையர்க்குமாசொன்றில்லா
முருக்கொத்தமேனியழகியநாதர்க்குமூச்சரவத்
திருக்கைக்கமலஅரனார்க்கரிதிருத்தேவியன்றேல்
அரிக்குப்பொருளுரையீர்கெடுவீர்நும்மறிவின்மையே.”- எனவும்,
"ஆற்றல்வடிவாட்டடங்கையவுணராலுமகல்விசும்புதனிபுரக்குமமரராலு, மாற்றரிதாயெவ்வுயிர்க்கு மயக்கஞ்செய்யுமாயை நினக்களித்தனமெம்மிடப்பானீயே, யூற்றிருந்து நறவொழுகுந் துளவத்தாரோயுனையிகழ்ந்தோ ரெமையிகழ்ந்தோ ரென்னவோதி, யேற்றையிருக்கொடியுயர்த்த செக்கர் வேணி யிறைவனுயர் தடங்கயிலை யெய்தினானே”-
எனவும், வரும் பிரமாணங்களாற் சிவசத்திகளுள்ளே விஷ்ணுமூர்த்தியும் ஒன்றென் பது பெறப்பட்டது.
அத்தகைய பேற்றினையடைந்த அச்சுதன் சிவபிரானாரது திருவுள்ளக் குறிப்பின்படி பராசத்தியேயாவன்; பாரியாகையிற் பார்வதியும் ஆணுருவாகையில் விஷ்ணுவும் குரோதமுற்றாற் காளியும் யுத்தமுனையிலே துர்க்கையுமாக விளங்குவன்.
ஏகைவஶக்தி:பரமேஶ்வரஸ்ய ப்ரயோஜநார்த்தாயசதுர்விதாபூத்
போகேபவாநீபுருஷேஷுவிஷ்ணு:க்ரோதேசகாளீஸமரேசதுர்கா.
ஒருகாலத்தில் உமையம்மையார் சிவபெருமானை நோக்கி விரதங்களுட் சிறந்த சோமவாரவிரதத்தை ஆச்சிரயித்து வசிஷ்டராதி முநிவர்கட்கு அன்னமளிக் கையில், இறைவியாரது 'தவச்செயலைக் காணவிரும்பிய எம்பெருமான், விஷ்ணுமூர்த்தி பாரியாகிப் பின்வர, தாம் விருத்தவேதிய வடிவேற்று எழுந்தருளி, விமலையின் விரதத்தைச் சோதித்து, பெருமான் தமது நிஜவடிவும், திருமால் முதலிற் பார்ப்பதி யுருவும் பின்னர்த் தனது நிஜவடிவுங்காட்டத் தரிசித்துக் களித்தன ரெனவும் ஓர் சரிதமுளது.
போபோகிரீந்த்ரதநயே பத்ந்யாஸார்தம்தவாஜிரம்
ப்ராப்தமந்நார்திநம்மாம்வை வித்திப்ராஹ்மணபுங்கவம்.
அதாலோக்யமஹாதேவ விஸ்மயோத்புல்லலோசநா.
கிமிதந்தேவிலஸதா0 ஸேயமித்யாஹபார்வதீ
அதேங்கிதஜ்ஞோதைத்யாரிர் நாரிரூபம்விஹாயதத்
ஸ்வரூப0 தர்ஶயாமாஸ பார்வத்யா:ஸந்நிதௌஹரி:
நீலநீரதஸ0காஶ: புண்டரீகதளேக்ஷண:
அம்பிகை போன்ற அத்தகைய அழகியவுருவை அச்சுதர் எவ்வாறடைந்தன ரென்று பரியாலோசிக்கும்பக்ஷத்தில், அகிலலோகத்திலுஞ்சிறந்த திரிபுரஸுந்தரி என்னுங் காரணப்பெயர் வாய்ந்த எமது தாயாகிய கவுரியைக் கருதிக் காலம் பல கடுந்தவஞ்செய்து கைகூப்பிப் பணிந்து ஈச்சுவரியாரைப்போன்ற திவ்யவடிவை அவ்வம்மையார் திருவருளினாலே யடைந்தனர் எனக் கொள்க.
ஹரிஸ்த்வாமாராத்யப்ரணதஜநஸௌபாக்யஜநநீம்
புராநாரீபூத்வாபுரரிபுமபிக்ஷோபமநயத்-ஸ்மரோபித்வாம்நத்வா.
ஸமுத்பூதஸ்தூலஸ்தநபரமுரஶ்சாருஹஶிதம்
கடாக்ஷேகந்தர்பா:கதிசநகடம்பத்யுதிவபு:
ஹரஸ்யத்வத்ப்ராந்திம்ஜநநிவிஜயந0தஸ்ஸமதுலே
பவத்யாயேபக்தா:பரிணதிரமீஷாமியமுமே.
ஈண்டெடுத்துக் காட்டிய இவ்வகைய பலஹேதுக்களால், திருமால் சிவசத்தியே யென்பது பெறப்பட்டது. புருஷபாகம் வலப்புறமெனவும் பெண்பாக மிடப்புறமெனவுங் கூறப்படும் நியாயத்தால், சிவபிரானது வாமபாகத்தைத் திருமால் சிவார்ச்சனை செய்து பெற்றுக்கொண்டனர். அச் சிவகேசவரிருவரும் ஒருவடிவாய்
(அர்த்தசாரீசுவரர்போல) வலப்புறம் செந்நிறமாய் மழு அபயமும், இடப்புறம். பசுமையாய்ச் சக்ரவரதமுந் தாங்கி ஒரு திருமேனியுடன் ஏகபீடத்திற் சமானமாக எழுந்தருளியிருப்பர். அத் திரு.'வுருவத்தைச் சங்கரநாராயணரெனச் சற்றும் பேதமின்றி ஒருமூர்த்தியாய் உபாசனார்ச்சனைகள் புரிந்து நற்கதியுற்றோராகிய கண்ணுவராதி முநிவரர்கட்கு எண்ணில்லை. இத்தகைய இலக்கணமாகக் கேசவனைப் பாதியாக வுடைத்தாயிருத்தலின் பெருமான் கேசவார்த்தமூர்த்தியெனத் திருநாம மெய்தினர்.
இத்திருவுருவம் ஹரிஹரம் என்னும் க்ஷேத்திரத்திற் பிரசித்தமாக விளங்கும்.
ஹரிஶங்கரயோர்நாஸ்தி யுவயோர்பேதஈஶ்வர
யேபேதபுத்யாபஶ்யந்தி தேதூராயுவயோர்ஹர-இத்யாதி
நிவாரிதும்மஹாரம்ஹௌ ஹரிஶங்கரரூபிணௌ
யுவாமேகாக்ருதிம்ப்ராப்யஸுரலோசநகோசரௌ
ஸ்தாதவ்யமசிராதத்ரை வைகதைவவரம்மம
இதிதஸ்யவச:ஶ்ருத்வா கர்தும்தஸ்யமநோரதம்
பஶ்யதாம்ஸர்வதேவாநாம் தாவேகாக்ருதிமாபது:
தஸ்மாத்தரிஹரக்ஷேத்ர மிதிதத்ப்ரதிதம்புவி.
''இடமால்வலந்தானிடப்பாறுழாய்வலப்பாலொண்கொன்றை
வடமாலிடந்துகிறோல்வலமாழியிடம்வலமா
னிடமால்கரித்தால்வலஞ்சோதிவனுக்கெழினலஞ்சேர்
குடமாலிடம்வலங்கொக்கரையாமெங்கள் கூத்தனுக்கே.''
கேசவார்த்தமூர்த்தயே நம: