அயோத்தி நகரை யரசுபுரிந்த சகரன் என்னுஞ் சக்ரவர்த்தி விடுத்த அசுவமேதப்புரவியை அமரேசன்கண்டு மனம் பொறானாகித் தன் வாழ்வுக் கீனம் வந்ததேயென்று சிந்தை நைந்து வஞ்சனையாற் பற்றி, பாதலத்திற் கடுந்தவம்புரியுங் கபில முநிவர் பக்கலிற் கட்டிப் போயினன். அம்மன்னவன் மக்கள் அறுபதினாயி ரவரும் தந்தை கட்டளைப்படி தரணி முழுதுந்தேடிக் காணாது, பாரைத்தோண்டிப் பாதலமடைந்து அரியதவசியாகிய கபிலர் பக்கலிற்கட்டிய பரியைக்கண்டு இக்கள்வனே நமது புரவியைக்கவர்ந்து காவலன் யாகத்தைப்போக்கக் கருதியவனெ ன்று கனன்று அவர் துன்புறவைத்தனர். அதனால் முநிவர் முனிந்து விழிக்க, விழித்தீயினாற் சகரபுத்திரர் அறுபதினாயிரவருஞ் சாம்பரா யழிந்தனர். அச்செய்தி யவருடன் போந்த தூதுவர் சொல்லத் தெரிந்த அரசன் தன் பௌத்திரனாகிய அஞ்சு மானை யழைத்து ''என் புதல்வரிறப்பினும் எடுத்த யாகத்தை விடலாமோ?" என அஞ்சுமான் பாதலஞ்சென்று கபிலர்முன்னுள்ள சாம்பர் மலையைக் கண்ணுற்று நடுங்கி, முனிவர் முன்வந்து குதிரையைக் கேட்க, முனிவர் மனமகிழ்வுற்றுப் புரவி யைக் கொடுக்கப்பெற்று, பூவுலகடைந்து பிதாமகன்பால் விடுத்து அவ்யாகத்தை முடிப்பித்தான். அவன் சந்ததியி லொருவனான பகீரதன் பண்டைக்காலத்தில் தன் மூதாதையர் முனிவன் முனிவால் முடிந்து சாம்பராய் நரகத்தில் மூழ்கியுள்ளா ரென்று தெரிந்து, அவர்களைச் சுவர்க்கமடைவிக்கக்கருதிப் பதுமனை நோக்கிப் பதினாயிரவருடந் தவம்புரிந்தனன். பகீரதன் பண்ணிய பெருந்தவத்திற்குக் களித்த பிரமன் பிரசன்னனாகி "ஆகாயகங்கை அவர்கள் அஸ்தியிற்பட்டாற் சுவர்க்கமடை வர். அஃது அவனிமேல்வரில் அதன் வேகத்தை யாற்றுதல் அரனுக்கு அமையுமன்றி ஏனையோருக்கேலாதாகலின், சிவபிரானை நோக்கித் தவஞ்செய்க" எனச் சாற்றி மறைய, புகீரதன் பதினாயிரவருடந் தவம்புரிந்து பரமனருள் பெற்று, கங்கையைக் கருதி ஐயாயிரவருடம் அருந்தவம்புரிகையிற் கங்கை பெண்வடிவாக வந்து "என்வேக மதிகமாதலின் என்னைத் தாங்கும்படி ஈசனை நோக்கி இன்னுந் தவஞ்செய்க'' என்றிசைப்ப, இறைவனை நோக்கி இரண்டாயிரத்தைஞ்னூறு வருடம்
மீண்டுந் தவஞ்செய்தலும் எம்பிரான் காட்சிதர, கங்கை பெண் வடிவாக வந்து கூறியதை விண்ணப்பித்து "காக்கிறேன்'' என்று கண்ணுதல் கொடுத்த வரத்தைப் பெற்று, திரும்பவுங் கங்கையைக் கருதி இரண்டாயிரத் தைஞ்னூறுவருடந் தவமிழைத்தனன் . கங்கை அப்பொழுது திரிலோகமும் அச்சமுற்று அலறும்படி ஆரவாரித்துக்கொண்டு வந்து தோன்றினள். அவ்வாறுவந்த கங்கையைச் சிந்தாழற் சிவபெருமான் சடைநுணியி லணிந்தனர்.
பகீரதன் கங்கையைக் காணாமற் கலங்கி நிற்பதுகண்டு, கருணாமூர்த்தி “நமது சடையிலிருக்கின் றனள்; அஞ்சற்க" என்று திருவாய்மலர்ந்து சிறு திவலைவிட, கங்கை நாதன்சடையிலிருந்து நதியுருநண்ணி நானிலத் திறங்கினள். இவ்வாறு வந்த கங்கை முன் பகீரதன் படர்கையில் இறந்தோரைக் கதியிற்சேர்க்க விரைந்து செல்லுங் கங்கையின் வேகத்தால், ஜந்து முறிவர் வேள்விச்சாலை யழிய அவர்கோபித்து அந்நீரை உள்ளங்கையி லேற்றுட்கொண்டனர். அரசன் கங்கையைக் காணாமல் ஜந்துமுநிவரைப் பணிந்து முன் நடந்தவற்றைமொழிய அவர் மனமிரங்கிச் செவிவழி விட்டமையால் ஜாந்நவியெனப் பெயர்பெற்று, இறந்து கிடைந்த சகரர்கநடலுதிர்ந்த சாம்பரிற்படிய அவர்கள் நற்கதியடைந்தனர்.
பகீரதனாற் கொண்டுவரப் படுதலின் கங்கைக்குப் பாகீரதியெனவும் ஒருபெயர் வழங்காநிற்கும். மேற் கங்காதரத்திற் கூறிய வண்ணம் சிவப்பிரசாதத்தினாற் பிரமன் தனது மனோவதி நகரிற்குக்கொண்டுபோன கங்கை பகீரதன் வேண்டுகோளால் பூமியில் வந்தபொழுது, உலகமழியாமற் சிவபிரான் தமது சடையிலேற்று, அவன் பிரார்த்தனைக் கிரங்கி அதிலோர் துளிவிடுத்தனர். ஆதலின் கங்காவிஸர்ஜநமூர்த்தி யென நாமமெய்தினர்.
கங்காயாஃபதநராஜப்ருதிலீநஸஹிஷ்யதே
தாம்வைதாரயிதும்வீரநாந்பஶ்யாமிஶூலிந:
ரக்ஷஸர்வாநிமாந்லோகாநலோகாந்கர்துமர்ஹஹி
தேவாநாம்சவச:ஶ்ருத்வாஸர்வலோகமஹேஶ்வர:
ஸஒமித்யப்ரவீத்ஸர்வாந்புநஶ்சேதமுவாசஹ.
கஶ்கதாரயிதாவேகம்பதிஷ்யௌமிமஹீதலே-பகீரத:
தாரயிஷ்யதிதேவேகம்ருதரஸ்த்வாத்மாஶரீரிணாம்
யஸ்மிந்ததமிதம்ப்ரோதம்விஶ்வம்ஶாடீவதந்துஷு.
ஶOபோர்ஜடாகலாபாத்ஸாவிநிஷ்க்ராந்தாஸ்திஶர்கராந்
ப்லாவயித்வாதிவம்நிந்யேயாபாபாந்ஸகராத்மஜாந்.
இயம்கர்வபராக்ராந்தாஈஶே:ஶஶிரிமௌலிகா
ஜடாகோடீரநிலயாசக்ரேஸாசவிஸர்ஜிதா.
''அந்நதி மூன்று தன்னி லயனகர் புகுந்த கங்கை
தன்னருந் திறலின் மிக்க பகீரதன் தவத்தான் மீளப்
பின்னரு மிமையா முக்கட் பெருந்தகை முடிமேற் றாங்கி
யிந்நில வரைப்பிற் செல்ல விறையதில் விடுத்தல் செய்தான்.”
கங்காவிஸர்ஜநமூர்த்தயே நம: