logo

|

Home >

thala-marangalin-sirappukal >

temple-trees-vanni-or-rusty-acacia-tree

Om symbol

temple-trees-தலமரச் சிறப்புகள் வன்னி மரம் (Vanni or Rusty Acacia Tree)

Om symbol

தலமரச் சிறப்புகள்


வன்னி Prosopis spicigera, Linn.; Mimosaceae

வன்னி / vanni / Prosopis spicigera
வன்னி மரம்

வம்பார் கொன்றை வன்னி மத்தம் மலர்தூவி 
நம்பா வென்ன நல்கும் பெருமான் உறைகோயில் 
கொம்பார் குரவு சொகுடி முல்லை குவிந்தெங்கும்
மொய்ம்பார் சோலை வண்டு பாடும் முதுகுன்றே.

                                                                                                  - திருஞானசம்பந்தர்.

 

 

மேலைத்திருக்காட்டுப்பள்ளி,திருவான்மியூர், பட்டீச்சரம்,திருவடுகூர்,திருப்பூந்துருத்தி, திருச்சாட்டியக்குடி, திருச்செம்பொன்பள்ளி, திருக்கோட்டூர, திருக்கொள்ளிக்காடு, பெருவேளூர்,திருப்பாம்புரம், திருக்கடைமுடி,திருக்கேதீச்சரம், திருமுண்டீச்சரம்,திருஆமாத்தூர், பேணுபெருந்துறை (திருப்பந்துறை), திருஅரதைப்பெரும்பாழி, கடுவாய்க்கரைப்புத்தூர், திருமுதுகுன்றம்(விருத்தாசலம்), திருப்பாண்டிக்கொடுமுடி, திருத்தெளிச்சேரி, திருவன்னியூர் , திருக்கலய நல்லூர் (சாக்கோட்டை) , திருக்காறாயில் (திருக் காறைவாசல்), திருமறைக்காடு , அகத்தியான்பள்ளி , திருமணஞ்சேரி, திருக்கானூர் , திருப்பாச்சிலாச்சிராமம் (திருவாசி) , திருக்கொடிமாடச்செங்குன்றூர் (திருச்செங்கோடு) , திருக்குடமூக்கு (கும்பகோணம்) , திரு இடையாறு முதலிய முப்பதுக்கும் மேற்பட்ட திருக்கோயில்களில் தல மரமாக வன்னி விளங்குகின்றது. வில்வத்திற்கு அடுத்தபடியாக மிகுதியான கோயில்களில் தலமரமாக உள்ளது வன்னியேயாகும்.

இவற்றுள் திருமுண்டீச்சரத்தில் இம்மரம் தற்போதில்லை.

இஃது ஓர் முள்ளுள்ள இலையுதிர் மரம். மிகச் சிறிய கூட்டிலைகளைக் கொண்டது. சதைப்பற்றுடைய உருளைவடிவக் காய்களை உடையது. வடதமிழ் நாட்டில் கரிசல் நிலங்களில் தானே வளர்கிறது. தோட்டங்களில் ஆங்காங்கே முளைக்கும் இவ்வன்னி மரங்களைப் பொதுவாக யாரும் வெட்டுவதில்லை. அந்த அளவுக்குப் புனிதமாக கருதப்படும் மரமாகும். மரம் முழுமையும் மருத்துவக் குணமுடையது.

 

இம்மரம் காய்ச்சல் போக்குதல், சளியகற்றுதல், நாடிநடையையும் உடல் வெப்பத்தையும் மிகுத்தல் ஆகிய மருத்துவப் பண்புகளை உடையது.
 

Acacia ferruginea, DC. <=> Rusty Acacia Tree - Banni

 

Canopy

 

Vanni tree Canopy

NameRusty Acacia Tree - Vanni
FamilyFabaceae
SubFamilyMimosoideae
GenusAcacia
Speciesferruginea
AuthorityDC.
TypeDeciduous
Common Familypea
Sub Familymimosa
NativeAsia
SizeMedium
Height12 m

 

Reference

 

Language LatinMimosa ferruginea
Wikiwikipedia
Linksflowersofindia
ars-grin
theplantlist
DescriptionRusty Acacia is normally a smallish, drought-resistant, deciduous tree, not more than 12 m tall. It commonly has a bole rarely straight for more then 2-3 m. Branches are slender, armed with conical prickles; spine persist on trunk until it reaches about 15 cm. Twigs are zigzag at nodes, wiry, hairless, green or reddish. Primary roots are long, thin, tapering, wiry, yellow to brown. Leaves are alternately arranged, double-compound. prickles twin, infra-stipular, slightly curved. Common petiole 7-15 cm long; sidestalks are 4-6 pairs, leaflets 15-30 pairs, grey to glacuous (almost white when dry), linear, 0.6-1.25 cm long. Flowers are pale yellow in numerous lax axillary spikes about 14 cm long, which are often panicled at the end of the branches. Pods are smooth, 7-18 x 2-2.5 cm, contain a dry sweetish pulp, dark brown and pinnately splitting, 3-7 seeded. Seeds are 0.5-0.7 x 0.35-0.5 cm, flat ovate, oblong, distinctly stalked, and this is a diagnostic feature, greenish to brown.
WhereSomeshwar Temple, Ulsoor, Bangalore;
Lalbagh, Bangalore and more places in India and Asia.

 

Bark

 

Vanni tree Bark

Colorblack

 

Flowers

 

Vanni tree Flower

Sizetiny
Shapelong pipe spiked
Colorcreamy white
SeasonMar-Apr

 

Fruits

 

Vanni tree Fruit

Size7.5 cm
ShapePod
ColorDark Brown
Info3-7 seeds

 

Leaves

 

Vanni tre Leaf

TypeBipinnate
Stalks4-8 pairs
Leaflet Numbers15-30 pairs

 

Spines

 

Vanni tree Spine

ShapeCurved
Infoin pairs

 

Picture Carousel (41)

 

Vanni Tree Flower Bud

Rusty Acacia Tree - Flower Bud

‹›

திருமுறைகளில் வன்னி பற்றிய குறிப்பு :-

பிறையும்மர வும்முற வைத்த முடிமேல்
நறையுண்டெழு வன்னியு மன்னு சடையார்
மறையும்பல வேதிய ரோத ஒலிசென்
றறையும்புனல் அன்பிலா லந்துறை யாரே.  1.033.4

கொக்கின் னிறகின் னொடுவன்னி
புக்க சடையார்க் கிடமாகும்
திக்கின் னிசைதே வர்வணங்கும்
அக்கின் னரையா ரதையாறே  1.036.3 

உரவெங் கரியின் னுரிபோர்த்த
பரமன் னுறையும் பதியென்பர்
குரவஞ் சுரபுன் னையும்வன்னி
மருவும் மயிலா டுதுறையே.  1.038.2 

வன்னிகொன்றை மத்தஞ்சூடும் 
 வலிவலமே யவனைப்
பொன்னிநாடன் புகலிவேந்தன் 
 ஞானசம் பந்தன்சொன்ன
பன்னுபாடல் பத்தும்வல்லார் 
 மெய்த்தவத்தோர் விரும்பும்
மன்னுசோதி யீசனோடே 
 மன்னியிருப் பாரே. 1.050.11 

வழங்குதிங்கள் வன்னிமத்தம் 
 மாசுணம்மீ சணவிச்
செழுங்கல்வேந்தன் செல்விகாணத் 
 தேவர்திசை வணங்கத்
தழங்குமொந்தை தக்கைமிக்க 
 பேய்க்கணம் பூதஞ்சூழ
முழங்குசெந்தீ யேந்தியாடி 
 மேயதுமு துகுன்றே.  1.053.5 

வானார்சோதி மன்னுசென்னி 
வன்னிபு னங்கொன்றைத்
தேனார்போது தானார்கங்கை 
திங்க ளொடுசூடி
மானேர்நோக்கி கண்டங்குவப்ப 
மாலை யாடுவார்
கானூர்மேய கண்ணார்நெற்றி 
ஆன்ஊர் செல்வரே.  1.073.1

வண்டணை கொன்றை வன்னியு மத்தம்
 மருவிய கூவிளம் எருக்கொடு மிக்க
கொண்டணி சடையர் விடையினர் பூதங்
 கொடுகொட்டி குடமுழாக் கூடியு முழவப்2
பண்டிகழ் வாகப் பாடியொர் வேதம்
 பயில்வர்முன் பாய்புனற் கங்கையைச் சடைமேல்
வெண்பிறை சூடி உமையவ ளோடும் 
 வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே. 1.075.4

ஏறுமொன் றேறி நீறுமெய் பூசி
இளங்கிளை அரிவையொ டொருங்குட னாகிக்
கூறுமொன் றருளிக் கொன்றையந் தாருங்
குளிரிள மதியமுங் கூவிள மலரும்
நாறுமல் லிகையும் எருக்கொடு முருக்கும் 
மகிழிள வன்னியும் இவைநலம் பகர
ஆறுமோர் சடைமேல் அணிந்தஎம் அடிகள்
அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.  1.077.7 

விண்டலர் மத்தமொடு மிளிரும்மிள 
 நாகம்வன்னி திகழ்
வண்டலர் கொன்றைநகு 
 மதிபுல்கு வார்சடையான்
விண்டவர் தம்புரம்மூன் றெரிசெய் 
 துரைவேதம் நான்குமவை
பண்டிசை பாடலினான் 
 உறைகோயில் பாதாளே.  1.108.7 

ஊர்கின்ற அரவமொளி விடுதிங்க 
 ளொடுவன்னி மத்தமன்னும்
நீர்நின்ற கங்கைநகு வெண்டலைசேர் 
 செஞ்சடையான் நிகழுங்கோயில்
ஏர்தங்கி மலர்நிலவி யிசைவெள்ளி 
 மலையென்ன நிலவிநின்ற
கார்வண்டின் கணங்களாற் கவின்பெருகு 
 சுதைமாடக் கழுமலமே.  1.129.5 

வன்னி கொன்றை மதமத்தம்
 எருக்கொடு கூவிளம்
பொன்னி யன்றசடை யிற்பொலி
 வித்தபு ராணனார்
தென்ன வென்றுவரி வண்டிசை
 செய்திரு வாஞ்சியம்
என்னை யாளுடை யானிட
 மாகவு கந்ததே.  2.007.1 

நொச்சியே வன்னிகொன்
 றைமதி கூவிளம்
உச்சியே புனைதல்வே
 டம்விடை யூர்தியான்
கச்சியே கம்பம்மே
 யகறைக் கண்டனை
நச்சியே தொழுமின்நும்
 மேல்வினை நையுமே.  2.012.2

ஏடுமலி கொன்றையர
 விந்துஇள வன்னி
மாடவல செஞ்சடையெம்
 மைந்தனிட மென்பர்
கோடுமலி ஞாழல்குர
 வேறுசுர புன்னை
நாடுமலி வாசமது
 வீசியநள் ளாறே.  2.033.1  

வம்பார் கொன்றை வன்னி
 மத்தம் மலர்தூவி
நம்பா வென்ன நல்கும்
 பெருமான் உறைகோயில்
கொம்பார் குரவு கொகுடி
 முல்லை குவிந்தெங்கும் 
மொய்ம்பார் சோலை வண்டு
 பாடும் முதுகுன்றே.  2.064.6

தகைமலி தண்டுசூலம் அனலுமிழு நாகங்            
 கொடுகொட்டி வீணை முரல            
வகைமலி வன்னிகொன்றை மதமத்தம் வைத்த           
 பெருமான் உகந்த நகர்தான்         
புகைமலி கந்தமாலை புனைவார்கள் பூசல்          
 பணிவார்கள் பாடல் பெருகி         
நகைமலி முத்திலங்கு மணல் சூழ் கிடக்கை        
 நனிபள்ளி போலும் நமர்காள்.  2.084.7

நஞ்சணி கண்டன் எந்தை மடவாள் தனோடும்    
 விடையேறு நங்கள் பரமன்    
துஞ்சிருள் வன்னிகொன்றை முடிமே லணிந்தென்    
 உளமே புகுந்த அதனால்    
வெஞ்சின அவுணரோடும் உருமிடியும் மின்னும்    
 மிகையான பூத மவையும்    
அஞ்சிடும் நல்லநல்ல அவைநல்ல நல்ல    
 அடியா ரவர்க்கு மிகவே.  2.085.5

வாள்வரி யதளதாடை வரிகோ வணத்தர்    
 மடவாள் தனோடு முடனாய்    
நாண்மலர் வன்னிகொன்றை நதிசூடி வந்தென்    
 உளமே புகுந்த அதனால்    
கோளரி யுழுவையோடு கொலையானை கேழல்    
 கொடுநாக மோடு கரடி    
ஆளரி நல்லநல்ல அவைநல்ல நல்ல    
 அடியா ரவர்க்கு மிகவே.  2.085.6 

வேள்பட விழிசெய்தன்று விடைமே லிருந்து    
 மடவாள் தனோடும் உடனாய்    
வாண்மதி வன்னிகொன்றை மலர்சூடி வந்தென்    
 உளமே புகுந்த அதனால்    
ஏழ்கடல் சூழிலங்கை அரையன்ற னோடும்    
 இடரான வந்து நலியா    
ஆழ்கடல் நல்லநல்ல அவைநல்ல நல்ல    
 அடியா ரவர்க்கு மிகவே.  2.085.8

கணிகையொர் சென்னிமன்னு மதுவன்னி கொன்றை    
 மலர்துன்று செஞ்ச டையினான்    
பணிகையின் முன்னிலங்க வருவேட மன்னு    
 பலவாகி நின்ற பரமன்    
அணுகிய வேதவோசை யகலங்கம் ஆறின்    
 பொருளான ஆதி யருளான்    
நணுகிய தொண்டர்கூடி மலர்தூவி யேத்து    
 நறையூரின் நம்ப னவனே.  2.087.6

அடுத்தடுத்த கத்தியோடு
 வன்னிகொன்றை கூவிளம்
தொடுத்துடன் சடைப்பெய்தாய்
 துருத்தியாயோர் காலனைக்
கடுத்தடிப் புறத்தினா
 னிறத்துதைத்த காரணம்
எடுத்தெடுத் துரைக்குமாறு
 வல்லமாகின் நல்லமே.  2.098.2

விண்டவெள்ளெ ருக்கலர்ந்த
 வன்னிகொன்றை மத்தமும்
இண்டைகொண்ட செஞ்சடை
 முடிச்சிவனி ருந்தவூர்
கெண்டைகொண்ட லர்ந்தகண்ணி
 னார்கள்கீத வோசைபோய்
அண்டரண்டம் ஊடறுக்கும்
 அந்தணரூ ரென்பதே.  2.101.2

இருந்தவன்கி டந்தவன்னி
 டந்துவிண் பறந்துமெய்
வருந்தியும் அளப்பொணாத
 வானவன் மகிழ்ந்தவூர்
செருந்திஞாழல் புன்னைவன்னி
 செண்பகஞ் செழுங்குரா
அரும்புசோலை வாசநாறும்
 அந்தணாரூ ரென்பதே.  2.101.9 

பிறைநி லாவிய சடையிடைப் பின்னலும்            
 வன்னியுந் துன்னாரும்            
கறைநி லாவிய கண்டர்எண் தோளினர்            
 காதல்செய் கீழ்வேளூர்            
மறைநி லாவிய அந்தணர் மலிதரு            
 பெருந்திருக் கோயில்மன்னும்            
நிறைநி லாவிய ஈசனை நேசத்தால்            
 நினைபவர் வினைபோமே.  2.105.7

துன்று வார்சடைத் தூமதி மத்தமுந்            
 துன்னெருக் கார்வன்னி            
பொன்றி னார்தலைக் கலனொடு பரிகலம்            
 புலியுரி யுடையாடை            
கொன்றை பொன்னென மலர்தரு கோட்டூர்நற்            
 கொழுந்தேயென் றெழுவாரை            
என்று மேத்துவார்க் கிடரிலை கேடிலை            
 ஏதம்வந் தடையாவே.  2.109.6 

கங்கை திங்கள் வன்னிதுன்
 எருக்கின்னொடு கூவிளம்
வெங்கண்நாகம் விரிசடையில்
 வைத்த விகிர்தன்னிடம்
செங்கயல்பாய் புனலரிசில்
 சூழ்ந்த திலதைப்பதி
மங்குல்தோயும் பொழில்சூழ்ந்
 தழகார் மதிமுத்தமே.  2.118.4

அத்தகு வானவர்க்
 காக மால்விடம்
வைத்தவர் மணிபுரை
 கண்டத் தின்னுளே
மத்தமும் வன்னியும்
 மலிந்த சென்னிமேல்
கொத்தலர் கொன்றையர்
 கொள்ளிக் காடரே.  3.016.3

வன்னியும் மத்தமும்
 மதிபொதி சடையினன்
பொன்னியல் திருவடி
 புதுமல ரவைகொடு
மன்னிய மறையவர்
 வழிபட அடியவர்
இன்னிசை பாடலர்
 ஏடகத் தொருவனே.  3.032.1

தடவரை யெடுத்தவன்
 தருக்கிறத் தோளடர்
படவிரல் ஊன்றியே
 பரிந்தவற் கருள்செய்தான்
மடவரல் எருக்கொடு
 வன்னியும் மத்தமும்
இடமுடைச் சடையினன்
 ஏடகத் திறைவனே.  3.032.8

குண்டிகைக் கையினர்
 குணமிலாத் தேரர்கள்
பண்டியைப் பெருக்கிடும்
 பளகர்கள் பணிகிலர்
வண்டிரைக் கும்மலர்க்
 கொன்றையும் வன்னியும்
இண்டைசேர்க் குஞ்சடை
 ஏடகத் தெந்தையே.  3.032.10 

புற்றின் நாகமும்
 பூளையும் வன்னியுங்
கற்றை வார்சடை
 வைத்தவர் காழியுட்
பொற்றொ டியோ
 டிருந்தவர் பொற்கழல்
உற்ற போதுடன்
 ஏத்தி யுணருமே.  3.043.4

வன்னி கொன்றை
 மதியொடு கூவிளஞ்
சென்னி வைத்த
 பிரான்திரு ஆரூரை
மன்னு காழியுள்
 ஞானசம் பந்தன்வாய்ப்
பன்னு பாடல்வல்
 லார்க்கில்லை பாவமே. 3.045.11  

விடையுயர் வெல்கொடியான் அடி
 விண்ணொடு மண்ணுமெல்லாம்    
புடைபட ஆடவல்லான் மிகு
 பூதமார் பல்படையான்    
தொடைநவில் கொன்றையொடு வன்னி
 துன்னெருக் கும்மணிந்த    
சடையவன் ஊர்பனந்தாள் திருத்
 தாடகை யீச்சரமே.  3.062.6 

பொன்னியல் பொருப்பரையன் மங்கையொரு
 பங்கர்புனல் தங்குசடைமேல்
வன்னியொடு மத்தமலர் வைத்தவிறல்
 வித்தகர் மகிழ்ந்துறைவிடங்
கன்னியிள வாளைகுதி கொள்ளவிள
 வள்ளைபடர் அள்ளல்வயல்வாய்
மன்னியிள மேதிகள் படிந்துமனை
 சேருதவி மாணிகுழியே.  3.077.1

தொடைத்தலை மலைத்திதழி துன்னிய
 எருக்கலரி வன்னிமுடியின்
சடைத்தலை மிலைச்சிய தபோதனன்
 எமாதிபயில் கின்றபதியாம்
படைத்தலை பிடித்துமற வாளரொடு
 வேடர்கள் பயின்றுகுழுமிக்
குடைத்தலை நதிப்படிய நின்றுபழி
 தீரநல்கு கோகரணமே.  3.079.5 

மடல்மலி கொன்றை துன்றுவா ளெருக்கும்                         
 வன்னியும் மத்தமுஞ் சடைமேற்                        
படலொலி திரைகள் மோதிய கங்கைத்                         
 தலைவனார் தம்மிடம் பகரில்                        
விடலொலி பரந்த வெண்டிரை முத்தம்                         
 இப்பிகள் கொணர்ந்துவெள் ளருவிக்                        
கடலொலி யோதம் மோதவந் தலைக்குங்                         
 கழுமல நகரென லாமே.  3.118.1

செந்துவர் வாயாள் சேலன கண்ணாள்
 சிவன்திரு நீற்றினை வளர்க்கும்
பந்தணை விரலாள் பாண்டிமா தேவி
 பணிசெயப் பாரிடை நிலவுஞ்
சந்தமார் தரளம் பாம்புநீர் மத்தந்
 தண்ணெருக் கம்மலர் வன்னி
அந்திவான் மதிசேர் சடைமுடி யண்ணல்
 ஆலவா யாவதும் இதுவே.    3.120.3 

கணங்களாய் வரினுந் தமியராய் வரினும்
 அடியவர் தங்களைக் கண்டால்
குணங்கொடு பணியுங் குலச்சிறை குலாவுங்
 கோபுரஞ் சூழ்மணிக் கோயில்
மணங்கமழ் கொன்றை வாளரா மதியம்
 வன்னிவண் கூவிள மாலை
அணங்குவீற் றிருந்த சடைமுடி யண்ணல்
 ஆலவா யாவதும் இதுவே.    3.120.4 

பொறியர வரையி லார்த்துப் 
 பூதங்கள் பலவுஞ் சூழ
முறிதரு வன்னி கொன்றை 
 முதிர்சடை மூழ்க வைத்து
மறிதரு கங்கை தங்க 
 வைத்தவர் எத்தி சையும்
ஏறிதரு புனல்கொள் வேலி 
 இடைமரு திடங் கொண்டாரே.  4.035.6

பொன்றிகழ் கொன்றை மாலை 
 புதுப்புனல் வன்னி மத்தம்
மின்றிகழ் சடையில் வைத்து 
 மேதகத் தோன்று கின்ற
அன்றவர் அளக்க லாகா 
 அனலெரி யாகி நீண்டார்
இன்றுட னுலக மேத்த 
 இடைமரு திடங் கொண்டாரே.  4.035.9

வன்னிவா ளரவு மத்தம் 
 மதியமும் ஆறுஞ் சூடி
மின்னிய உருவாஞ் சோதி 
 மெய்ப்பொருட் பயனு மாகிக்
கன்னியோர் பாக மாகிக் 
 கருதுவார் கருத்து மாகி
இன்னிசை தொண்டர் பாட 
 இருந்தஆப் பாடி யாரே.  4.048.6

காடிடம் உடையர் போலுங் 
 கடிகுரல் விளியர் போலும்
வேடுரு வுடையர் போலும் 
 வெண்மதிக் கொழுந்தர் போலுங்
கோடலர் வன்னி தும்பை 
 கொக்கிற கலர்ந்த கொன்றை
ஏடமர் சடையர் போலும் 
 இன்னம்பர் ஈச னாரே.  4.072.8 

வண்டணை கொன்றையும் வன்னியும் 
 மத்தமும் வாளரவுங்
கொண்டணைந் தேறு முடியுடை 
 யான்குரை சேர்கழற்கே
தொண்டணைந் தாடிய சோற்றுத் 
 துறையுறை வார்சடைமேல்
வெண்டலை மாலையன் றோவெம் 
 பிரானுக் கழகியதே.  4.085.2 

கொய்ம்மலர்க் கொன்றை துழாய்வன்னி 
 மத்தமுங் கூவிளமும்
மெய்ம்மலர் வேய்ந்த விரிசடைக் 
 கற்றைவிண் ணோர்பெருமான்
மைம்மலர் நீல நிறங்கருங் 
 கண்ணியோர் பால்மகிழ்ந்தான்
நின்மல னாடல் நிலயநெய்த் 
 தானத் திருந்தவனே.  4.089.5

திருவமர் தாமரை சீர்வளர் 
 செங்கழு நீர்கொள்நெய்தல்
குருவமர் கோங்கங் குராமகிழ் 
 சண்பகங் கொன்றைவன்னி
மருவமர் நீள்கொடி மாட 
 மலிமறை யோர்கள்நல்லூர்
உருவமர் பாகத் துமையவள் 
 பாகனை உள்குதுமே.  4.097.10 

விடுபட்டி ஏறுகந் தேறீயென் 
 விண்ணப்பம் மேலிலங்கு
கொடுகொட்டி கொக்கரை தக்கை 
 குழல்தாளம் வீணைமொந்தை
வடுவிட்ட கொன்றையும் வன்னியும் 
 மத்தமும் வாளரவுந்
தடுகுட்ட மாடுஞ் சரக்கறை 
 யோவென் றனிநெஞ்சமே.  4.111.8

வண்ட ணைந்தன
 வன்னியுங் கொன்றையுங்
கொண்ட ணிந்த
 சடைமுடிக் கூத்தனார்
எண்டி சைக்கும்
 இடைமரு தாவென
விண்டு போயறும்
 மேலை வினைகளே.  5.014.5

வண்ட ணைந்தன
 வன்னியும் மத்தமுங்
கொண்ட ணிந்த
 சடைமுடிக் கூத்தனை
எண்டி சைக்கும்
 இடைமரு தாவென
விண்டு போயறும்
 மேலை வினைகளே.  5.015.3

வன்னி மத்தம்
 வளரிளந் திங்களோர்
கன்னி யாளைக்
 கதிர்முடி வைத்தவன்
பொன்னின் மல்கு
 புணர்முலை யாளொடும்
மன்னி னான்கடம்
 பூர்க்கரக் கோயிலே.  5.020.2

திருவன்னியூர் - காடு கொண்டரங் காக்கங்குல்
வன்னி கொன்றை
 எருக்கணிந் தான்மலை
உன்னி யேசென்
 றெடுத்தவன் ஒண்டிறல்
தன்னை வீழத்
 தனிவிரல் வைத்தவன்
கன்னி மாமதிற்
 கானூர்க் கருத்தனே. 5.076.10

அடும்புங் கொன்றையும்
 வன்னியும் மத்தமுந்
துடும்பல் செய்சடைத்
 தூமணிச் சோதியான்
கடம்பன் தாதை
 கருதுங்காட் டுப்பள்ளி
உடம்பி னார்க்கோர்
 உறுதுணை யாகுமே.  5.084.6 

இறவாமே வரம்பெற்றே னென்று மிக்க 
இராவணனை இருபதுதோள் நெரிய வூன்றி
உறவாகி இன்னிசைகேட் டிரங்கி மீண்டே
உற்றபிணி தவிர்த்தருள வல்லான் றன்னை
மறவாதார் மனத்தென்றும் மன்னி னானை
மாமதியம் மலர்க்கொன்றை வன்னி மத்தம்
நறவார்செஞ் சடையானை நள்ளாற் றானை
நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே. 6.020.10

கண்டுஞ்சுங் கருநெடுமால் ஆழி வேண்டிக்
கண்ணிடந்து சூட்டக்கண் டருளு வான்காண்
வண்டுண்ணும் மதுக்கொன்றை வன்னி மத்தம்
வான்கங்கைச் சடைக்கரந்த மாதே வன்காண்
பண்டங்கு மொழிமடவாள் பாகத் தான்காண்
பரமன்காண் பரமேட்டி யாயி னான்காண்
வெண்டிங்கள் அரவொடுசெஞ் சடைவைத் தான்காண்
விண்ணிழிதண் வீழி மிழலை யானே.  6.052.6

சுழித்தானைக் கங்கைமலர் வன்னி கொன்றை
தூமத்தம் வாளரவஞ் சூடி னானை
அழித்தானை அரணங்கள் மூன்றும் வேவ
ஆலால நஞ்சதனை யுண்டான் றன்னை
விழித்தானைக் காமனுடல் பொடியாய் வீழ
மெல்லியலோர் பங்கனைமுன் வேனி லானைக்
கிழித்தானைக் கீழ்வேளூ ராளுங் கோவைக்
கேடிலியை நாடுமவர் கேடி லாரே.  6.067.6

புலிவலம் புத்தூர் புகலூர் புன்கூர்
புறம்பயம் பூவணம் பொய்கை நல்லூர்
வலிவலம் மாற்பேறு வாய்மூர் வைகல்
வலஞ்சுழி வாஞ்சியம் மருகல் வன்னி
நிலமலிநெய்த் தானத்தோ டெத்தா னத்தும்
நிலவுபெருங் கோயில்பல கண்டாற் றொண்டீர்
கலிவலிமிக் கோனைக்கால் விரலாற் செற்ற
கயிலாய நாதனையே காண லாமே.  6.070.11

ஏடேறு மலர்க்கமலத் தயனும் மாலும்
இந்திரனும் பணிந்தேத்த இருக்கின் றான்காண்
தோடேறு மலர்க்கடுக்கை வன்னி மத்தந்
துன்னியசெஞ் சடையான்காண் துகள்தீர் சங்கம்
மாடேறி முத்தீனுங் கானல் வேலி
மறைக்காட்டு மாமணிகாண் வளங்கொள் மேதி
சேடேறி மடுப்படியுந் திருப்புத் தூரில்
திருத்தளியான் காணவனென் சிந்தை யானே.  7.076.4

வெறிவிரவு மலர்க்கொன்றை விளங்கு திங்கள்
வன்னியொடு விரிசடைமேல் மிலைச்சி னான்காண்
பொறிவிரவு கதநாகம் அக்கி னோடு
பூண்டவன்காண் பொருபுலித்தோ லாடை யான்காண்
அறிவரிய நுண்பொருள்க ளாயி னான்காண்
ஆயிரம்பே ருடையவன்காண் அந்தண் கானற்
செறிபொழில்சூழ் மணிமாடத் திருப்புத் தூரில்
திருத்தளியான் காணவனென் சிந்தை யானே.  6.076.7

மட்டார் மலர்க்கொன்
 றையும்வன்னி யுஞ்சாடி 
மொட்டாரக் கொணர்ந்தெற்றி
 யோர்பெண்ணை வடபால் 
கொட்டாட் டொடுபாட்
 டொலிஓவாத் துறையூர்ச் 
சிட்டா உனைவேண்டிக்
 கொள்வேன் தவநெறியே.  7.013.6

மாலயனுங் காண்பரிய மாலெரியாய் நிமிர்ந்தோன்
 வன்னிமதி சென்னிமிசை வைத்தவன்மொய்த் தெழுந்த
வேலைவிட முண்டமணி கண்டன்விடை யூரும்
 விமலனுமை யவளோடு மேவியஊர் வினவில் 
சோலைமலி குயில்கூவக் கோலமயி லாலச்
 சுரும்பொடுவண் டிசைமுரலப் பசுங்கிளிசொற் றுதிக்கக்
காலையிலும் மாலையிலுங் கடவுளடி பணிந்து
 கசிந்தமனத் தவர்பயிலுங் கலயநல்லூர் காணே.  7.016.8

மத்தமாமலர் கொன்றைவன்னியுங்
 கங்கையாளொடு திங்களும்
மொய்த்தவெண்டலை கொக்கிறகொடு
 வெள்ளெருக்கமுஞ் சடையதாம்
பத்தர்சித்தர்கள் பாடியாடும்பைஞ்
 ஞீலியேன்என்று நிற்றிரால்
அத்தியீருரி போர்த்திரோசொல்லும்
 ஆரணீய விடங்கரே.  7.036.8 

அரியொடு பூமிசை யானும்
 ஆதியும் அறிகிலார்
வரிதரு பாம்பொடு வன்னி
 திங்களும் மத்தமும்
புரிதரு புன்சடை வைத்த
 எம்புனி தற்கினி
எரியன்றி அங்கைக்கொன் றில்லை
 யோவெம் பிரானுக்கே.  7.044.8

கரந்தையும் வன்னியும்
 மத்தமுங் கூவிளம்
பரந்தசீர்ப் பரவையுண்
 மண்டளி யம்மானை
நிரம்பிய ஊரன்
 உரைத்தன பத்திவை
விரும்புவார் மேலையார்
 மேலையார் மேலாரே.  7.096.10

பொன்னி வளைத்த புனல்சூழ் நிலவிப் பொலிபுலியூர்
வன்னி வளைத்த வளர்சடை யோனை வணங்கலர்போல்
துன்னி வளைத்தநந் தோன்றற்குப் பாசறைத் தோன்றுங்கொலோ
மின்னி வளைத்து விரிநீர் கவரும் வியன்முகிலே.    8.கோவை.317

வல்லவன் வன்னிக்கு இறையிடை வாரணம்
நில்லென நிற்பித்த நீதியுள் ஈசனை
இல்லென வேண்டா இறையவர் தம்முதல்
அல்லும் பகலும் அருளுகின் றானே.  10.01.01.23

உரைக்கப் படுவதும் ஒன்றுண்டு 
 கேட்கிற்செவ் வான்தொடைமேல்
இரைக்கின்ற பாம்பினை என்றும் 
 தொடேல்இழிந் தோட்டந்தெங்கும்
திரைக்கின்ற கங்கையும் தேன்நின்ற 
 கொன்றையும் செஞ்சடைமேல்
விரைக்கின்ற வன்னியுஞ் சென்னித் 
 தலைவைத்த வேதியனே.  11.04.7

சொன்ன நாட்டிடைத் தொன்மையில் மிக்கது
மன்னு மாமல ராள்வழி பட்டது
வன்னி யாறுமதி பொதிசெஞ் சடைச்
சென்னி யார்திரு வாரூர்த் திருநகர்.  12.004.1

வன்னி கொன்றை வழை சண்பகம் ஆரம் 
 மலர்ப் பலாசொடு செருந்தி மந்தாரம் 
கன்னி காரங் குரவங் கமழ் புன்னை 
 கற்பு பாடலம் கூவிளம் ஓங்கித் 
துன்னு சாதி மரு மாலதி மௌவல் 
 துதைந்த நந்திகரம் வீரம் மிடைந்த 
பன் மலர்ப் புனித நந்த வனங்கள் 
 பணிந்து சென்றனன் மணங்கமழ் தாரான்.  12.006.94

பொன்னிதழ்க் கொன்றை வன்னி புனல் 
 இள மதியம் நீடு 
சென்னியர் திருவெண் காட்டுத் 
 திருத் தொண்டர் எதிரே சென்று அங்கு
இன்ன தன்மையர்கள் ஆனார் என 
 ஒணா மகிழ்ச்சி பொங்க 
மன்னுசீர்ச் சண்பை ஆளும் 
 மன்னரைக் கொண்டு புக்கார்.  12.034.124

ஏடகம் பிள்ளையார் தாம் வன்னி 
 என்று எடுத்துப் பாடக் 
கூடிய நீரில் ஏடு 
 குலச்சிறை யாரும் கூடிக் 
காடு இடமாக 
 ஆடுங்கண்ணுதல் கோயில்மாடு 
நீடுநீர் நடுவுட் புக்கு நின்ற 
 ஏடு எடுத்துக் கொண்டார்.  12.034.850 

சென்று அணைந்து சிந்தையின் மகிழ் 
 விருப்பொடு திகழ் திருவாமாத்தூர்ப் 
பொன்ற அங்கு பூங்கொன்றையும் வன்னியும் 
 புனைந்தவர் அடி போற்றிக் 
குன்ற வார் சிலை எனும் திருப்பதிகம் 
 மெய் குலவிய இசை பாடி 
நன்றும் இன்புறப் பணிந்து செல்வார் 
 திருக்கோவலூர் நகர் சேர்ந்தார்.  12.034.967 

வம்பு நீடு அலங்கல் மார்பின் 
 வன்தொண்டர் வன்னி கொன்றை
தும்பை வெள் அடம்பு திங்கள் 
 தூயநீறு அணிந்த சென்னித்
தம்பிரான் அமர்ந்த தானம் பல 
 பல சார்ந்து தாழ்ந்து
கொம் பனார் ஆடல் நீடு 
 கூடலை யாற்றூர் சார.  12.035.100

மன்னு திருப் பதிகள் தொறும் 
 வன்னி யொடு கூவிளமும்
சென்னிமிசை வைத்து உவந்தார் கோயிலின் 
 முன் சென்று இறைஞ்சிப்
பன்னு தமிழ்த் தொடை சாத்திப் 
 பரவியே போந்து அணைந்தார்
அன்ன மலி வயல் தடங்கள் 
 சூழ்ந்த திரு ஆமாத்தூர்.  12.035.292


 

 

< PREV <
வஞ்சி
Table of Content> NEXT >
வாகைமரம்

 

 

Related Content

Pictures of Sthala vruksham or Temple Trees

temple-trees-தலமரச் சிறப்புகள் அத்தி மரம் (Cluster Fig Tree)

temple-trees-தலமர சிறப்புகள் அகில் மரம்

temple-trees-தலமர சிறப்புகள் அரச மரம்

temple-trees-தலமரச் சிறப்புகள் அலரிச் செடி (Oleander Plant)