இறைவர் திருப்பெயர்: | கொடுமுடிநாதர், மகுடேஸ்வரர், மலைக்கொழுந்தீசர். |
---|---|
இறைவியார் திருப்பெயர்: | பண்மொழிநாயகி, திரிபுரசுந்தரி, வடிவுடைநாயகி. |
தல மரம்: | |
தீர்த்தம் : | காவிரி, பிரமதீர்த்தம், தேவதீர்த்தம். |
வழிபட்டோர்: | சம்பந்தர், அப்பர், சுந்தரர், சேக்கிழார், பரத்வாஜர், அகத்தியர் முதலியோர் |
ஆதிசேஷனுக்கும்,வாயுவிற்கும் நடந்த வல்லமைப் போட்டியில்,ஆதிசேஷனால் முழுமையாக மூடப்பட்டிருந்த மேருமலையிலிருந்து ஐந்து மணிகள் சிதறிச் சிகரங்களாக விழுந்தன.அவற்றுள், வைரம் இத் தலமாகும்.ஏனயவை1.சிவப்பு மணி-திருவண்ணாமலை,2.மரகதம்-திரு ஈங்கோய்மலை,3.மாணிக்கம்-திரு வாட்போக்கி,4.நீலம்-பொதிகை மலை.
தேவாரப் பாடல்கள் : பதிகங்கள் : சம்பந்தர் - 1. பெண்ணமர் மேனியினாரும் (2.69); அப்பர் - 1. சிட்டனைச் சிவனைச் (5.81); சுந்தரர் - 1. மற்றுப் பற்றெனக் கின்றி (7.48); பாடல்கள் : அப்பர் - கடுவெளியோ (6.82.7); சேக்கிழார் - அப்பதியின் கண் (12.28.337 & 338) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம், பரவி அப்பதிகத் (12.29.85,86 & 87) ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்.
திருப்பாண்டிக்கொடுமுடிப் புராணம் | வெங்கடரமணதாசர் |
அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு இத்தலம் திருச்சி - ஈரோடு இரயில் பாதையில் உள்ள முக்கிய இரயில் நிலையமாகும். கொடுமுடி என தற்போது வழங்கப்படுகின்றது. இரயில் நிலையத்திலிருந்து 1-கி. மீ. தூரத்தில் இக்கோவில் உள்ளது. திருச்சி, கரூர் ஆகிய இடங்களிருந்து பஸ் வசதி உள்ளது. தொடர்பு : 04204 - 222375