இறைவர் திருப்பெயர்: அக்கினிபுரீசுவரர், அக்னீஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர்: கௌரி.
தல மரம்:
தீர்த்தம் : அக்கினி தீர்த்தம்.
வழிபட்டோர்:அப்பர்,அக்கினி.
Sthala Puranam
இவ்வூர் மக்கள் வழக்கில் அன்னியூர் என்று வழங்கப்படுகிறது.
தக்கன் வேள்வியில் பங்குகொண்ட சாபம் தீர அக்கினி வழிபட்ட தலமாதலின் வன்னி - அனல் (நெருப்பு), - வன்னியூர் என்று பெயர் பெற்றது.
காத்யாயனி மகளாக அம்பாள் வந்து தோன்றி, இறைவனை மணக்க இத்தலத்தில் அம்பாள் தவமிருந்தாளாம்.
தேவாரப் பாடல்கள் : பதிகங்கள் : அப்பர் - 1. காடு கொண்டரங் காக்கங்குல் (5.26);
Specialities
கோயிலுக்கு எதிரில் தல தீர்த்தமான அக்கினி தீர்த்தத்தில் நீராடினால் இரத்தக் கொதிப்பு, உஷ்ணரோகம் முதலியன நீங்கும் என்று சொல்லப்படுகிறது.
அம்பாள் இறைவனை மணக்க இத்தலத்தில் தவமிருந்து அவ்வெண்ணம் ஈடேறப் பெற்றதால், திருமணமாகாதவர்கள் இங்கு வந்து வழிபடின் திருமணம் கூடும் என்பது இன்றுமுள்ள நம்பிக்கை.
Contact Address