இறைவர் திருப்பெயர்: | கடைமுடிநாதர், அந்திசம்ரக்ஷணீஸ்வரர். |
---|---|
இறைவியார் திருப்பெயர்: | அபிராமி. |
தல மரம்: | |
தீர்த்தம் : | கருணாதீர்த்தம். |
வழிபட்டோர்: | சம்பந்தர், அப்பர், சுந்தரர், சேக்கிழார், பிரமன், கண்வமகரிஷி ஆகியோர். |
மக்கள் வழக்கில் கீழையூர் என்றும் கீழூர் என்றும் வழங்குகிறது. (கீழையூர் என்பது ஏழு ஊர்கள் சேர்ந்து - மிகப் பெரிய ஊர். இதனால் இதற்கு ஏழூர் என்றும் பெயர் வழங்குகிறது. (திருச்சென்னம்பூண்டி - என்னும் ஊரே கல்வெட்டின்படி கடைமுடி என்பர் ஆய்வர்.
பிரமன், கண்வமகரிஷி முதலியோர் வழிபட்டதாக ஐதீகம்.
தேவாரப் பாடல்கள் : பதிகங்கள் : சம்பந்தர் - 1. அருத்தனை அறவனை (1.111); பாடல்கள் : அப்பர் - இடைமரு தீங்கோ (6.70.3); சுந்தரர் - நாளும் நன்னிலம் (7.12.8); சேக்கிழார் - வைகும் அந்நாளில் (12.28.129) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.
தல மரம் : கிளுவை
காவிரி இங்கு வடக்கு முகமாக வந்து மேற்காக ஓடுவது சிறப்பாகச் சொல்லப்படுகிறது.
அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு மயிலாடுதுறை - பூம்புகார் சாலையில்; மேலையூர் மேலப்பாதி தாண்டி, கீழையூர் என்று பெயர்ப்பலகையுள்ள ஊரையும் கடந்து, சற்று மேலே சென்று 'சத்திரம் Stop' என்னுமிடத்தில் கீழையூர் 2 கி.மீ. என்று கைகாட்டி உள்ள இடத்தில் அது காட்டும் பாதையில் சென்று, கீழையூர் பேருந்து நிற்குமிடத்தில் இடப்பால் திரும்பிச் சென்றால் கோயிலை அடையலாம். தொடர்புக்கு :- 94427 79580 , 04364 - 283 261.