கிளுவை Commiphora Caudata, Engl.; Burseraceae.
மறையவன் உலகவன் மாயம் அவன் பிறையவன் புனலவன் அனலும் அவன் இறையவன் எனஉல கேத்துங் கண்டம் கறையவன் வளநகர் கடைமுடியே.
- திருஞானசம்பந்தர்.
திருக்கடைமுடி திருத்தலத்தின் தலமரமாக விளங்குவது கிளுவை மரமாகும். இஃது வேலிக்காக வளர்க்கப்படும் சிறுமர வகையாகும். முக்கூட்டு இலைகளையும், மென்மையான கட்டைகளையும் உடைய இலையுதிர் மரம். இதில் சிறுகிளுவை, பெருங்கிளுவை என இரு வகைகள் உள்ளன. இவை முறையே செங்கிளுவை, வெண்கிளுவை எனவும் குறிக்கப்படுகிறது. வெண்கிளுவையின் இலை, பட்டை முதலியன மருத்துவக் குணமுடையது.
இஃது சதை, நரம்புகளைச் சுருங்கச் செய்து குருதி, சீழ்க்கசிவுகளை அடக்கும் தன்மை கொண்டது.
< PREV < காரைச்செடி |
Table of Content | > NEXT > குருந்தமரம் |