இறைவர் திருப்பெயர்: | அபிமுக்தீஸ்வரர், பிரியாஈஸ்வரர். |
---|---|
இறைவியார் திருப்பெயர்: | அபின்னாம்பிகை, ஏலவார்குழலி. |
தல மரம்: | |
தீர்த்தம் : | சரவணப் பொய்கை. |
வழிபட்டோர்: | சம்பந்தர், அப்பர், சுந்தரர், சேக்கிழார், பிருங்கி, கௌதமர் ஆகியோர். |
தற்போது மக்கள் வழக்கில் மணக்கால் ஐயம்பேட்டை என்று வழங்கப்படுகின்றது.
பழைய நூல்களில் இத்தலம் 'காட்டூர் ஐயம்பேட்டை' என்று குறிக்கப்பட்டுள்ளது.
முருகன் வழிபட்டதாக வரலாறு சொல்லப்படுவதால் "வேளூர்" என்றும்; 'பெருவேள்' என்பவன் வாழ்ந்த இடமாதலின் "பெருவேளூர்" என்றும் பெயர் பெற்றதாகச் சொல்லப்படுகின்றது.
வாயுவுக்கும் ஆதிசேடனுக்குமிடையே நடந்த போட்டியில் வந்து விழுந்த கயிலைச் சிகரங்களுள் இதுவும் ஒன்று.
மோகினி வடிவம் எடுத்த திருமால், அவ்வவதார நோக்கம் நிறைவேறிய பின்பு இறைவனை வழிபட்டுத் தன் ஆண் வடிவினைப் பெற்ற தலம் எனப்படுகிறது. (திருமால் கோயில் ஆலயத்துள் உள்ளது.)
தேவாரப் பாடல்கள் : பதிகங்கள் : சம்பந்தர் - 1. அண்ணாவுங் கழுக்குன்றும் (3.64); அப்பர் - 1. மறையணி நாவினானை (4.60); பாடல்கள் : அப்பர் - மருக லுறை (4.15.6), நல்லூரே நன்றாக (6.25.10), மண்ணிப் படிக்கரை (6.70.6); சுந்தரர் - பேறனூர் (7.31.9); சேக்கிழார் - பெருவாச மலர்ச் சோலைப் (12.21.217) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம், நீடு திரு வாஞ்சியத்தில் (12.28.573) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.
அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு கும்பகோணம் - குடவாசல், திருவாரூர்ப் பேருந்துச் சாலையில், மணக்கால் என்ற இடத்தில் இறங்கி, இடப்புறமாக 1/2- கி. மீ. சாலையில் சென்றால் கோயிலை அடையலாம்.