இறைவர் திருப்பெயர்: வேதாரண்யேஸ்வரர், மறைக்காட்டு மணாளர்.
இறைவியார் திருப்பெயர்: யாழைப்பழித்த மொழியாள்.
தல மரம்:
தீர்த்தம் : வேத தீர்த்தம், கடல்துறை, மணிகர்ணிகை, தேவபூஷணம்.
வழிபட்டோர்:சம்பந்தர், அப்பர், சுந்தரர், சேரமான் பெருமாள் நாயனார், நக்கீரதேவ நாயனார், கபிலதேவ நாயனார், பரணதேவ நாயனார், பட்டினத்துப் பிள்ளையார், நம்பியாண்டார் நம்பி, சேக்கிழார், வேதங்கள், இராமர், அகத்தியர், முசுகுந்த சக்கரவர்த்தி, கௌதமர், விசுவாமித்ரர், வசிஷ்டர், நாரதர், பிரமன், கங்கை, காவிரி முதலியோர்
Sthala Puranam
அகத்தியருக்குத் திருமணக் காட்சி நல்கிய திருத்தலம்.
வேதங்களால் அடைக்கப்பட்டத் திருக்கதவினை, அப்பரடிகள் திறப்பிக்கவும், ஞானசம்பந்தர் திருக்காப்பிடவும் பாடியப் பெருமைப் பெற்றத் தலம்.
இராமர், இராவணனை கொன்ற பழி நீங்கப் பூஜித்த தலமாதலால், இஃது கோடிக்கரை என்றும் வழங்கப்படுகிறது.
இக்கோவிலில் எரியும் விளக்கில் இருந்த நெய்யை உண்ணுவதற்கு வந்த எலி, அணையும் நிலையில் இருந்த திரியைத் தூண்டி, மறு பிறப்பில் மாவலிச் சக்கிரவர்த்தியாகப் பிறந்தது. இச்செய்தியை, அப்பரடிகள் திருக்குறுக்கைத் தல தேவாரத்தில் குறிப்பிட்டுள்ளார்.
முசுகுந்தச் சக்கரவர்த்தி தியாகேசப் பெருமானை எழுந்தருளுவித்த ஏழு விடங்கத் தலங்களுள்ஒன்று (தியாகர் - புவனவிடங்கர்; நடனம் - ஹம்ச நடனம்; மேனி - மரகத் திருமேனி; ஆசனம் - இரத்தின சிம்மாசனம்).
தேவாரப் பாடல்கள் : பதிகங்கள் : சம்பந்தர் - 1. சிலைதனை நடுவிடை (1.22), 2. சதுரம் மறைதான் (2.37), 3. பொங்கு வெண்மணற் (2.91), 4. கற்பொலிசு ரத்தினெரி (3.76), 5. விடைத்தவர் புரங்கள் (பிற்சேர்க்கை); அப்பர் - 1. இந்திரனோடு தேவர் இருடிகள் (4.33), 2. தேரையு மேல்க டாவி (4.34), 3. ஓதமால் கடல் பாவி (5.09), 4. பண்ணின் நேர்மொழி (5.10), 5. தூண்டு சுடரனைய சோதி (6.23); சுந்தரர் - 1. யாழைப் பழித்தன்னமொழி (7.71); பாடல்கள் : சம்பந்தர் - மலையினார் (1.76.1), அப்பர் - நிறைமறைக்காடு (4.49), ஆசைவன் பாச மெய்தி (4.76.8), இறந்தார்க்கு (6.02.7), தெய்வப் புனற்கெடில (6.07.6), இறையவன்காண் (6.008), மறியிலங்கு (6.13.7), பூவிரியும் (6.20.7), சிறையார் (6.22.3), விண்டவர்தம் (6.30.9), பொருளியல்நற் (6.33.7), வானவர்கோன் (6.50.8), மறைக்காட்டார் (6.51.7), நெருப்பனைய (6.59.2), நதியாருஞ் (6.69.7), உஞ்சேனை மாகாளம் (6.70.8), மலையார்தம் மகளொடு (6.71.6), ஏடேறு மலர்க்கமலத் (6.76.4), மருவினிய (6.80.6), வண்டாடு பூங்குழலாள் (6.81.2), ஊனுற்ற வெண்டலைசேர் (6.82.4), கருவாகிக் (6.86.1), வானவனை (6.90.8), விரிசடையாய் வேதியனே (6.99.6); சுந்தரர் - நிறையனூர் (7.31.5), மத்தம் மலிசூழ் (7.32.3,6 & 10), நிறைக்காட் டானே (7.47.3); சேரமான் பெருமாள் நாயனார் - துயருந் தொழும் (11.07.37) பொன்வண்ணத்தந்தாதி, ஊரெலாந் துஞ்சி (11.08.26) திருவாரூர் மும்மணிக் கோவை; நக்கீரதேவ நாயனார் - கொம்பார் (11.12.15) திருவலஞ்சுழி மும்மணிக்கோவை; கபிலதேவ நாயனார் - உரைவந் துறும் (11.22.16 & 24) சிவபெருமான் திருஇரட்டை மணிமாலை, இறையாய (11.23.40,46 & 53) சிவபெருமான் திருவந்தாதி; பரணதேவ நாயனார் - அடையும் படைமழுவும் (11.24.51) சிவபெருமான் திருவந்தாதி; பட்டினத்துப் பிள்ளையார் - நல்கும் புகழ்க்கட வூர் (11.30.55) திருஏகம்பமுடையார் திருவந்தாதி; நம்பியாண்டார் நம்பி - மணியினை மாமறைக் காட்டு (11.34.26) திருத்தொண்டர் திருவந்தாதி, அடைத்தது மாமறைக் காடர்தம் (11.35.91) ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி, குழகனைப் பாடிக் (11.37.4) ஆளுடைய பிள்ளையார் திருமும்மணிக்கோவை, மாடத் தொளிரும் (11.40.6) ஆளுடைய பிள்ளையார் திருத்தொகை; சேக்கிழார் - வாய்ந்த மிழலை (12.21.263,264,276,283,285,290 & 291) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம், மற்றவ்வூர் தொழுது ஏத்தி (12.28.575,576,578,583,593,597,598,605,607,608,609) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம், நிறைந்த மறைகள் அர்ச்சித்த (12.37.87) கழறிற்றறிவார் நாயனார் புராணம்; திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனார் - கொல்கரி (71) திருக்களிற்றுப்படியார்.
Specialities
திருவிளையாடற் புராணம் அருளிய பரஞ்சோதி முனிவர் அவதாரத் தலம். பரஞ்சோதி முனிவரே இக்கோவில் தலபுராணத்தை அருளிச் செய்துள்ளார்.
Contact Address