இறைவர் திருப்பெயர்: சிவானந்தேஸ்வரர், பிரணவேஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர்: மங்களாம்பிகை, மலையரசி.
தல மரம்:
தீர்த்தம் : மங்கள தீர்த்தம்.
வழிபட்டோர்:சம்பந்தர், சேக்கிழார், பிரமன், உமாதேவி, முருகன் ஆகியோர்.
Sthala Puranam
அரிசிலாற்றின் கரையிலுள்ள இவ்வூர், 'திருப்பெருந்துறை'யினின்றும் வேறுபாடறிய 'பேணு' என்னும் அடைமொழிசேர்த்து 'பேணு பெருந்துறை' என்று வழங்கப்படுகிறது.
பிரமன், உமாதேவி, முருகன் ஆகியோர் வழிபட்டு சிறப்புற்றுள்ளனர்.
தேவாரப் பாடல்கள் : பதிகங்கள் : சம்பந்தர் - 1. பைம்மா நாகம் பன்மலர்க் (1.42); பாடல்கள் : சேக்கிழார் - ஓங்கு புனல் பேணு பெருந்துறையும் (12.28.549) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.
Specialities
செங்கற் கோயிலாக இருந்த இக்கோயில் கரிகாற்சோழன் காலத்தில் கற்கோயிலாயிற்று என்றொரு கல்வெட்டு தெரிவிக்கின்றது.
சுவாமிப் புறப்பாட்டிற்கு ஒரு மாது நிலமளித்த நிவந்தமும் கல்வெட்டால் தெரியவருகின்றது.
கல்வெட்டில் சுவாமி "பேணு பெருந்துறை மகாதேவர் " என்றும் அம்பிகை "மலையரசியம்மை" என்றும் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
Contact Address