logo

|

Home >

hindu-hub >

temples

திருக்காழி (சீர்காழி)

இறைவர் திருப்பெயர்: பிரமபுரீஸ்வரர், தோணியப்பர், சட்டைநாதர்.

இறைவியார் திருப்பெயர்: பெரிய நாயகி, திருநிலைநாயகி.

தல மரம்:

தீர்த்தம் : பிரம தீர்த்தம், காளி தீர்த்தம், சூல தீர்த்தம், ஆனந்த தீர்த்தம், வைணவ தீர்த்தம், இராகு தீர்த்தம், ஆழி தீர்த்தம், சங்க தீர்த்தம்,சுக்கிர தீர்த்தம், பராசர தீர்த்தம், அகத்திய தீர்த்தம், கௌதம தீர்த்தம்,வன்னி தீர்த்தம், குமார தீர்த்தம், சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், கேது தீர்த்தம், அண்ட தீர்த்தம், பதினெண்புராண தீர்த்தம், புறவ நதி,கழுமல நதி, விநாயக நதி முதலிய 22 தீர்த்தங்கள்.

வழிபட்டோர்:பிரமன், குருபகவான், திருமால், சிபிச்சக்கரவர்த்தி, காளி, பராசர முனிவர், உரோமசமுனிவர், இராகு, கேது, சூரியன், அக்னி, ஆதிசேடன், வியாசமுனிவர், முருகப் பெருமான், சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், பட்டினத்துப் பிள்ளையார், முதலியோர்.

Sthala Puranam

 

திருஞானசம்பந்தர் திருஅவதாரம் செய்த திருப்பதி. தோணியப்பர் அம்பிகையிடம் கூற, அம்பாள் ஞானப்பால் பொற்கிண்ணத்தில் கொடுக்க, சம்பந்தர் அருந்தி ஆளுடைய பிள்ளையார் ஆன பதி.

 

  • திருஞானசம்பந்தர் பிறந்து, நடந்து, மொழி பயின்ற அவரது திருமனை திருஞானசம்பந்தர் தெருவில் உள்ளது. தற்போது அது தேவாரப் பாடசாலையாக இயங்குகின்றது.

 

பிரம தீர்த்தக் கரையில்தான் சம்பந்தர் பெருமான் ஞானப்பாலையுண்டார்.

 

  • இக்கோயில் வளாகத்தில் திருஞானசம்பந்தருக்குத் தனித் திருக்கோயில் உள்ளது.

 

  • இத்தலத்திற்குப் பன்னிரண்டுத் திருப்பெயர்கள் உண்டு; அவை -

 

பிரமபுரம் - பிரமன் வழிபட்டதால் இப்பெயர்.

 

வேணுபுரம் - இறைவன் மூங்கில் வடிவில் (வேணு = மூங்கில்) தோன்றினான்.

 

புகலி - சூரனுக்குப் பயந்த தேவர்களின் புகலிடமாய் விளங்கியது.

 

வெங்குரு - குரு பகவான் வழிபட்டது.

 

தோணிபுரம் - பிரளயகாலத்தில் இப்பதி தோணியாய் மிதந்ததால் இப்பெயர். பிரளய காலத்தில் இறைவன் தோணியில் காட்சித் தந்ததாலும் இப்பெயர்.

 

பூந்தராய் - பூமியைப் பிளந்து சென்று இரணியாக்கதனைக் கொன்ற வராகமூர்த்தி (திருமால்) வழிபட்டது.

 

சிரபுரம் - சிரசின் (தலை) கூறாய் உள்ள இராகுக் கிரகம் பூசித்தது.

 

புறவம் - புறா வடிவத்தில் வந்த அக்கினியால் சிபிச் சக்கரவர்த்தி பேறு பெற்றது.

 

சண்பை - சண்பை என்னும் கோரைப்புல்லால் மடிந்த தம்குலத்தோரால் நேர்ந்த பழி தீரக் கண்ணபிரான் (திருமால்) வழிபட்டது.

 

சீகாளி (ஸ்ரீகாளி) - காளிதேவி, சிதம்பரத்தில் நடராசப்பெருமானோடு வாதாடிய குற்றம் நீங்க, வழிபட்டது.

 

கொச்சைவயம் - மச்சகந்தியைக் கூடிய கொச்சை (பழிச்சொல்) நீங்கப் பராசரர் வழிபட்டது.

 

கழுமலம் - மலத் தொகுதி நீங்குமாறு உரோமசமுனிவர் வழிபட்டது.

குரு, இலிங்க, சங்கம வழிபாட்டு முறையில் பிரமன் பூசித்த பிரமபுரீஸ்வரர் இலிங்கமாகவும், ஞானசம்பந்தருக்கு ஞானப்பால் தந்தருளிய தோணியப்பர் குருமூர்த்தமாகவும், சட்டைநாதர் சங்கம வடிவினராகவும் உள்ளது. ஐந்தொழில்களைச் செய்தருளுவதற்கு இலிங்கமாகவும், பக்குவ ஆன்மாக்களுக்கு உபதேசம் புரிந்து, சிவஞானச்செல்வத்தை அளிப்பதற்குக் குருவடிவமாயும், பேரின்ப சித்திகளை அருளுவதற்கு சங்கம வடிவாயும், இறைவன் உள்ளார்.

 

சட்டைநாத சுவாமி இங்கு முக்கிய தெய்வமாகும். இரண்யனைக் கொன்ற நரசிங்கத்தைத் தடிந்து, அதன் தோலைச் சட்டையாகப் போர்த்துக் கொண்டதால், சுவாமித் இத்திருநாமத்தைக் கொண்டார்.

 

திருமுறை பாடல்கள் : பதிகங்கள்  : சம்பந்தர் -       பிரமபுரம் 1. தோடுடைய செவியன் (1.1), 2. எம்பிரான் எனக்கமுத (2.40), 3. கறையணி வேலிலர் (2.65 ), 4. கரமுனம் மலராற் (3.37),   5. இறையவன் ஈசன் (3.56); திருவேணுபுரம் 1. வண்டார்குழலரிவை (1.9), 2. நிலவும் புனலும் (2.17), 3. பூதத்தின் படையீனீர் (2.81); திருப்புகலி 1. மைம்மருபூங்குழல் (1.4),                                 2. விதியாய் விளைவாய் (1.30), 3. ஆடல் அரவசைத்தான் (1.104), 4. உகலி யாழ்கட (2.25) 5. முன்னிய கலைப்பொருளும் (2.29), 6. உருவார்ந்த மெல்லியாலோர் (2.54), 7. விடையதேறி வெறி (2.122), 8. இயலிசை யெனும் (3.3), 9. கண்ணுதலானும்வெண் (3.7); திருவெங்குரு 1. காலைநன் மாமலர் (1.75), 2. விண்ணவர் தொழுதெழு (3.94); திருத் தோணிபுரம் 1. வண்டரங்கப் புனற்கமல (1.60),   2. சங்கமரு முன்கைமட (3.81), 3. கரும்பமர் வில்லியைக் (3.100); திருப்பூந்தராய் 1. செந்நெலங்கழனி (2.1), 2. பந்துசேர்விரலாள் (3.2), 3. தக்கன் வேள்வி (3.5), 4. மின்னன எயிறுடை (3.13); திருச்சிரபுரம் 1. பல்லடைந்த வெண்டலை (1.47), 2. வாருறு வனமுலை (1.109), 3. அன்னமென்னடை அரிவை (2.102); திருப்புறவம் 1. நறவ நிறைவண்டறைதார்க் (1.74), 2. எய்யாவென்றித் தானவ (1.97),                                 3. பெண்ணிய லுருவினர் (3.84);                                 சண்பை 1. பங்கமேறு மதிசேர் (1.66), 2. எந்தமது சிந்தைபிரியாத (3.75); சீர்காழி 1. பூவார் கொன்றைப் (1.24), 2. அடலேறமருங் (1.34),                                 3. நல்லார் தீமேவுந் (1.81), 4. உரவார் கலையின் (1.102), 5. நல்லானை நான்மறை (2.11), 6. பண்ணின்நேர்மொழி (2.49), 7. நலங்கொள் முத்தும் (2.59), 8. விண்ணியங்குமதிக் (2.75), 9. பொங்குவெண்புரி (2.96), 10. நம்பொருள்நம் மக்கள் (2.97), 11. பொடியிலங்குந் திருமேனி (2.113), 12. சந்தமார் முலையாள் (3.43), 13. யாமாமாநீ யாமாமா (3.117); திருக்கொச்சைவயம் 1. நீலநன் மாமிடற்றன் (2.83), 2. அறையும் பூம்புனலோடும் (2.89), 3. திருந்துமா களிற்றிள (3.89); திருக்கழுமலம் 1. பிறையணி படர்சடை (1.19), 2. அயிலுறு படையினர் (1.79), 3. பந்தத்தால் வந்தெப்பால் (1.126), 4. சேவுயருந் திண்கொடியான்(1.129), 5. மண்ணில் நல்லவண்ணம் (3.24), 6. மடல்மலிகொன்றை (3.118); பல்பெயர்ப்பத்து 1. எரியார்மழு வொன்றேந்தி (1.63), 2. அரனை உள்குவீர் (1.90), 3. காடதணிகலங்கார (1.117), 4. பிரமபுரத்துறை பெம்மா (1.127), 5. ஒருருவாயினை (1.128), 6. பிரமனூர் வேணுபுரம் (2.70), 7. விளங்கியசீர்ப் பிரமனூர் (2.73), 8. பூமகனூர்புத்தேளுக் (2.74), 9. சுரருலகு நரர்கள் (3.67), 10. வரமதேகொளா (3.110), 11. உற்றுமை சேர்வது (3.113); அப்பர்                   -      1. பார்கொண்டு மூடிக் (4.82),                                  2. படையார் மழுவொன்று (4.83),                                  3. மாதியன்று மனைக்கிரு (5.45); சுந்தரர்                   -      1. சாதலும் பிறத்தலும் (7.58);   மாணிக்கவாசகர்          -     1. உம்பர்கட்கரசே (8.37) பிடித்தபத்து; பட்டினத்துப் பிள்ளையார்  -     1. திருவளர் பவளப் (11.28) திருக்கழுமல மும்மணிக் கோவை; பாடல்கள்    :  சம்பந்தர் -        புற்றில்வாழும் (1.002.11) காழி, வண்டுவைகும் (1.003.11) காழி,                                     பொன்னியல் தாமரை (1.005.11) காழி, நாலுங்குலைக் (1.006.11) காழி,                                       அன்புடை யானை (1.007.11) காழி, எண்டிசை யாரும் (1.008.11) காழி,                                     வெம்புந்திய (1.010.11) காழி, வீழிம்மிழ லைம்மேவிய (1.011.11) காழி,                                       தலமல்கிய (1.015.11) காழி, பொந்தின்னிடைத் (1.016.11) காழி,                                     கொடியார் (1.017.11) காழி, மாட மல்கு (1.27.11) காழி,                                     மெய்த்து லாவு (1.29.11) காழி, கல்லார்மதிற் (1.031.11) காழி,                                     கண்ணார்கமழ் (1.032.11) காழி, அரவார்புனல் (1.033.11) காழி,                                     நளிர்கா ழியுள்ஞான சம்பந்தன் (1.035.11) காழி, கலையார் கலிக்கா ழியர் (1.036.11) காழி,                                     நயர்கா ழியுள் (1.038.11) காழி, விண்ணியன் மாடம் (1.039.11) காழி,                                     கல்லுயர் (1.040.11) காழி, காமரு வார்பொழில் (1.043.11) காழி,                                     அகமலி அன்பொடு (1.44.11) காழி, சாந்தங் (1.045.12) சண்பை,                                    ஞாழல் கமழ் (1.046.11) காழி, தண்புனலும் (1.049.11) காழி,                                     மன்னி மாலொடு (1.55.11) காழி, விண்ட மாம்பொழில் (1.057.11) சண்பை,                                     மண்ணார் (1.059.11) காழி, கறையிலங்கு (1.061.11) காழி,                                     நம்பனை (1.062.11) காழி, துவர்சேர் (1.063.9 & 10) சண்பை & காழி,                                     திண்ணார்புரிசை (1.64.11) காழி, பத்த ரேத்தும் (1.65.11) காழி,                                    போரார்கடலிற் (1.68.11) காழி, அல்லாடரவம் (1.69.11) காழி,                                     குயிலார் (1.71.11) காழி, கருவார் பொழில்சூழ் (1.072.11) சண்பை,                                     மைச்செறி குவளை (1.77.11) காழி, மடைச்சுர மறிவன (1.78.11) காழி,                                     ஞாலத் துயர்காழி (1.80.11) காழி, மேனின் றிழிகோயில் (1.82.11) காழி,                                     தண்ணம் புனற்காழி (1.86.11) காழி, ஏரார் எருக்கத்தம் புலியூர் (1.89.11) காழி,                                            தென்றில் அரக்கனைக் (1.090.9 & 10) சண்பை & காழி,                                     காழி மாநகர் (1.92.11) காழி, பொன்னியல் (1.097.11) சண்பை,                                    மாடவீதி (1.99.11) காழி, தடமலிபொய்கை (1.100.11) சண்பை,                                     சிவனுறை (1.112.11) காழி,                                             இலங்கைத் தலைவனை (1.117.9 & 10) சண்பை & காழி,                                     திகைநான்கும் (1.119.11) காழி, கஞ்சத்தேன் உண்டிட்டே (1.126.11),                                    அன்னமலி (1.130.11) காழி, திக்கு லாம்பொழில் (2.003.11) காழி,                                     மாதொர் கூறுடை (2.004.11) காழி, பலிதி ரிந்துழல் (2.006.12) காழி,                                     தென்றல்துன் றுபொழில் (2.007.11) காழி, கந்த மார்பொழிற் (2.008.11) காழி,                                     மலியு மாளிகை (2.009.11) காழி, மந்த மாம்பொழில் (2.10.11) காழி,                                     அந்தண்பூங் (2.12.11) காழி, மருவாரு (2.14.11) காழி,                                     ஏய்ந்தசீ ரெழில் (2.15.11) காழி, கண்ணாருங் காழியர் (2.16.11) காழி,                                     வெண்நா வலமர்ந்துறை (2.23.11) காழி, கலமார் கடல்சூழ் (2.24.11)  காழி,                                                     நெண்ப யங்கு (2.026.11) சண்பை, கந்த மார்பொழில் (2.27.11) காழி,                                     கந்த மார்பொழில் (2.28.11) காழி, ஆடலரவார் சடையன் (2.33.11) காழி,                                     நல்லார் பயில் (2.35.11) காழி, எந்தை யிரும்பூளை (2.036.11) சண்பை,                                     காழிந் நகரான் (2.37.11) காழி, ஏனையோர் புகழ்ந்தேத் (2.38.11) காழி,                                     நொம்பைந்து (2.41.11) காழி, ஆடல் அமர்ந்தானை (2.42.11) காழி,                                     செடியாய வுடல்தீர்ப்பான் (2.43.11) காழி, தண்வயல்சூழ் காழித் (2.45.11) காழி,                                     ஆட லரவசைத்த (2.44.11) திருக்கொச்சைவயம்,                                       ஞாலம் புகழ் (2.46.11) காழி, தண்பொழில்சூழ் (2.048.11) சண்பை,                                     இந்து வந்தெழு (2.51.11) காழி, மையி னார் (2.53.11) காழி,                                     நளிரும் புனற்காழி (2.55.11) காழி, நளிர்பூந் திரைமல்கு (2.58.11) காழி,                                         ஞானம் உணர்வான் காழி (2.60.11) காழி, விடையார் கொடியான் (2.61.11) காழி,                                     நறவங் கமழ்பூங் காழி (2.63.11) காழி, அறையார் கடல்சூழ் (2.64.11) காழி,                                     சித்த வடிவிலர் போலுந் (2.65.3) காழி, பிறைவள ரும் (2.67.11) காழி,                                    விடைநவி லுங் (2.68.11) காழி, கலமல்கு தண் (2.69.11) காழி,                                     கல்வித் தகத்தால் (2.72.11) காழி, மென்சிறை (2.078.11) சண்பை,  காடதிட மாகநட மாடுசிவன்                                                                      பல்லிதழ் மாதவி (2.79.11) காழி, அல்ல லின்றி (2.82.11) காழி,                                     கடல்வரை (2.84.11) காழி, எரியொரு வண்ணமாய (2.86.11) காழி,                                     கானலு லாவியோதம் (2.87.11) காழி, அணிகொண்ட (2.88.11) காழி,                                     கறையி னார் (2.90.11) காழி, மையு லாம் பொழில் (2.91.11) காழி,                                     வெந்த நீற்றினர் (2.93.11) காழி, நலங்கொள் பூம்பொழிற் காழி (2.94.11) காழி,                                     அல்லி நீள்வயல் சூழ்ந்த (2.95.11) காழி, கழியொடுலவு கானல்சூழ் காழி (2.100.11) காழி,                                     மாறு தன்னொடு (2.103.11) காழி, மாதொர் கூறனை (2.106.11) காழி,                                     மாடெ லாமண (2.107.11) காழி, விலங்க லேசிலை யிடமென (2.108.11) காழி,                                     பந்து லாவிரற் (2.109.11) காழி, வாய்ந்த செந்நெல் (2.114.11) காழி,                                     மல்குதண்பூம் (2.116.11) காழி, மந்தமாரும் பொழில்சூழ் (2.118.11) காழி,                                     மல்லையார் (2.120.11) காழி, அந்தண்நல் லாரகன் (2.121.11) காழி,                                     நாறுபூம்பொழில் (3.001.11) காழி, வெந்த வெண் நீறணி (3.008.11) காழி,                                     வேதியர் கைதொழு (3.009.11) காழி, பொற்றொடி யாளுமை (3.011.11) காழி,                                     கொடியுயர் (3.12.11) காழி, கண்புனல் விளைவயற் (3.014.11) காழி,                                     நற்றவர் காழியுள் (3.016.11) காழி, மைந்தன திடம்வைகல் (3.018.11) சண்பை,                                       புண்ணியர் தொழுதெழு (3.020.11) காழி, கானலில் விரைமலர் (3.21.11) காழி,                                     நற்றமிழ் ஞானசம்பந்தன் (3.22.11) காழி, சேடர்தே வன்குடித் (3.25.11) காழி,                                     காட்டகத் தாடலான் (3.26.11) காழி, நீரினார் புன்சடை (3.30.11) காழி,                                     திண்ணினார் புறவணி (3.34.11) காழி, தேனலார் சோலைசூழ் (3.35.11) காழி,                                     அட்டமா சித்திகள் (3.36.11) காழி, கருத்தனைப்பொழில் (3.38.11) காழி,                                     அந்தண் காழிப் (3.40.11) காழி, கல்லிலோதம் மல்குதண் (3.42.11) காழி,                                         அந்தண் காழி (3.44.11) காழி, வன்னி கொன்றை (3.45.11) காழி,                                     மந்தம் உந்து (3.48.11) காழி, ஊழியூழி வையகத் (3.53.11) காழி,                                    கன்றா ருங்கமுகின் (3.55.11) காழி, ஒண்பிறை (3.057.11) சண்பை,                                     மறையினார் மல்குகாழித் (3.58.11) காழி, தண்புன லும் (3.060.11) சண்பை,                                     திண்ணம ரும் (3.061.11) சண்பை, தண்வயல் சூழ்பனந்தாள் (3.62.11) காழி,                                     செந்தண்பூம் புனல்பரந்த (3.63.11)  காழி, கண்ணாருங் கலிக்கச்சி (3.65.11) காழி,                                     தெண்டிரைசேர் (3.66.11) காழி, விண்பயில (3.067.9 & 10) சண்பை & காழி,                                     நிணந்தரும யான (3.70.11) காழி, கடைகொள் (3.72.11) காழி,                                     மந்தமுர வங்கடல் (3.76.11) காழி, உந்திவரு (3.77.11) காழி,                                     கந்தமலி தண்பொழில் (3.78.11) காழி, கோடலர வீனும் (3.79.11) காழி,                                     தாழிளங் காவிரி வடகரை (3.91.11) காழி, செம்பொன் (3.93.11) காழி,                                           விண்பயில் (3.098.11) சண்பை, ஆழியுள் (3.105.11) காழி,                                     வாழியெம் மானெனக் (3.106.11) காழி, கூடல் ஆலவாய்க் கோனை (3.108.11) காழி,                                       பண்பு சேரிலங் கைக்கு (3.110.9 & 10) சண்பை & காழி,                                     சந்த மார்பொழில் (3.111.11) சண்பை, நின்மணி (3.113.9 & 10) சண்பை & காழி,                                     ஈனஞானிகள் (3.115.11) காழி, மேய செஞ்சடையின் (3.116.11) காழி,                                     பன்னலம் புணரும் (3.120.11) காழி, விளைதரு வயலுள் (3.122.11) காழி,                                     குற்றமி லாதார் (3.123.11) காழி, நறும்பொழிற் காழியுள் (3.125.11) காழி,                                     ஆறும் மதியும்பொதி (3.126.11) காழி;                                                                            அப்பர்   -        காழி யானைக் (5.03.9) காழி, புல்ல மூர்தியூர் (5.65.5) காழி,                                     திருநீர்ப் புனற்கெடில (6.7.7 & 12) காழி, பூவார்ந்த சென்னிப் (6.32.9) காழி,                                     உரியாய் (6.57.6) காழி, தில்லைச் சிற்றம்பலமுஞ் (6.70.1,2 & 7) புறவம், பிரமபுரம் & காழி,                                     பொடியாடு மேனிப் (6.73.4) காழி, உரித்தானைக் களிறதன் (6.86.2) காழி;             சுந்தரர்        -        வார்கொண்ட வனமுலையாள் (7.39.6)காழி, ஏன மருப்பினொ டும் (7.97.9) காழி;       மாணிக்கவாசகர்    -        தெள்ளம் புனற்கங்கை (8.25.28) திருக்கோவையார் - இருபத்தைந்தாம் அதிகாரம் - பரத்தையிற் பிரிவு; பூந்துருத்திநம்பி காடநம்பி -        எம்பந்த வல்வினை நோய் (09.19.4) கோயில் - திருவிசைப்பா,      புருடோத்தம நம்பி    -        நோக்காத தன்மையால் (9.27.10) கோயில் - திருவிசைப்பா,    நக்கீரதேவ நாயனார்  -        தவறுபெரி துடைத்தே (11.15.1) கோபப் பிரசாதம்,  பட்டினத்துப் பிள்ளையார் -        திருவளர் பவளப் (11.28),     நம்பியாண்டார் நம்பி  -        வையம் மகிழயாம் வாழ (11.33.19,29,30,34,35,47,61,63,84,87 & 100) திருத்தொண்டர் திருவந்தாதி,                                     மன்னிய மோகச் (11.34.3,5,9,14,15,20,21,24,31,44,46,51,58,60,61,62,64,65,69,77,82,83,86,87,95,96,98 & 100) ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி,                                     பாலித் தெழில் (11.35.1,2,3,4,5,6,7,8,9,10 & 11) ஆளுடையபிள்ளையார் திருச்சண்பை விருத்தம்,                                    திங்கட் கொழுந்தொடு (11.36.1,5,6,9,11,12,14,15,16,17,23,25,26,27,28 & 29) ஆளுடைய பிள்ளையார் திருமும்மணிக்கோவை,                                     பிரமனூர் வேணுபுரம் (11.37.12,56,82 & 125) ஆளுடையபிள்ளையார் திருவுலாமாலை,                                     தண்டமிழ் விரகன் (11.38.1,2,3,8,11,13,14,16,19,20,30,35,36, 40,43 & 45) ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம்,                                    பூவார் திருநுதல்மேல் (11.39.1) ஆளுடைய பிள்ளையார் திருத்தொகை;           சேக்கிழார்       -       இருக்கோலம் இடும்பெருமான் (12.5.114) தடுத்தாட்கொண்ட புராணம்,                                       சிலபகல் கழிந்த பின்பு (12.11.32) குங்குலியக் கலய நாயனார் புராணம்                                     பிரம புரத் திரு முனிவர் (12.21.178,186,233,237,236,250,272,286,391,393,394 & 401) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்,                                     புன்னயத் தருகந்தர் (12.22.10) குலச்சிறை நாயனார் புராணம்,                                    பிள்ளையார் எழுந்து அருளிய (12.26.27 & 37) திருநீலநக்க நாயனார் புராணம்,                                     பண்பு மேம்படு (12.26.23 & 36) திருநீலநக்க நாயனார் புராணம்,                                     மண் உலகு செய்த தவப் பயனாய் (12.28.14,25,26,30,33,48,76,91,97,104,105,109,111,124,131,137,139,160,162,165,171,204,205,207,211,229,256,257,277,281,285,318,320,322,332,346,348,360,389,419,422,458,478,479,481,499,507,519,523,526,529,531,547,551,552,554,559,565,571,576,577,580,588,595,598,612,618,654,671,673,686,706,727,736,745,746,779,795,827,833,837,844,845,864,872,875,877,892,898,903,912,913,925,926,930,934,942,950,956,974,975,985,986,989,990,1008,1016,1017,1025,1053,1069,1075,1111,1112,1147,1148,1153,1154,1161,1165,1190 & 1193) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.                                     மூவாத முழு முதலார் (12.29.155) ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்,                                     பொன்னி நீர் நாட்டின் (12.35.1) சிறப்புலி நாயனார் புராணம்,                                                               அந் நாளில் சண்பை நகர் (12.36.23 & 24) சிறுத்தொண்ட நாயனார் புராணம்,                                     மலை மலிந்த (12.37.175) கழறிற்றறிவார் நாயனார் புராணம்,                                     ஆய அன்பர் (12.38.1,2 & 5) கணநாத நாயனார் புராணம்,                                     மங்கையர்க்குத் தனி அரசி (12.66.1) மங்கையர்க்கரசியார் புராணம்,                                    ஆழி சூழும் திருத் தோணி (12.69.10) திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் புராணம்;

 

தல மரம் : பாரிஜாதம்

Specialities

 

"திருமுலைப்பால் உற்சவம்" இன்றும் சித்திரைப் பெருவிழாவில், இரண்டாம் நாள் விழாவாகக் கொண்டாடப்படுகிறது.

 

திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தரின் நட்பைப் பெற்று, அவரால் அப்பர் எனப் பெயரும் பெற்றப் பதி.

 

சுந்தரர் இங்கு வந்தபோது, இஃது, சம்பந்தப்பெருமான் அவதரித்தபதி என்று மிதிப்பதற்கு அஞ்சி நகர்புறத்து நின்று பாட, இறைவர் காட்சி தந்த பதி.

 

திருநீலகண்ட யாழ்ப்பாணர், சம்பந்தரை வணங்கி, அவருடைய பதிகங்களை யாழிலிட்டு வாசித்து, சம்பந்தருடன் இருக்கும் பெருமைப் பெற்ற பதி.

 

கணநாத நாயனார் அவதரித்தத் திருப்பதி. இத்திருக்கோயில் வளாகத்தில் கணநாத நாயனாரின் திருவுருவச் சிலை உள்ளது.

  • அவதாரத் தலம் : சீர்காழி. வழிபாடு : குரு வழிபாடு. முத்தித் தலம் : சீர்காழி. குருபூசை நாள் : பங்குனி - திருவாதிரை.

 

பிற்கால சோழ, பல்லவ, விஜயநகர மன்னர்களின் கல்வெட்டுகள் மொத்தம் நாற்பத்தாறு உள்ளன.

 

மாணிக்கவாசகர், பூந்துருத்திகாடநம்பி, பட்டினத்து அடிகள் - (திருக்கழுமல மும்மணிக்கோவை), நம்பியாண்டார் நம்பிகள் - (ஆளுடையபிள்ளையார் திருவந்தாதிஆளுடையபிள்ளையார் திருச்சண்பை விருத்தம்ஆளுடையபிள்ளையார் திருமும்மணிக்கோவைஆளுடையபிள்ளையார் திருவுலாமாலைஆளுடையபிள்ளையார் திருக்கலம்பகம்ஆளுடையபிள்ளையார் திருத்தொகை), அருணகிரிநாதர், தருமையாதீனத்துப் பத்தாவது குருமூர்த்தி சிவஞானதேசிகர், திருவாவடுதுறை ஆதீனத்து எட்டாவது குருமூர்த்தி மாசிலாமணி தேசிகர், மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை, அருணாச்சலக்கவிராயர் முதலியோர் சீர்காழியின் சிறப்பையும், திருஞானசம்பந்தரின் பெருமைகளையும் பாடிப் புகழ்ந்துள்ளனர்.

 

சீர்காழி அருணாச்சலக்கவிராயர் இத்திருக்கோயிலுக்கு தலபுராணம் பாடியுள்ளார்.

 

இது, தருமைபுர ஆதீனத்துக்குச் சொந்தமானது.

 

இரண்டாம், மூன்றாம் குலோத்துங்கச் சோழன், வீரராஜேந்திரன், இராசகேசரி வர்மன், கிருஷ்ணதேவராயர் காலத்திய கல்வெட்டுகள் கிடைத்துள்ளன.

Contact Address

அமைவிடம் அ/மி. பிரமபுரீசுவரர் திருக்கோயில், அ/மி. சட்டைநாத சுவாமித் திருக்கோயில், சீர்காழி & அஞ்சல் - 609 110. சீர்காழி வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம். தொலைபேசி : 04364 - 270235.

Related Content

தென்திருமுல்லைவாயில் கோயில் தலவரலாறு