logo

|

Home >

hindu-hub >

temples

திருநல்லூர்ப்பெருமணம் (ஆச்சாள்புரம்) கோயில் தலவரலாறு

இறைவர் திருப்பெயர்: சிவலோகத் தியாகேசர்,பெருமணமுடைய மகாதேவர்.

இறைவியார் திருப்பெயர்: வெண்ணீற்று உமை நங்கை, சுவேத விபூதி நாயகி, விபூதிகல்யாணி.

தல மரம்:

தீர்த்தம் : பஞ்சாட்சரதீர்த்தம் முதலான 11 தீர்த்தங்கள்.

வழிபட்டோர்:சம்பந்தர், சேக்கிழார், பிரமன், முருகன், பிருகு, வசிஷ்டர், அத்ரி, வியாசர், மிருகண்டு, அகத்தியர், ஜமதக்னி. (காகபுசுண்டரிஷி ஐக்கியமான தலம்).

Sthala Puranam

Nalloorpperumanam templeHoly pond of the temple

 

மக்கள் வழக்கில் ஆச்சாள் புரம் என்று வழங்கப்படுகிறது.

 

நல்லூர் - ஊரின் பெயர்; பெருமணம் - கோயிலின் பெயர்.

 

ஞானசம்பந்தருக்கு திருமணம் நடந்ததும்; அவர், திருமணக் கோலத்துடன் சோதியுள் கலந்ததும் இத்தலத்தில்தான். (திருமணத்திற்கு வந்த அத்தனைப்பேரும் அந்த அற்புத சோதியுள் கலந்தார்கள்.)

 

திருமுறைப் பாடல்கள் : பதிகங்கள்  :   சம்பந்தர்   - 1. கல்லூர்ப் பெருமணம் (3.125); பாடல்கள்   :  சேக்கிழார்  -   தவ அரசு ஆள உய்க்கும் (12.28.1162,1163,1206 & 1245) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.

Specialities

 

சம்பந்தர் மணக்கோலத்துடன் சோதியுள் கலந்த காரணம் பற்றி இத்தலத்திற்கு முத்தித்தலம் என்றும் பெயருண்டு.

 

இக்கோயிலில் ஞானசம்பந்தர் திருமணம் செய்துகொண்ட 'தோத்திர பூர்ணாம்பிகை' அம்மையுடன் மணகோலத்தில் உள்ள மூலத்திரு மேனிகள் உள்ளன.

 

சுவாமி சந்நிதி வாயிலில் மேற்புறம், ஞானசம்பந்தர் சோதியில் ஐக்கியமான காட்சி வண்ண சுதை ஓவியமாக உள்ளது.

 

ஞானசம்பந்தர் மனைவியுடன் (தோத்திர பூர்ணாம்பிகை) இத்தலத்தில் இருப்பது விசேஷமானது.

 

உள்வாயிலில் இருபுறமும் தலப் பதிகக் கல்வெட்டுக்கள் உள்ளன.

 

நால்வரைத் தொடர்ந்து, அறுபத்துமூவர் சந்நிதியில் - நாயன்மார்கள் பெயர், குருபூசை நாள் நட்சத்திரம் முதலியன எழுதப்பட்டு அழகாகவுள்ளன.

 

சோழ, பாண்டிய, மகாராட்டிர மன்னர்கள் காலத்திய கல்வெட்டுக்கள் உள்ளன; கல்வெட்டில் இறைவன் 'திருப்பெருமண முடைய மகாதேவர் ' என்று குறிக்கப்படுகின்றார்.

 

நாடொறும் ஆறு கால வழிபாடுகள் செம்மையாக நடைபெறுகின்றன.

 

இத்தலபுராணம் கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகரால் பாடப்பட்டுள்ளது.

  

தல புராணங்கள்                                                                                                                                                                                    

ஆசிரியர்                                                            

 

திருப்பெருமணநல்லூர்த் திருவெண்ணீற்றுமை பிள்ளைத்தமிழ்மீனாட்சி சுந்தரம்பிள்ளை

 

Contact Address

அமைவிடம் இந்தியா - மாநிலம் : தமிழ் நாடு இத்தலம் சிதம்பரம் - சீர்காழி சாலையில், கொள்ளிடத்திலிருந்து 8-கி.மீ. தொலைவில் உள்ளது.
தொடர்புக்கு :- 04364 - 278 272.

Related Content