பரிய மாசுணங் கயிறாப்
பருப்பத மதற்குமத் தாகப்
பெரிய வேலையைக் கலங்கப்
பேணிய வானவர் கடையக்
கரிய நஞ்சது தோன்றக்
கலங்கிய அவர்தமைக் கண்டு
அரிய ஆரமு தாக்கும்
அடிகளுக் கிடம்அர சிலியே. 6
இப்பதிகத்தில் 7-ம்செய்யுள் சிதைந்து போயிற்று. 7
வண்ண மால்வரை தன்னை
மறித்திட லுற்றவல் அரக்கன்
கண்ணுந் தோளுநல் வாயும்
நெரிதரக் கால்விர லூன்றிப்
பண்ணின் பாடல்கைந் நரம்பாற்
பாடிய பாடலைக் கேட்டு
அண்ண லாயருள் செய்த
அடிகளுக் கிடம்அர சிலியே. 8
குறிய மாணுரு வாகிக்
குவலயம் அளந்தவன் தானும்
வெறிகொள் தாமரை மேலே
விரும்பிய மெய்த்தவத் தோனும்
செறிவொ ணாவகை யெங்குந்
தேடியுந் திருவடி காண
அறிவொ ணாவுரு வத்தெம்
அடிகளுக் கிடம்அர சிலியே. 9