கரிய மாலுஞ் செய்ய
பூமேல் அயனுங் கழறிப்போய்
அரிய அண்டந் தேடிப்
புக்கும் அளக்க வொண்கிலார்
தெரிய அரிய தேவர்
செல்வந் திகழுங் குடமூக்கில்
கரிய கண்டர் கால
காலர் காரோ ணத்தாரே. 9
நாணார் அமணர் நல்ல
தறியார் நாளுங் குரத்திகள்
பேணார் தூய்மை1 மாசு
கழியார் பேச லவரோடும்
சேணார் மதிதோய் மாட
மல்கு செல்வ நெடுவீதிக்
கோணா கரமொன் றுடையார்
குடந்தைக் காரோ ணத்தாரே.
பாடம் : 1தாமெய் 10
கருவார் பொழில்சூழ்ந் தழகார்
செல்வக் காரோ ணத்தாரைத்
திருவார் செல்வம் மல்கு
சண்பைத் திகழுஞ் சம்பந்தன்
உருவார் செஞ்சொல் மாலையிவைபத்
துரைப்பா ருலகத்துக்
கருவா ரிடும்பைப் பிறப்ப
தறுத்துக் கவலை கழிவாரே.
சுவாமி : சோமநாதர்; அம்பாள் : சோமசுந்தரி. 11