இறைவர் திருப்பெயர்: அருணாசலேஸ்வரர், அண்ணாமலையார்.
இறைவியார் திருப்பெயர்: அபீதகுஜாம்பாள், உண்ணாமுலை.
தல மரம்:
தீர்த்தம் : கோயிலுக்கு உள்ளும் வெளியிலும் மலைப்பகுதியிலுமாக 360 தீர்த்தங்கள் உள்ளன. பிரம தீர்த்தம் , சிவகங்கை தீர்த்தம், அக்கினி தீர்த்தம், அஸ்வினி தீர்த்தம், இந்திர தீர்த்தம். எட்டு திக்குகளிலும் திக் பாலகர்கள் செய்த தீர்த்தங்கள் உள்ளன - இந்திர தீர்த்தம், அக்னி தீர்த்தம், எம தீர்த்தம், நிருதி தீர்த்தம், வருண தீர்த்தம், வாயு தீர்த்தம், குபேர தீர்த்தம் போன்றவை.
வழிபட்டோர்:சூரியன், பிரதத்தராஜன், அஷ்டவசுக்கள், பிரமதேவன், சந்திரன், திருமால், உமை, முருகன், புளகாதிபன், விசுவாமித்திரர், பதஞ்சலி, வியாக்ரபாதர், அகத்தியர், சனந்தனர், சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், நக்கீரர், பரணர், கபிலர், பட்டினத்தார், சேக்கிழார், இடைக்காட்டு சித்தர், அருணகிரிநாதர், ஈசான்ய ஞானதேசிகர், குரு நமச்சிவாயர், குகை நமச்சிவாயர், ரமணமகரிஷி, சேஷாத்ரி சுவாமிகள், விசிறி சாமியார், அம்மணியம்மன், சைவ எல்லப்பநாவலர் போன்ற எண்ணற்ற தேவர், முனிவர், சித்தர்கள், அடியார் பெருமக்கள்.
Sthala Puranam

உமையம்மை இங்கு தவம் இருந்து சிவபெருமான் திருமேனியில் ஒரு பாகம் பெற்றார்
திருமுறை பாடல்கள் பதிகங்கள் : சம்பந்தர் - 1. உண்ணாமுலை உமையாளொடும் (1.10), 2. பூவார்மலர்கொண் டடியார் (1.69); அப்பர் - 1. ஓதிமா மலர்கள் தூவி (4.63), 2. வட்ட னைமதி சூடியை (5.4), 3. பட்டி ஏறுகந் தேறிப் (5.5); மாணிக்கவாசகர் - 1. ஆதியும் அந்தமும் (8.7), 2. செங்கண் நெடுமாலுஞ் (8.8); பாடல்கள் : சம்பந்தர் - பெண்ணாண் எனநின்ற (1.84.2), அண்ணாமலை யீங்கோயும் (2.39.2), அண்ணாவுங் கழுக்குன்றும் (3.64.1); அப்பர் - தீர்த்தப் புனற் (6.7.2), ஊக முகிலுரிஞ்சு (6.16.5), கண்ணார்ந்த நெற்றி (6.21.8), விண்ணோர் பெருமானை (6.22.2), மூரி முழங்கொலி (6.23.5), அண்ணா மலையமர்ந்தார் (6.51.3), விண்ணோர் பரவ (6.82.2); சுந்தரர் - தென்னாத் தெனாத் (7.2.6), கடங்களூர் திருக்காரிக் (7.31.3), தேனைக் காவல் (7.47.7); மாணிக்கவாசகர் - வெளியிடை ஒன்றாய் (8.4.149), அண்ணா மலையான் (8.7.18), விண்ணாளுந் தேவர்க்கு (8.8.10); பரணதேவ நாயனார் - மதியாரும் செஞ்சடையான் (11.23.38,42); சேக்கிழார் - அண்ணாமலை மலை மேல் (12.21.313) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம், அண்ணாமலை (12.28.970) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.
Specialities

நகரம் மற்றும் கோவில் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்
கிழக்கு கோபுரத்தில் நடனக் கலையும் பிறவுமாகிய சிற்பங்கள் ஏராளமாக உள்ளன.
உற்சவங்கள்
கார்த்திகை தீபம், ஆடிப்பூரம் உத்தராயண தக்ஷிணாயன புண்ணிய காலங்கள். சித்திரை வசந்த விழா, கந்த சஷ்டி, பாவை விழா, பங்குனி உத்திரம் முதலிய விழாக்கள் சிறப்புடையன.கார்த்திகை தீபத் திருவிழா
பதிவான வரலாறு மற்றும் கோவில் கல்வெட்டுகள்
விஜய நகரப் பேரரசர் கிருஷ்ண தேவராயர் திருவண்ணாமலை திருக்கோயிலுக்கு இருபது பெரிய திருப்பணிகளை செய்தார். அந்த திருப்பணிகள் ஒவ்வொன்றும் இன்றும் திருவண்ணாமலையில் கிருஷ்ண தேவராயரை நினைவுபடுத்திக் கொண்டிருக்கின்றன. 217 அடி உயரத்தில் கம்பீரமாக ஓங்கி உயர்ந்து நிற்கும் கிழக்கு ராஜகோபுரம், சிவகங்கைத் தீர்த்தக்குளம், ஆயிரம் கால் மண்டபம், இந்திர விமானம், விநாயகர் தேர், திருமலைத்தேவி அம்மன் சமுத்திரம் என்ற நீர்நிலை, ஏழாம் திருநாள் மண்டபம், சன்னதியில் உள்ள 2 கதவுகள், வாயில் கால்களுக்கு தங்க முலாம் பூசியது, உண்ணாமுலை அம்மன் ஆலய வாயில் கால்கள், கதவுக்குத் தங்க முலாம் பூசியது, உண்ணாமுலை அம்மன் சன்னதிக்கு முன் ஆராஅமுதக்கிணறு வெட்டியது, அண்ணாமலையார்க்கும் உண்ணாமுலை அம்மனுக்கும் கிருஷ்ணராயன் என்ற பெயரில் பதக்கம் செய்து கொடுத்தது, நாகாபரணம், பொற்சிலை, வெள்ளிக்குடங்கள் ஆகியவை கிருஷ்ண தேவராயரின் முக்கிய திருப்பணிகளில் சில.| தாலுகா | நன்செய் (ஏ.செ.) | புன்செய் (ஏ.செ.) |
| திருவண்ணாமலை | 49.36 | 231.63 |
| போளூர் | 3.96 | - |
| செங்கம் | 12.65 | 17.98 |
| திருக்கோவலூர் | 4.82 | 6.31 |
| விழுப்புரம் | 17.29 1/2 | 24.70 |
| செஞ்சி | 1.40 | - |
| 89.48 1/2 | 280.62 |
கடைகள் விவரம்
தேர்முட்டித் தெரு 11
அண்ணாமலையார் நிலையம் 24
விநாயகர் நிலையம் 10
16 கால் மண்டபம் 26
தரகுமண்டி வர்த்தக சங்கம் 4
உண்ணாமுலையம்மன் நிலையம் 23
பெரியகடைத்தெரு 1
சேடத்தெரு வீடு 1
சந்நிதி தலம், காலி மனைகள்
சந்நிதி தலம் 47
தேரடித் தெரு 21
சக்கரைத் தீர்த்தம் 14
விடுதிகள் விவரம்
உண்ணாமுலையம்மன் வழிபடுவோர் விடுதி
சி.வி.சி.டி.வி. டிரஸ்ட் விடுதி
பி.வி.ஆர்.எம். குழந்தையன் செட்டியார் விடுதி
எம்.சி.டி.எம். டிரஸ்ட் சென்னை விடுதி
திருக்கோயில் விடுதி
அப்பர் இல்லம்
திருக்கோயில் பழைய விடுதி
சென்னையிலுள்ள சொத்து விவரம் (வீட்டு மனைகள்)
சென்னை அடையாறு ஊரூர் கிராமம் 30ஏ.18செ
சென்னை மிர்சாஹிப் பேட்டை 7ஏ
சென்னை தண்டையார்பேட்டை தனபால் நகர் 23 கிரௌண்ட்
திருவண்ணாமலை ஒலிப்பதிவுகள்
திருவண்ணாமலை மீது பாடப்பட்ட நூல்களில் சில
| நூல் | ஆசிரியர் |
| | சிவானந்தமூர்த்தி |
| | ஶ்ரீ அருணாச்சலேசர் |
| | சபாபதி முதலியார் |
| அருணாசல அக்ஷரமாலை | சபாபதி முதலியார் |
| அருணாசல அக்ஷரமணமாலை | ரமணர் |
| அருணாசல நவமணிமாலை | ரமணர் |
| அருணாசலப் பதிகம் | ரமணர் |
| அருணாசல பஞ்சரத்னம் | ரமணர் |
| அருணாசல அஷ்டகம் | ரமணர் |
| அருணாசலீசர் பதிகம் | புரசை சபாபதி முதலியார் |
| | நமச்சிவாய சுவாமிகள் |
| அருணாசலேசர் வண்ணம் | கள்ளப்புலியூர் பர்வதசஞ்சீவி |
| அருணாசலக் கீர்த்தனைகள் | காஞ்சிபுரம் வீரணப் புலவர், உளுந்தூர்ப்பேட்டை சண்முகம் |
| | குகைநமச்சிவாயர் |
| திருவருணைத் தனிவெண்பா | குகைநமசிவாய சுவாமிகள் |
| அருணைப் பதிற்றுப்பத்து அந்தாதி | வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் |
| அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை | சிந்நயச் செட்டியார் |
| | சோணாசல முதலியார் |
| | சைவ எல்லப்பநாவலர் |
| திருவருணையந்தாதி | சைவ எல்லப்பநாவலர் |
| | மறைஞானதேசிகர் |
| | நா. கதிரைவேற்பிள்ளை |
| | சைவ எல்லப்ப நாவலர் |
| திருவருணைக் கலம்பகம் | சைவ எல்லப்ப நாவலர் |
| | வள்ளலார் |
| திருவண்ணாமலைப் பதிகம் -1 | திருக்குருகூர் ஸ்ரீமத் ஞானசித்த சுவாமிகள் |
| திருவண்ணாமலைப் பதிகங்கள் -2 | திருக்குருகூர் ஸ்ரீமத் ஞானசித்த சுவாமிகள் |
| திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் பதிகம் | |
| | சோணாசல முதலியார் |
| | திருச்சிற்றம்பல நாவலர் |
| | குரு நமச்சிவாய சுவாமிகள் |
| அண்ணாமலையார் வண்ணம் | நல்லூர் தியாகராச பிள்ளை |
| அண்ணாமலை பஞ்சரத்தினம் | |
| சோண சைல மாலை | சிவப்ரகாச சுவாமிகள் |
| | திருவேங்கடநாயுடு |
| சோணாசல வெண்பா | சோணாசல முதலியார் |
| | சோணாசல முதலியார் |
| சோணசைலப் பதிகம் | சோணாசல பாரதி |
| உருத்திர சங்கிதைத் தோத்திரம் | |
| உண்ணாமுலையம்மன் பதிகம் | |
| உண்ணாமுலையம்மை வருகைப் பதிகம் | பிரதாபம் சரவணப் பெருமாள் பிள்ளை |
| உண்ணாமுலையம்மன் சதகம் | மகாவித்வான் சின்னகவுண்டர் |
| திருவருணை உண்ணாமுலையம்மை பிள்ளைத்தமிழ் | சோணாசல முதலியார் |
Contact Address