logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

உண்ணாமுலையம்மை வருகைப் பதிகம் (பிரதாபம் சரவணப் பெருமாள் பிள்ளை)

திருச்சிற்றம்பலம்

(பிரதாபம் சரவணப் பெருமாள் பிள்ளை)

காப்பு வெண்பா

ஓங்குபெரும் பாருதவு முண்ணாமுலை யனைமேற்
பாங்குபெறுஞ் செந்தமிழிற் பாவுரைக்க - நீங்கரிய
வெந்துயரெ லாம்போக்கும் வேழமுகன் செய்ததிருக்
கந்தமலர்ச் செஞ்சரணங் காப்பு.


            ஆசிரிய விருத்தம்

சீர்கொண்ட வாழி மிசைபள்ளிகொண்ட திருமாலுண்டக மீடை
யூர்கொண்டநான் முகனும்பரந்து விடைகொண்டசிந்தை யொடுத்தே
டேர்கொண்டவன்னி மலைநாதர் வாம மிழைகொண்டமின்ன லிடையாய்
வார்கொண்ட வுண்ணா முலைநாமதேவி வரவேண்டுமென்ற னருகே.  (1)

நறவாடரும்பு வனசம்பிறங்கு நனிவாவிசூழ மிளவெண்
பிறைநீடுசெஞ்சா டவிகண்டனாறு பெருகுஞ்சிறந்த வெழிலார்
நிறையோடுகின்ற கிரியும் விளங்க நிலைவாவ வாலை நெடுநான்
மறைதேடு முண்ணா முலைநாமதேவி வரவேண்டுமென்ற  னருகே.  (2)

வலையாய் மிலைந்த விரிநீருடுத்த கவினார்புவிப்பெ  ணவ
டலையாய் விளங்கி பணவாதிசேட சயனஞ்சிரங்க
சிலையாய் நீவந்த தனிஞானதீப சிகைகொண் டளாவுநெடிய
வலைமேவு முண்ணா முலைநாமதேவி வரவேண்டுமென்ற  னருகே.  (3)

பொன்னிற்பரந்த புவியிற் பொருந்து புளகுற்றமாதர் மயலிற்
சென்னிக்கண்வைத்து மருள்வேனை பொய்யில் திரிவேனை சற்று மிளகாக்
கொன்னைச் சொலேனை கொடுமைக் குளேனை குறைதீரவுண்க ணருளான்
மன்னிக்குமுண்ணா முலை நாமதேவி வரவேண்டுமென்ற னருகே. (4)

எந்தாய்வினின்க ணிமையோர்பரவு மிமயந்தரும்   பெணுமையென்
சிந்தாகுலங்க ளடியேடகழ்ந்து சிதறும்படிச் செய்திருவின்
பந்தானரும்பி யடியேனுளத்தைப் பருகும் பசுங்கிளி யென்முன்
வந்தாள்க வுண்ணா முலைநாமதேவி வரவேண்டுமென்ற னருகே.  (5)

சற்றாகிலும்மு ளுடையாவுலத்தர் சமூகத்திலேகி கவிபாடித் தாழ்வுறாம
லிணையம்புயங்க ளெனுநின்  சரண்க ளெளியேன்
வித்தாரமான தமிழ்பாடி ஞான விறன்மேவவைத் திடுதிபால்
வற்றாத வுண்ணா முலை நாமதேவி வரவேண்டுமென்ற னருகே.  (6)

அயனாவினுங்க ணரிமார்பி  னுஞ்சே வரனார்மருங்கு மிடலி
நயனாரவிந்த மொருவாயிரங்க ணகுமிந்தரன்ற னுழியும்
உயமண்பிலங்கொ ளுயிர்தோறுகின்ற னுருதேசனன்றி யுளவோ
மயமாது வுண்ணா முலைநாமதேவி வரவேண்டுமென்ற னருகே.  (7)

கறுவீடுதேச மதிலாறுவீடு கடைவீடு வுச்சி நடுவிற்
பெறுவீடுகாட்சி மணல்வீடு கட்டு பிசியேனெடுக்க வசமோ
எரிவீடெனச்சொல் இடுகாடுபோமு னெளியேன் முனேகி
வருவாய் மருவீடுவுண்ணா முலைநாமதேவி வரவேண்டுமென்ற னருகே. (8)

அரவுண்டநஞ்ச மதுதீரவென்பு மருமங்கையாகி வரவும்
பெருநீரிலோலை யெதிறேரமாறன் பிணியான வெப்பகலவும்
திருவார்ந்தஞான வமுதங்கறந்து சீர்காழியற் குதவவே
வருசெல்வியுண்ணா முலைநாமதேவி வரவேண்டுமென்ற னருகே.  (9)

சுழியூடெழுந்த வழல்சோதி நீடு சுவைகண்டு வுன்னு மறிவை
யிழைவாடுகின்ற வெனையாரெனச் சொ லிடுவேனேவர்க்கு முறவாம்
ஒழிவாடுமோன தனிஞானியான வுமையேதிணீல மிடறோன்
வழிபாடு முண்ணா முலைநாமதேவி வரவேண்டுமென்ற னருகே.  (10)

அதிகத் துயர்க்குள் பதையேற்குனாம அசனத்தையன் றியிலையிப்
பதிகத்தைநிற்ச ரணபங்கயத்தில் பரிவுற்றளிக்கு மெனையாள்
ததியெத்ததிச்சொல் கதியைத் தரு முத்தமியே பரைப்பெ ணுமையே
மதிசத்தியுண்ணா முலைநாம தேவிவரவேண்டுமென்ற னருகே.  (11)

        கட்டளைக்கலித்துறை

நாயகி யேபொற் சுணங்குடற் பைத்தலை நற்செயிற்று
வாயகி மேற்றுயில் வோனருஞ் சோதரி யேமலர்க்கண்
டீயமா நுதலாம் பிறையாய் நின்றன் சேவடியிச்
சேயகத் தேவைத் திடுதியுண் ணாமலை சிற்பரையே. 


            முற்றிற்று.

 
 

Related Content