logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

உருத்திர சங்கிதைத் தோத்திரம்

    கருவுரு வினுமுள கவலைகள் களைவா
    னருவினை யொடுமத னதுமுத லரிவர 
    னிருமல னிணையடி  நிழலினை யடைவான்
    பரிவொடு கரிமுக னடியினை பணிவாம் .  (1)

கருணாசல னிமையோர்தொழு கயிலாசல னியலாம்
வருணாசல  மறைஞானிசண் முகன்வாரள வதனத்
தருணாசல னெனுமூவரைச் சமைத்தா னெவைத்தடுத்தா
னருணாசல னமர்ந்திருக் கோயிலெம தறிவே.  (2)

பெருந்தாரணி தனில்பந்தினப் பிறவாம்வினைப் பிணியும் 
பொருந்தாதுபுக் கிருந்தேசிவ  புரஞ்சிற்புரி புகுவா
மருந்தாருயிர் மலநோய்க்கொளி ரருணாசலன் மயமா
மருந்தாமுளை யடிநாடொறும் பணியாமுடி யணிவாம் .  (3)

    துங்கமான கயிலைமலையனே
        துலங்கு செஞ்சடைச் சூடுமலையனே
    முங்கையாளுமை யாண்மண  வாளனே
        முரலயன்சிரங் கொய்யந்த வாளனே
    வெங்கை யானை யுரித்த விடலையே
        விரும்பி னார்தமை யாண்டு விடலையே
    யெங்கள் பாச மறக்கர மாவையே
        யீடழித்துரித் தாய்கர  மாவையே.  (4)

    மெய்யில் வெண்பொடி பூசும்விரதனே
        விண்ணு ளார்மயத் தான விரதனே
    கையி லம்பென வாய்த்தவன் கண்ணனே
        கசியு மன்ப ரகமலர்க் கண்ணனே
    பைதல் வெண்பிறை பாம்பணி வேணியே
        பத்தர் மேற்படர் தற்குள வேணியே
    மைய லென்றனை மாற்றிய வாக்கியே
        மயிலின் மண்ணின ரேத்துறா வாக்கியே.  (5)

படியிற் றிவியிற்  பயிலேனே பரமற் றவரைப் பரவேனே
கடலைக் கடலிற் படியேனே நமனைக் குறுகித் துடியேனே
யுடலைச் சிறையிற் புரியாதா ருணர்விற் புரிவிற் றொளிர்வோனே
யடிவைத் தெனதுச் சியினாளா யருணச் சயிலத் தமர்வோனே.  (6)

இயலிற் பொருளொத் துயிர்வாழ்  வாயெனமற் றிருளிற்று யில்வேனோ
னுயர்வற் றறிவுற் றிடவேயின் னடிவைத்  தெனதுச் சியினாளாய்
கயிலைச் சயிலத் தமர்வானே கனகக் கிரியிற் பயில்வானே
யயனச் சுதனுக் கருள்வானே யருணச் சயிலத் தமர்வானே. (7) 

ஒருவனிரு வருமிகல நடுவே யுணர்வரிய  வனலுருவி  னொளிர்வோன் 
பெருவியவர் தொழலுமருள் புரிவோன் மிடலுடைய லிகலவரை விடவே
தருணவதி சடைமுடியி  னணிவோன் சகலரையு மகலரையுமகலா
னருணகிரி யமலனவனடி  யாமறிலினுற  நினைவ மிருளறவே (8)

தினகரனு மதிதவள மதியுந் திருநயன மெனவனலு முடையோன் 
குனகமன சடைமுடியி  லணிவோன்  கமழிதழிம தியினொடு நதிநீர்
மனநினைய நிலவருண  மலையான்  மலவயிரி தனதடியை மறவா
ரனகனிரு மலனவனோ டகலா தமருமுமை  யடிமுடியி  னணிவாம்  (9)

வரமுறை யோதிய வாயனே லானில நீரல வாயவனே
பிரமனை யாக்கிய  பீடினனே போரனட்டவம்  பீடினனே
யரவினையிற்  றொறுமாட்டினனே  யணங்குமையாளுறு  மாட்டினனே
கருவினை காயந்திடுக் கண்ணினனே கருதடியார்தமக் கண்ணினனே.  (10)

போதகத் தீருரி மூடினனே பொழிவிழி யாளொடு மூடினனே
மாதவ ருக்கற மோதினனே வளரொளி பல்லற மோதினனே
யாதியு மந்தமு மில்லவனே யடிய ரடைந்தம ரில்லவனே
பேதம வர்க்கிறப் பேணினனே பிறரறி யாவனப் பேணினனே  (11)

கருவைத் துரிசைக் களையாயெங்  களவைக் கருணைக் கடலானே
பரிவுற் றுனைக்கண்  ணிலைமூடிப் பழிபற் றியவம் பிகைபார்மே
லெரியுற் றறலுற் றெழிலாகத் திடருற் றிடவொப் பரியாளென் 
றரிவைக்  கதுவைக் கருள்வோனே யருணச் சயிலத் தமர்வோனே  (12)

பகலற் றிரவற்  றுன்பாதப் பரவப் பதம்வைத் தெனையாளாய்
சகலர்க் கவரொத் தவர்பாசந் தனைவிட் டொழியுந் தகைவானே 
விகலர்க் கவருக் கழல்வானே விரையத் துகளைத் தனியேதா
னகலர்க் கெதிழிற்  றருள்வானே யருணச் சயிலத் தமர்வானே.  (13)

    கனக வெற்பினுங் கயிலை வெற்பினுங் 
        கழுகு வெற்பினும் பிரியாதா
    னனக னற்புத  னருண வெற்பின 
        னலரி  னொத்ததன்  னடிபாடு 
    மனித ருக்குமுன் மலம ரித்திலங் 
        குணர்வி னுற்றெழும்  பனுபூதி
    துளைய ளிப்பவன் சகள நிட்களன் 
        சுரண நித்தலும் பணிவாமே.  (14)

    அருவ  னிட்கள  னமல  னித்திய 
        னசல னற்பும் லுமை யாள்வான்
    கருவி னுட்படு மெமைய ளிப்பது 
        மெனம னத்தினுங்  கருதாதா
    ரிருவ ருக்குமொள் ளெரிய  னெத்திகழ்ந்
        திசலிரித் தவர்க்கினி  யானா
    மொருவ னொப்பில  னவனி டத்துறு
        முமை மலர்ப்பத  முனுவோமே.  (15)

முனைவினைத் திறத்தினா முதிரவுற் றுடற்கனோ
யினியெமக் கொழுப்பரா ரெனமனத் திளைப்பிர்கா
னனுசயத் தையற்றுநீ ரருணவெற் பகத்துனீர்
தனையளிப்ப னொப்பிலா தவனுடற்ற  டுப்பனே  (16)

கருவினைக் கழிக்கலாங் கரியகட் டழிக்கலா
மொருமையுற்  றிருக்கலா மொளிருநிட் களத்துநீ
ருவருக்கு மெட்டொணா வெளிமயக்க னத்தினா
மருணவெற் பகத்துனீ ரயர்விளைத் தடுத்துமே  (17)

வெய்யவன் காலனை வீட்டினனே வீறுளமாறில் வீட்டினனே 
தையலர் முன்னர  வாட்டினனே தசமுகன்  றோள்பல வாட்டினனே  
பைதலெ னென்றிடர்  பாற்றினனே படர்சடை மேனிரப் பாற்றினனே 
நையலென் றென்னுள  நாட்டினனே  ஞானமண்ணாமலை நாட்டினனே (18)

எழுது புகழுடையா  ரெழிலருண கிரியார்
புகழுமகிழ் பெருமான் புனிதவடி புகழ்வோ
மொழுகுமல  நவவா யுடலினினி யுதியோ
மழகியவிண் ணடைவோ மமலனடி  யடைவோம்  (19) 

கருதுவதன் முனமே கருதினவு  முறுமே
யிருமையினு மினிதா மிருபலமு மெளிதே 
யருணகிரி யரனோ டமருமுமை யடியே
யொருமையுற வுளமா தரவுமுற  வுனுவோம் .  (20) 

உருத்திர சங்கிதைத் தோத்திரம் முற்றிற்று.

 

Related Content