திருச்சிற்றம்பலம்
எழுதரிதென்றல்
தனத்தான தனனதன தனத்தான தனனதன
தனத்தான தனனதன தந்த தனனா
தனனதன தானதான தனனா.
சிலைக்காம னுடலெரிய விழித்தாடல் புரிபரமர்
செருக்கோல நமனுயிரை யுண்ட சரணார்
மலர்ப்பாவை வருசகல கலைப்பாவை தொழுபசிய
மலைப்பாவை கவுரியொரு பங்கிலுறைவார்
சினத்தாலு மிகவுமெதிர் விழித்தாலு முனிவனொடு
சிரித்தாலு மழல்வடிவு கொண்ட பரனார்
- அரவு குடியேறு நீடு குழையார்
திருக்கோயி றிருவதிகை திருச்சேய்ஞ றிருமருக
திருத்தோணி திருவரதை வஞ்சி பனையூர்
திருச்சேறை தருமபுர மறைக்காடு திருமயிலை
திருக்கோவ றினைநகர மன்பில் கடவூர்
திருக்காவை பொதியமலை கழிப்பாலை கயிலைமலை
தெளிச்சேரி யிடைமருது தஞ்சை வழுவூர்
- சுழியல் புனைவாயில் கூடலுறைவார்
புலித்தோலி னுடையழகர் பலிக்கேகு நடையழகர்
பொடிப்பூசு நுதலழகர் செங்கை மழுவார்
நெருப்பாறு வரும்விழியின் மயிர்ப்பால மெனுமனதி
நினைப்பார்கள் வினைகளையு மெங்கள் பரனார்
புயத்தோடு நெடியவரை யெடுத்தானை வெகுளியொடு
புடைத்தானை யுரியையணி கொண்டதிறவார்
- குமுதமலர் மாலை சூடு விடையார்
புகைப்போல வேழுபடன் முகிற்கூட மிடறிவிழு
பொழிற்கூடு வளர்கமுகு நின்ற நிலையே
குருத்தோடு மிடறொடிய முடத்தாழை விரியவெதிர்
குதித்தோடி வருகயல்க டுன்று வயல்சூழ்
புகழ்ச்சோண கிரியிறைவர் விடைப்பாக ரமரர்விழி
புதைத்தேபி னிருகைதொழு மங்குவடிவார்
- தடவரையேனாவி போலுமயிலார்
மலைப்பார மெனவளரு தனப்பார மெழுதிடினும்
வளத்தோடு பெறுகுணமி ரண்டும் வருமோ
விருப்பான கரியகுழ லிருட்போல வெழுதிடினு
மிகுத்தேறு வரியளிமூ ரன்று வருமோ
மதர்ப்பான விணைகழிகள் வடுப்போல வெழுதிடினு
மடப்பார்வை யிருகுழைக டந்துவருமோ
- குழையெழுதி னூசலாடி வருமோ
மலர்த்தாளை வனசமலர் தனைப்போல வெழுதிடினு
மலர்ப்பாய வனமெனந டந்துவருமோ
வுறுப்பான திலகநுதல் விதுப்போல வெழுதிடினு
முவப்பான குறுவியர் வரும்பி வருமோ
வனிக்கோல மிடறுகமு கினைப்போல வெழுதிடினு
மரப்பாவை யுருகுமிசை யின்பம் வருமோ
- விரலெழுதின் வீணைபேசவருமோ
இலைப்பாதி யிழையுமென நுசுப்பாக லெழுதிடினு
மிதைப்போல வொசிவொடுத ளர்ந்து வருமோ
வனப்பேறு திகிரியென மணித்தோள்க ளெழுதிடினு
மயிர்க்கால்கள் புளகித மெறிந்து வருமோ
லிதழ்க்கோவை யதனிமிகு சிவப்பாக வெழுதிடினு
மிளைப்பான பொழுதமுது விந்து தருமோ
- உகிரெழுதின் மீதுலாவி வருமோ
எழுத்தோடு முறுவன்முலை நகைக்காக வெழுதிடினு
மெதிர்த்தாடு புலவிநகை யிங்கு வருமோ
மதிப்பான வுடலையொரு கொடிப்போல வெழுதிடினு
மயிற்சாய லொரு சிறிது தங்கிவருமோ
எடுத்தாடு படமெனவல குலைப்பேணி யெழுதிடினும்
இதத்தோடு மமுதுகுதி கொண்டு வருமோ
- கிழியெழுதி னேதுலாப முரையீர்
ஆர்வ மொழியுரை
கருடனோட மற்சமாமை கமலமோட முற்கரங்
காட்டிலோட மூன்றிராமர் காறடக்கி யோடவே
மருளிவந்த சிங்கமோட வாமன்வெள்ளை பாறவே
வஞ்சமான கண்ணனோட மாரனீறச் சேனனு
மிருளினோட முண்டகந்த னேங்கியோ- வென்றவர்க்
கீறிலாது சீவன்வைத்த வேந்தல்யாவன் வேதமே
யருளுமந்த முதல்வன்யாவ னருணைகண்டு வாழ்மினோ
வாரனாதி மூலமென்ப தறிகிலாத மாக்களே.