logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

அருணாசல புராணக் கீர்த்தனைகள்

இயற்றியவர்  காஞ்சிபுரம் வீரணப் புலவர் 

         மோகன இராகம் .    ஆதி தாளம் .

            பல்லவி 

    பாதமே துணையே - தமிழ் 
    பரிவுட னுரைசெய மருமலர் நிகர் இரு   (பாதமே)

            அனுபல்லவி

    பாதிமதி சடை மீது தரித்தருள்
    சோதி அருணகிரி நாதர்  நடித்திடும்   (பாதமே)

            சரணங்கள்

1.     அதிசயங்கள் நிறைவான கொலுவிலே
    புதிய செந் தமிழை யோதும் வலுவிலே
    சதியிதென்று  புகலப்  பழவினை 
    சிதறி யஞ்சி யகலப் பெருகிய 
    நிதியு மிதற் கிணை மதியு மகிழ்ச்சியும் 
    அதிக மெனத் தரு முதலருணைப் பதி  (பாதமே)

2.     மனுவிருந்து சதிராகமுன்  னூலதாய்
    இனிய தென்று புகழும்படி  மேலதாய்க்
    கனிவினின்று பாடித் தவமிகு 
    புனிதமென்று கூடிச் சொலவுயர் 
    பனியை யடக்கிய தினகரனுக் கருள் 
    முனமுதவிச் செயும் அனகன் மலர்த்திருப்  (பாதமே)

3.     தாணு நேர் இமயமாது பாகன்
    பேணு வோர்களுள் மேவு மேகன்
    பூணு மானணி கரன் நிறைவுறு
    சேணு லாவிய வரன் இருளெனும் 
    ஆணவ முற்றயன்  வேண விதத்தரி 
    காணரு மெய்ப்பொருள் சோணகிரிக் கிறை  (பாதமே)


       ***********************************************************


        அம்மையும் அப்பனும் 

    இயற்றியவர்  உளுந்தூர் பேட்டை சண்முகம் 

இராகம் - கல்யாணி                   தாளம் - ஆதி


ஆலத்தைக் கண்டஞ்சி ஓலமிட்டார்க் கன்று 
அபயம் கொடுத்தவனே  அண்ணாமலை - அண்ட
கோளத்தைக் காப்பதற்குத்  தோளொடுதோள் நின்ற
நாயகி பெயர்தானே  உண்ணாமுலை  !                (ஆலத்தை)

காலத்தைக் கடந்துநின்று காலத்தை வரையறுத்து 
காலனை உதைத்தவனே  அண்ணாமலை - இந்த
ஞாலத்தை உயிர்க்கூட்டம் நாளும்  வளர்வதற்குத் 
தாயாக இருப்பவளே  உண்ணாமுலை !                (ஆலத்தை)

மூலத்தைக் காண்பதற்கு  மேலும் கீழும்சென்று 
முயன்றும் முடியாத அண்ணாமலை  - திரு 
மாலும் அயனும் தேடிக் காணாத  போதும் என்றன் 
மனத்தில் வளர்பவனே  அண்ணாமலை !            (ஆலத்தை)

ஆவிக்குத் துணையாக அமைந்தமலை - அன்பன் 
அருணகிரி வாழ்ந்த  அண்ணாமலை - நெஞ்சில் 
பாவித்தாலே போதும் பாவமெல்லாம் தீரும் 
பாலூட்ட வருவாளே உண்ணாமுலை  !          (ஆலத்தை)


இராகம் -- கல்யாணி               தாளம் - ஆதி
ஆரோகணம் -- ஸரிகமபதநிஸ         அவரோகணம் -- ஸ்நிதபமகரிஸ 

ஸா ஸ் ஸா ஸ்ஸா ஸா ஸா , ஆலத்தைக் கண்டஞ்சி
பப்பா மபம காரீ   , அபயம் கொடுத்தவளே 
பாத பாதா ததா தா  , கோளத்தைக் காப்பதற்குத் 
நிதா நிஸாஸா நீரீக்ர்ரீ  , நாயகி பெயர்தானே 

பாபபா மபாகமாபா , காலத்தைக் கடந்து நின்று 
நீரிகா நிரீகமாதா ,  காலனை உதைத்தவனே 
பாப பாம பாரிரீகா ,  ஞாலத்தில் உயிர்க் கூட்டம் 
தாம தாபா மகரிகா , தாயாக இருப்பவளே 

மாத மாதா ததததா ,  மூலத்தைக் காண்பதற்கு 
மநீ தநீ மதபமகரிஸா  , முயன்றும் முடியாத
மதாநி நிதஸ்ர தபாபா ,  மாலும் அயனும் தேடி 
ஸ்ஸாநிஸ் நிதநீதமாபா ,  மனத்தில் வளர்பவனே 

நிரிகா , ஓலமிட்
நீரிரீ  , அண்ணா
பதா பதா  ,  தோளொடு 
நிஸா நிதபபா  ,  உண்ணாமுலை 

மாதபா , காலத்தை 
தநிதஸ்நி , அண்ணாமலை
மாதமா , நாளும் 
ஸ்நிபாமா,   உண்ணாமுலை 

மதாநிஸா ,  மேலும் 
பபாகமா ,   அண்ணாம
மா தமா ,  காணாத 
பபாகா , மா  ,அண்ணாமலை 

ஸ்ஸா நிஸாதா , டார்க்கன்று 
கா பா பா த  , மலை அண்ட
நீ நீ நீ ,  தோள்நின்ற 
தபமப மபதநி ..................

மபாகரீரீ ,  வரைய றுத்து 
பா பா பா  , லை இந்த 
தாஸ்நிதாதா ,  வளர்வதற்கு 
மதபமகரிஸா.....................

ரிகமதபா ,  கீழும் சென்று
பா பா பா  , லை திரு
தநீஸ்‌ரீரீ , போதும் என்றன் 
கரிஸா....................................

(4-வது சரணத்தை 2-வது அனுபல்லவி போல் பாடவும் ) 

 

Related Content