logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

திருவண்ணாமலைப் பதிகம் -1 (திருக்குருகூர் ஸ்ரீமத் ஞானசித்த சுவாமிகள்)

திருக்குருகூர் ஸ்ரீமத் ஞானசித்த சுவாமிகள் இயற்றியது

            அறுசீர் விருத்தம்

            திருவருட் சகாயம்

சிருட்டிசெய் தொழிலா னோடுசெங் கண்மால்சின முந்தீர்க்கும்
பொருட்டினா லழலார் மேனிப்பொ ருப்பெனவ கண்டமுட்டிக்
கிருட்டினே ருருவங் கொண்டு கீழ்ப்புகுங் கண்ணர்க் கன்பாய்
அருட்டினைத் தீர்த்துள் ளோங்கு மணியணா மலையு ளானே.  (1)

துலங்குதன் னடியருள்ளந் துரிசரச் செயும்பல் தீர்த்தம்
இலங்கிடு மழகுமிக்கோ ரிருக்குநற் குகையு மன்னோர்
நலங்களும் ஞானயோக நாட்டமு நிறைந்து ளோங்கும்
அலங்கல்செய் தருளுஞ் சோதி யணியணா மலையு ளானே.  (2)

தவமுளோர்க் கருள்வே தண்டச் சம்புநின் னிடத்தில் மேவப்
பவமிலாப் பருவ தக்கோன் பக்கல்வந் துதித்த பின்னர்
கவரிசே ரரக்கன் றன்னைக் கால்மிதித் தடங்கச் செய்கும்
அவனியோர்க் கருள்செய் தோங்கு மணியணா மலையு ளானே.  (3)

திங்கள்செஞ் சடையு மோர்பாற் றிருமுடி துலங்கக் கையிற்
கங்கண மிலங்கக் காலிற் கவின்சிலம் பலம்ப வன்பர்
சங்கரா வெனநின் றேத்தத் தாயெனக் கிருபை நல்கி
அங்கமொன் றான சோதி யணியணா மலையு ளானே.  (4)

பச்சிலை பூக்கள் கொய்த பாலக ரிருவர் தேகம்
நச்சுவாய்த் துரு வாசர் நல்கிய சாபம் பெற்று
வச்சிராங் கதனால் முன்போல் வானுல கேற்றி வைத்தும்
அச்சுதன் பணியுஞ் சோதி யணியணா மலையு ளானே.  (5)

இல்லாமை யென்று சொல்லா தியாவர்க்கு மின்ப நல்கும்
வல்லாள வரசர்க் குற்ற வருத்தமுந் தீர்த்து முன்னாள்
கல்லாலு ளிருந்து மன்பர் கருத்தைவிட் டியாதின் பாலும்
அல்லாதுள் ளோங்குஞ் சோதி யணியணா மலையு ளானே.  (6)

புளகனென் றசுரன் செய்த புண்ணிய மொன் றால்மிக்க
குளகன்மா லயனுங் காணக் கூடினன் கயிலை தன்னில்
பளகநேர் மேனியாயோர் பாதியும் பச்சையாகி
அளகுநாட் சோதி யான வணியணா மலையு ளானே.  (7)

கரதல மலர்கொண் டுந்தன் கழல்தொழு மரசன் முன்னாள்
சுரதநன் மங்கை மேவச் சூழ்வினைப் பயனும் நண்ணப்
பிரதத்தன் முகம்வே றாக்கிப் பின்புநன் னிலையிற் சேர்த்த
அரகர வருணை மேவு மணியணா மலையு ளானே.   (8)

தேன்கமழ் வாழை புன்னை சீவினி சிறப்புற் றோங்கும்
வான்கலை யாதி புல்வாய் வனங்க ளெண்டிசையு மார்ப்ப
மான்றட வியுமிக் கோங்கு மலரயன் மனந்திகைப்ப
ஆன்றழ லாகுமேனி யணியணா மலையு ளானே.  (9)

மணங்கமழ் மலர்கொண் டேத்தும் வானவர்க் கரசே யோரென்
குணங்களுக் குரியகோவே கொழுங்கனற் குன்றே முன்னம்
பிணங்கிய பிரமனா லோர் பெண்ணும்வந் தடைய வந்நாள்
அணங்குதீர்த் தருள்செய் தோங்கு மணியணா மலையுளானே.  (10)
 

Related Content

திருவண்ணாமலைப் பதிகங்கள் -2 (திருக்குருகூர் ஸ்ரீமத் ஞானசித்த