logo

|

Home >

hindu-hub >

temples

Om symbol

திருக்கயிலாயம் (திருநொடித்தான்மலை) - கயிலையின் பெருமை - கயிலாயம்

Om symbol

இறைவர் திருப்பெயர்: பரமசிவன், கைலாயநாதர். (எல்லாத் திருநாமங்களும் உடையவராகவும் வீற்றிருக்கிறார்).

இறைவியார் திருப்பெயர்: பார்வதிதேவி. (இறைவியும் எல்லாத் திருநாமங்களும் உடையவராகவும் வீற்றிருக்கிறார்).

தல மரம்:

தீர்த்தம் : மானசரோவரம் ஏரி, சிந்து, பிரம்மபுத்திரா முதலிய நதிகள்.

வழிபட்டோர்:எண்ணிறந்தோர்.

Loading map...

Sthala Puranam

the kailash lingam

  • உலகில் எல்லா ஆலயங்களிலும், பிரதிஷ்டை முதலவற்றால் ஆவாஹனம் செய்து சிவபெருமானை வழிபட, திருக்கயிலாயமானது மனிதர்களால் பிரதிஷ்டை முதலியன இல்லாமல் சிவபெருமான் உமையம்மையோடு எப்போதும் தானே இருந்து அருள் புரியும் திருத்தலம். இறைவனின் நித்திய வாசஸ்தலம்.
  • இறைவனுடைய நித்திய வாசஸ்தலமாகையால் மாதவம் செய்த தேவர், முனிவர், மனிதர் முதலிய எல்லோராலும் உத்தமமாக வழிபடக்கூடிய திருத்தலம் கயிலாயம்.
  • உலகில் உள்ள மற்ற எல்லாத் தலங்களுக்கும் மேலான கொழுந்துபோல் உயர்ந்த திருத்தலம் திருக்கயிலை.
  • திருக்கயிலாயம் சிவபெருமானாகப் போற்றப்பட, மனசரோவரம் அம்மையின் வடிவாகப் போற்றப்படுகிறது. இந்த மனசரோவரத்திலேயே பார்வதியை சிறு குழந்தையாக இமவான் கண்டு வளர்த்தான். பார்வதி தேவி பர்ணசாலை அமைத்துத் தவம் புரிந்து இறைவனை மணந்ததும் இந்தத் திருக்கயிலையில் தான். இந்தத் திருக்கல்யாணத்தைக் காண தேவர்கள், ஆன்றோர், சான்றோர் எல்லாம் திருக்கயிலாயத்தில் கூடிய போது உலகின் நிலை பிறழாமல் இருக்க அகத்தியரை திருக்கயிலையிலிருந்து தென் நாட்டிற்கு இறைவன் அனுப்பினார்.
Gaurikund
  • தக்ஷிணாமூர்த்தியாக இறைவன் சனகாதி முனிவர்களுக்கு உண்மைப்பொருள் காட்டும் பொழுது இடையூறாக வந்த மன்மதன் எரிந்து சாம்பலானது இந்தத் தலமே. (அருகில் உள்ள தீர்த்தபுரி இப்புராணத்திற்கேற்ப வெண் மணலோடு இருக்கிறது.)
  • ஹிந்துக்கள், திபெத்தியர்கள், புத்தர், சமணர் எல்லோருக்கும் புனிதத் தலமாவது திருக்கயிலை. (இகழ்வார்கள் கருதும் வண்ணம் உடையார் போலும் கயிலை மலையாரே - சம்பந்தர்.)
  • சூக்ஷுமமாக சிவபூதங்கள் பணிசெய்ய இறைவன் வீற்றிருக்கும் திருமலை. காண்பார் பக்குவத்திற்கு ஏற்ப அழகிய மலையாகவும், வணங்கக்கூடிய திருத்தலமாகவும், அன்பிற்கினிய சிவபெருமான் இனிது அருள்புரியும் இடமாகவும் தெரியும். (கண்பார்க்கும் காணலாம் தன்மையனே; கைதொழுது காண்பார்க்கும் காணலாம்; காதலால் காண்பார்க்குச் சோதியாய் சிந்தையுள்ளே தோன்றும் - காரைக்கால் அம்மையார்)
  • அழித்தல் தொழிலையுடைய உருத்திர மூர்த்தி வீற்றிருந்தருளும் தலமாதலால் நொடித்தான்மலை (நொடித்தல் - அழித்தல்) எனவும் வழங்கப்படுகிறது. இத்தலம் சுந்தரரால் நொடித்தான்மலை என்ற பெயராலேயே பாடப்பெற்றது.
The First Sight of Mt Kailash
  • இராவணன் தன்னுடைய புஷ்பக விமானத்தில் வான் வழியாக வந்தபோது, விமானம் திருக்கயிலாய மலைமீது செல்லாமல் முட்டுப்பட்டது. அப்போது இம்மலையை உமாதேவி அஞ்சுமாறு இராவணன் பெயர்க்க முயன்றபோது, இறைவன் தன் கால் விரலால் அழுத்த, மலையின் கீழ் அகப்பட்டுத் தன் பிழையை உணர்ந்து சாமகானம் பாடி வழிபட்டு வரங்களும், மந்திர வாளும் பெற்ற பதி.  இராவணன் செய்த தீர்த்தம் "ராக்ஷஸ் தால்" என்று வழங்கப்படுகிறது.
  • காரைக்காலம்மையார் பாண்டிய நாட்டிலிருந்து திருக்கயிலைக்குப் பயணம் செய்தார். திருக்கயிலையில் இறைவன் வாசஸ்தலம் என்பதால் கால் பதிக்காமல் தலையால் நடந்து சென்றார். அவர் அன்பை உலகறிய ஈசன் "அம்மையே" என்று அழைத்தார். கயிலை யாத்திரைக்குப் பின் அம்மையார் திருவாலங்காட்டில் வழிபட்டிருந்தார்.
  • ஞானசம்பந்தர் திருக்காளத்தியைத் (தென் கயிலாயம்) தரிசித்தபின்பு அங்கிருந்தே கயிலாயம் நோக்கி மனத்தாற்கண்டு பாடிப் பரவினார்.
  • அப்பர் பெருமான், கயிலாயத்தையும், அங்கு ஆளும் நாயகன் வீற்றிருக்கும் அற்புதக் கோலத்தையும் காணுமது காதலித்து வாரணாசி தொழுது திபெத்தியப் பலாவு நிலத்தில் நெடிய யாத்திரையை மேற்கொண்டார்; இந்த யாத்திரையின் பயனாக அவருக்கு சிவபெருமான் உலகோரும் உடன் உய்யத் திருவையாற்றில் கயிலைத் தரிசனம் தந்தருளினார். அப்பர் பெருமானின் திருக்கயிலைத் திருத்தாண்டகங்கள் 'போற்றித் திருத்தாண்டகங்கள்' என்று போற்றப்படுகின்றன.
  • சுந்தரரின் சிவயோகம் முற்றிய நிலையில் இறைவனருளால் திருஅஞ்சைக்களத்திலிருந்து வெள்ளையானை மீதேறி கயிலைக்குச் சென்றார். அப்போது திருவருட் கருணையை நினைந்து, "தானெனை முன்படைத்தான்" என்று பதிகம் தனக்குக் கயிலை செல்லும் வழியில் நிகழ்ந்த அனுபவங்களைப் பாடியவாறே போற்றிச் சென்றார்.
  • சேரமான் பெருமாள் நாயனாரால் ஆதியுலாப் பாடப்பெற்ற பதி. (திருக்கயிலாய ஞான உலா.)
  • திருக்கயிலாயத்தைக் குறிப்பிடாத புராண நூல்களே இல்லை எனலாம். அருளாளர்கள் எல்லோராலும் போற்றப்பட்ட பதி திருக்கயிலை.
The Northern Face of Holy Mt Kailash

தேவாரப் பாடல்கள் : பதிகங்கள்   :   சம்பந்தர்    -    1. பொடிகொளுருவர் புலியி (1.68),    2. வாளவரி கோளபுலி (3.68); 3. மண்ணது வுண்டரி (3.109)                  அப்பர்      -    1. கனகமா வயிர முந்து (4.47),   2. வேற்றாகி விண்ணாகி (6.55),  3. பொறையுடைய பூமிநீ (6.56),   4. பாட்டான நல்ல (6.57); 5. வகையெலா முடையாயும் (6.41), 6.  தில்லைச் சிற்றம்பலமுஞ் (6.70),                  சுந்தரர்      -    1. தானெனை முன்படைத் (7.100); சேரமான் பெருமாள் நாயனார் -   1. திருமாலும் நான்முகனுந் (11.9) திருக்கயிலாய ஞானவுலா; நக்கீரதேவ நாயனார்           -   1. சொல்லும் பொருளுமே (11.10) கயிலைபாதி காளத்திபாதி;   சேக்கிழார்  -    பொன்னின் வெண்திரு நீறு (12.1.1) திருமலைச் சிறப்பு.
பாடல்கள்    :    சம்பந்தர்     -     முன்னிற்பவர் (1.11.8),   அரனுறை தரு (1.20.8), அசைவுறு தவமுயல் (1.21.8), இழைவளர் (1.22.3), பொதியிலானே (1.50.10), கலமார்கடலுள் (1.66.5) , கரையார் (1.71.8), விண்தான் (1.74.8),  பாங்கிலா வரக்கன் (1.75.8), அயிலுறு படையினர் (1.79.1), பெண்ணார் (1.85.8),  பந்தத்தால் (1.126.1),  அடல்வந்த (1.129.8),   கங்காளர் (1.130.3 & 8),  கதிரொளிய (1.131.8),   கருப்பமிகும் (1.132.8),                                        கலையானே கலைமலி (2.15.5 & 8),  பிறைதான் (2.19.7),  என்றன் உளமே (2.22.5),  பற்றி னான் (2.26.8),  கடுத்த வாளரக்கன் (2.28.8),   திருத்திகழ் (2.32.1),  அண்ணாமலை (2.39.2), குயிலின் (2.106.8),  காசைசேர்குழ லாள் (3.2.8), இரவம ருந்நிறம் (3.12.8), பஞ்சுதோய் (3.16.6 & 8), எடுத்தனன் கயிலையை (3.16.8), கரத்தினாற் கயிலையை (3.28.8),   காரினார் அமர்தருங் (3.34.8), எண்ணமதுவின்றி (3.77.8), கட்டுர மதுகொடு (3.86.8),    இலங்கை (3.113.10),  கடுத்த வாளரக்கன் (3.119.08), தலையொரு (3.122.8);                                            அப்பர்        -     அடுத்தானை (4.7.10),  கடுகிய தேர்செலாது (4.14.11),  ஆனைக் காவில் (4.15.2),   மற்றுநீர் (4.41.10),   எடுத்தனன் எழிற் கயிலை (4.49.10),  நிலைவலம் (4.59.4),  மணிநிற (4.92.3),  கறுக்கொண் டரக்கன் கயிலையைப் (4.95.10),   படவேர் (4.97.3),                    தருக்கிய (4.100.10),   கரப்பர்கள் (4.101.8),   கடவுந் திகிரி (4.109.10),  அரக்கன் றன்வலி (5.48.10), கடுக்கை யஞ்சடை (5.55.10), செருத்த னால்தன (5.61.10), கடுத்த தேரரக்கன் (5.63.11),  கயிலை நன்மலை (5.64.2), ஓதமார் கடலின் (5.66.1),   கயிலை நாதன் (5.66.2), மங்கலக் குடியான் (5.73.10), கடுத்த மேனி (5.87.10),  காதார் குழையினர் (6.2.6),  தீர்த்தப் புனற்கெடில (6.7.2 & 12),  மனத்தகத்தான் (6.8.5),  வில்லருளி வருபுருவத் (6.14.4 & 5),  தோலிற் பொலிந்த (6.16.8),               காவார் சடைமுடியர் (6.17.8),  சொல்லானைச் (6.20.8),  மால்யானை (6.21.7),  வேலைசேர் (6.23.7),  காரேறு நெடுங்குடுமிக் (6.24.5),  ஏனத் திளமருப்புப் (6.28.5),  கற்பகமும் (6.33.2),  கச்சியே கம்பனே (6.37.9), வானுற்ற மாமலை (6.38.4)    வானவனாய் (6.44.7),   உழையுரித்த (6.47.7),   நிலையவன்காண் (6.48.6),  தந்தவத்தன் (6.49.2 & 10),  வானவர்கோன் (6.50.8),  கயிலாய மலையுள்ளார் (6.51.1),  பஞ்சடுத்த (6.53.7 & 11),  நெருப்பனைய (6.54.7),   நினைத்தவர்கள் (6.62.4),       அறுத்தான்காண் (6.64.11),   உமையவளை (6.65.7),  ஊனவனை (6.69.9),  கந்தமா தனங்கயிலை (6.71.9 & 11),  செம்பொன்னை (6.74.4),  சொன்மலிந்த (6.75.1),   வாராரும் (6.76.2),  காரார் கடல்நஞ்சை (6.78.9 & 10),   கைத்தலங்கள் (6.79.10),  பாரானைப் (6.80.1),   படமாடு பன்னகக்கச் (6.81.8),  கானிரிய (6.82.3),  வேந்தன்நெடு (6.83.10),  துங்கநகத் தாலன்றித் (6.84.2),  அறுத்தவன்காண் (6.85.4 & 10), தலையேந்து கையானை (6.90.2);                            சுந்தரர்         -   கடுத்தவன் (7.22.7),   துருத்திச் சுடரே (7.47.8),  இலங்கை வேந்தன் (7.68.9),  கருவரை போலரக்கன் (7.98.10);             மாணிக்கவாசகர்     -      ஒலி தரு கயிலை (8.2.146 வது வரி பாடல்) கீர்த்தித் திருவகவல்,  மானக் கயிலை மலையாய் போற்றி (8.4.167 வது வரி பாடல்) போற்றித் திருவகவல்,  குதுகுதுப் பின்றி (8.6.34 & 40) நீத்தல் விண்ணப்பம்,  அளித்துவந்தெனக் (8.23.10) செத்திலாப்பத்து,   திருந்துவார் (8.29.10) அருட்பத்து;                         திருக்கோவையார்                     வளைபயில் (8.கோவை.1.6 & 16) இயற்கைப் புணர்ச்சி,  உளமாம் வகைநம்மை (8.கோவை.2.4,5,7,11,12,16 & 20) பாங்கற் கூட்டம்,     சிலம்பணி (8.கோவை.4.5,6,7 & 10) மதியுடம்படுத்தல்,   நிருத்தம் பயின்றவன் (8.கோவை.6.1) முன்னுறவுணர்தல்,   கழிகின்ற வென்னையும் (8.10.4) மடற்றிறம்,  சிலையொன்று (8.12.12 & 25) சேட்படை,  படமா சுணப்பள்ளி (8.13.5,14,17,23,26 & 30) பகற்குறி,   பைவா யரவரை 8.14.22 & 29) இரவுக்குறி,   காயமும் ஆவியும் (8.16.14) உடன்போக்கு,  மனக்களி யாய் (8.18.28 & 33) வரைபொருட்பிரிதல்,   அஞ்சார் புரஞ்செற்ற (8.25.27) பரத்தையிற் பிரிவு;     திருவிசைப்பா          திருவாலியமுதனார்    -     அல்லாய்ப் பகலாய் (9.24.1) ;                                                  திருமூலர்     -     விளக்கிப் பரமாகும் (10.01 பாயிரம்-05.திருமூலர் வரலாறு-19),     ஓங்கு பெருங்கடல் (10.2ம் தந்திரம்-09.படைத்தல்-10),    சயிலலோ கத்தினைச் (10.5ம் தந்திரம்-15.சாரூபம்-2),   தனிச்சுடர் ஏற்றித் (10.7ம் தந்திரம்-25.ஞானாதித்தன்-5),                    போற்றிசெய் (10.7ம் தந்திரம்-38.இதோபதேசம்-4);              நக்கீரதேவ நாயனார்    -     கயிலைமலை போற்றிஎன (11.17.47 வது வரி பாடல்);         கபிலதேவ நாயனார்     -     நன்றைக் குறும் (11.22.18) சிவபெருமான் திருஇரட்டை மணிமாலை;         பரணதேவ நாயனார்     -    திரியும் புரமெரித்த (11.24.13,81,86 & 91) சிவபெருமான் திருவந்தாதி;        இளம்பெருமான் அடிகள்    -    கரதலம் நுழைத்த (11.25.10, 26 & 29) சிவபெருமான் திருமும்மணிக்கோவை;            அதிரா அடிகள்         -    கவவுமணிக் (11.26.10) மூத்தபிள்ளையார் திருமும்மணிக்கோவை;       பட்டினத்துப் பிள்ளையார்    -    கயிலை புல்லென (11.27.32.42 வது வரி பாடல்) கோயில் நான்மணிமாலை,                                         கயிலைநடந் தனைய (11.29.16 வது பாடல் 4 வது வரி, 19 வது பாடல்  2 வது வரி, 28 வது பாடல் 9 வது வரி) திருவிடைமருதூர் மும்மணிக்கோவை,                                         தன்மையிற் (11.30.10,11,12,13,14,15,18,19,20,21,22,23,24,25,26,27,33 & 56) திருஏகம்பமுடையார் திருவந்தாதி;            நம்பியாண்டார் நம்பி     -    சிறைநன் புனல் (11.34.28,60 & 87) திருத்தொண்டர் திருவந்தாதி;               சேக்கிழார்           -    மண்டிய பேரன்பினால் (12.5.113 & 131) தடுத்தாட்கொண்ட புராணம்,   மற்றவர் இனைய (12.8.55) எறிபத்த நாயனார் புராணம்,   வெள்ளி மால்வரைக் கயிலையில் (12.19.50 & 101) திருக்குறிப்புத்தொண்ட நாயனார் புராணம்,   என்ற பொழுது (12.21.66,347,350,354 - 382) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்,          அஞ்சைக் களத்து (12.23.8,9,10 & 11) பெருமிழலைக் குறும்ப நாயனார் புராணம்,   பண்பயில் வண்டு (12.28.322,346,1026 & 1028) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்,  இந்த நிலமையார் (12.29.206,223 & 362) ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்,  அந்தி இளம் பிறைக் (12.30.1,2, 27, 53 & 55) திருமூல நாயனார் புராணம்,   இத்தன்மை நிகழும் நாள் (12.36.25) சிறுத்தொண்ட நாயனார் புராணம்,   ஆராத காதலுடன் (12.37.117 & 174) கழறிற்றறிவார் நாயனார் புராணம்,  ஆன தொண்டினில் (12.38.6) கணநாத நாயனார் புராணம்,   யாவர்க்கும் (12.49.3) காரிநாயனார் புராணம்,   திருக் கயிலை (12.61.2) திருவாரூர்ப் பிறந்தார் புராணம்,    மூலமான திருத்தொண்டத் தொகைக்கு (12.72.1,30 - 52) வெள்ளானைச் சருக்கம்.  

Specialities

Kailash Area Map

  • பூ உலகின் பதிகளில் மிகச் சிறப்பு வாய்ந்த பதி.
  • இது பூ கயிலாயம் எனவும் பெயர் பெறும். 
  • கயிலாய மலையின் உச்சி கடல்மட்டத்திலிருந்து 21,778 அடி உயரமானது.
  • இயற்கையான கோயிலமைப்பில் பனி மூடியே சிவலிங்கமாகக் காட்சியளிக்கும், இத்திருமலையை எப்பக்கமிருந்து யாரொருவர் எவ்வண்ணமாக நோக்கினும் அவ்வவர்க்கு அவ்வண்ணமாகவே அக்கோயிலாகவே காட்சி தருகிறது; என்பது இம்மலையின்கண் அமைந்துள்ள அதிசயமாகும். இம்மலையின் சிகரம் தென்திசை நோக்கியதாக உள்ளது.
  • திருக்கயிலாய மலைக்கு முன்பாகத் தென்புறத்தில் சிவபெருமானை நோக்கி திருநந்திதேவர் அமர்ந்திருப்பதுபோல் நந்திமலை அமையப்பெற்றுள்ளது.
  • 29 மைல் சுற்றளவு உடையதாய் விளங்கும் இம்மலையில் சதுரம், முக்கோணம், வட்டம் போன்ற சித்திர வேலைபாடுடைய மேடைகளும் காட்சியளிக்கின்றன.
  • இந்தியாவில் இமயம் முதல் கன்னியாகுமரி வரையில் எத்தனை வகையான கோபுரங்கள் உள்ளனவோ அத்தனை மாதிரிக் கோபுரங்களும் இக்கயிலை மலையில் காணக்கிடக்கின்றன.
  • திபெத்தியர்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் ஒரு சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து கயிலை மலையை (53 கிமீ) வலம் வருகிறார்கள். திருக்கயிலாய மலையைச் சுற்றிவரும் பாதையில் அதிகபட்ச உயரம் உள்ள இடம் ட்ரொல்மா ஆகும். இது கடல் மட்டத்திலிருந்து 18,540 அடி உயரத்தில் உள்ளது. இவ்விடத்தில் கௌரிகுண்டம் என்னும் தீர்த்தம் உள்ளது.
  • மனசரோவரம் உலகிலேயே மிக உயரத்தில் உள்ள பெரிய நன்னீர் ஏரி ஆகும்.
Lord, Nandi, Balipith at Ashtaparvat
  • சிந்து, பிரம்மபுத்திரா மற்றும் சில துணை நதிகளுக்கு ஆரம்ப இடம் இப்பகுதியே.
  • திருக்கயிலாயம் இருக்கும் இடத்தின் பெயர் மின்சர் (Minsar) ஆகும். இது 1960 வரை பாரதத்தின் (லடாக் அரசின்) ஆளுகைக்கு உட்பட்டிருந்தது.
  • (கயிலாய யாத்திரைக்கு இந்திய அரசு ஆண்டுதோறும் ஏற்பாடுகளைச் செய்து தருகிறது. இன்று திருக்கயிலாயம் உள்ள இமயமலைப் பகுதி சீன அரசின் கட்டுப்பாட்டுள் இருந்து வருகிறது. ஆண்டுதோறும் கயிலாய தரிசனத்திற்குச் செல்ல விண்ணப்பித்துக் கொள்ளும் அன்பர்களைத் தேர்ந்தெடுத்து இந்திய அரசு அனுப்பி வைக்கின்றது.)

Kailash Mansarovar Pilgrimage - Lipu Lekh route (video)

Kailash Mansarovar Pilgrimage - Manasarovar & Kailash (video)

Kailash Mansarovar Pilgrimage - Kailash (video)

Kailash Yatra - Nepal Route (Travelogue) 

Kailash Yatra - Lipu Lekh Route (Travelougue)

కైలాస యంత్రం సామవేదం షణ్ముఖ శర్మా (audio)

முந்தைய தலம்<திருக்கேதாரம் (கேதார்நாத்)

 

Contact Address

அமைவிடம் நாடு : சீனா கயிலாய மலை இமயமலையின் வடக்கில் திபெத் நாட்டின் மேற்பால் சீன நாட்டின் ஆளுகைக்குட்ட பகுதியாக அமைந்துள்ளது.
Loading map...

Related Content

திருஎறும்பியூர் (திருவெறும்பூர்) திருக்கோயில் தலவரலாறு

திருப்பாண்டிக்கொடுமுடி (கொடுமுடி) மகுடேஸ்வரர் திருக்கோயில் வ

திருப்பருப்பதம் (ஸ்ரீசைலம்) மல்லிகார்ஜுன சுவாமி திருக்கோயில்

திருஇந்திரநீல பருப்பதம் (பத்ரிநாத் - நீலகண்ட சிகரம்)

திருக்கேதாரம் (கேதார்நாத் ஜ்யோதிர்லிங்கம்) தலபுராணம்