அருவாகி உருவாகி அனைத்துமாய் நின்ற பிரான் மருவாருங் குழல் உமையாள் மணவாளன் மகிழ்ந்து அருளும் திருவாரூர்ப் பிறந்தார்கள் திருத் தொண்டு தெரிந்து உணர ஒரு வாயால் சிறியேனால் உரைக்கலாம் தகைமையதோ 1
திருக் கயிலை வீற்றிருந்த சிவபெருமான் திருக் கணத்தார் பெருக்கிய சீர்த் திருவாரூர்ப் பிறந்தார்கள் ஆதலினால் தருக்கிய ஐம் பொறி அடக்கி மற்றவர்தந் தாள் வணங்கி ஒருக்கிய நெஞ்சு உடையவர்க்கே அணித்து ஆகும் உயர் நெறியே 2