வாட்டம் வினாதீல் முன்னுற வுணர்தல் கூட்டி உணரும் குறிப்புரை யாகும். பேரின்பக் கிளவி முன்னுற உணர்தல் எனஇ•து ஒன்றும் சிவம்உயிர் கூடல் அருள்வினா வியது. 1. வாட்டம் வினாதல் நிருத்தம் பயின்றவன் சிற்றம் பலத்துநெற் றித்தனிக்கண் ஒருத்தன் பயிலுங் கயிலை மலையி னுயர்குடுமித் திருத்தம் பயிலுஞ் சுனைகுடைந் தாடிச் சிலம்பெதிர்கூய் வருத்தம் பயின்றுகொல் லோவல்லி மெல்லியல் வாடியதே. 62 கொளு மின்னிடை மடந்தை தன்னியல் நோக்கி வீங்கு மென்முலைப் பாங்கி பகர்ந்தது. முன்னுறவுணர்தல் முற்றிற்று 1