மா Mangifera indica, Linn.; Anacardiaceae.
மந்த மார்பொழில் மாங்கனி மாந்திட மந்திகள் மாணிக்கம்
உந்தி நீர்வரு காவிரி வடகரை மாந்துறை யுறைவானை
நிந்தி யாஎடுத் தார்த்தவல் லரக்கனை நெறித்திடு விரலானைச்
சிந்தி யாமனத் தாரவர் சேர்வது தீநெறி யதுதானே.
. - திருஞானசம்பந்தர்.
திருமாந்துறை, திருமயிலாடுதுறை, திருக்கச்சியேகம்பம், திருக்கச்சி மேற்றளி (பிள்ளைப் பாளையம்) , திருஓணகாந்தன் தளி , திருக்கச்சி அநேகதங்காவதம் , திருநல்லூர்ப் பெருமணம் (ஆச்சாள் புரம்) , திருஉசாத்தானம், திருஅவிநாசி, திருப்பறியலூர், திருநாகைக்காரோணம் , திருநாகை(நாகப்பட்டினம்)அகத்தீஸ்வரர் கோயில் ,பாதாளேச்சுரம் முதலிய சிவத்தலங்களில் மா தலமரமாக விளங்குகிறது. இஃது காம்புள்ள நீண்ட தனி இலைகளையும், கொத்தான மலர்களையும், புளிக்கும் காய்களையும், உண்ணக்கூடிய இனிய சதைக் கனியையும் உடையது; என்றும் பசுமையான பெரிய மரமாக வளரக்கூடியது. தமிழகமெங்கும் கனிகளுக்காகப் பயிரிடப்பெறுகிறது. துளிர், இலை, பருப்பு, பட்டை ஆகியவை மருத்துவக் குணமுடையதாக விளங்குகிறது.
பிஞ்சு உள்ளழலாற்றி பசிமிகுக்கும், காய் மலமிளக்கும், பழம் சிறுநீர் வியர்வை பெருக்கும், பருப்பு நுண்புழுக்களை கொல்லும், உள்ளழலாற்றி உடல் உரம் பெருக்கும், பட்டை சதை நரம்புகளைச் சுருக்கி இரத்தம் சீழ்க்கசிவை அடக்கும்.
திருமுறைகளில் மா பற்றிய குறிப்பு :-

| Name | Mango Tree |
| Family | Anacardiaceae |
| Genus | Mangifera |
| Species | Indica |
| Authority | L. |
| Type | Semi Evergreen |
| Common Family | Cashew |
| Native | India |
| Size | Medium |
| Height | 35-40m |
| Wiki | wikipedia |
| Links | flowersofindia ars-grin theplantlist |
| Description | It is a matter of astonishment to many that the delicious mango, one of the most celebrated of Indian fruits, is a member of the family Anacardiaceae notorious for embracing a number of highly poisonous plants. The mango tree is erect, 30 to 100 ft high, with a broad, rounded canopy which may, with age, attain 100 to 125 ft in width, or a more upright, oval, relatively slender crown. In deep soil, the taproot descends to a depth of 20 ft, the profuse, wide-spreading, feeder root system also sends down many anchor roots which penetrate for several feet. The tree is long-lived, some specimens being known to be 300 years old and still fruiting. Nearly evergreen, alternate leaves are borne mainly in rosettes at the tips of the branches and numerous twigs from which they droop like ribbons on slender petioles 1 to 4 in long. Hundreds and even as many as 3,000 to 4,000 small, yellowish or reddish flowers, 25% to 98% male, the rest hermaphroditic, are borne in profuse, showy, erect, pyramidal, branched clusters 2 1/2 to 15 1/2 in high. There is great variation in the form, size, color and quality of the fruits. They may be nearly round, oval, ovoid-oblong, or somewhat kidney-shaped, often with a break at the apex, and are usually more or less lop-sided. |
| Where | 7th main road, II Stage, indiranagar, Bangalore |

| Color | Grey brown |
| Texture | rough |
| Info | Shallow cracks |

| Size | 10-40 cm |
| Shape | panicles |
| Color | yellowish green |
| Season | Jan-Mar |

| Size | big |
| Shape | kidney |
| Texture | Smooth |
| Color | Green to yellow |
| Info | Edible |

| Type | ovate |
| Texture | Feathery |
| Color | orange ping to red to glossy green |
| Info | Young leaves pink or purple |

Mango Tree - Flower
திருமுறைகளில் மா பற்றிய குறிப்பு :-
தேமாங்கனி கடுவன்கொள
விடுகொம்பொடு தீண்டித்
தூமாமழை துறுகன்மிசை
சிறுநுண்துளி சிதற
ஆமாம்பிணை யணையும்பொழில்
அண்ணாமலை அண்ணல்
பூமாங்கழல் புனைசேவடி
நினைவார்வினை யிலரே. 1.010.2
விண்ட மாம்பொழில் சூழ்திரு வேற்காடு
கண்டு நம்பன் கழல்பேணிச்
சண்பை ஞானசம் பந்தன செந்தமிழ்
கொண்டு பாடக் குணமாமே. 1.057.11
குலவெஞ்சிலையால் மதில்மூன்றெரித்த
கொல்லேறுடை யண்ணல்
கலவமயிலுங் குயிலும்பயிலுங்
கடல்போற் காவேரி
நலமஞ்சுடைய நறுமாங்கனிகள்
குதிகொண் டெதிருந்திப்
பலவின்கனிகள் திரைமுன்சேர்க்கும்
பழன நகராரே. 1.067.5
நாறுகூ விளநா
கிளவெண் மதியத்தோ(டு)
ஆறுசூ டும்அம
ரர்பிரா னுறைகோயில்
ஊறுதேங் கனிமாங்
கனியோங் கியசோலைத்
தாறுதண் கதலிப்
புதல்மேவு சாய்க்காடே. 2.038.3
தலைவாண் மதியங் கதிர்விரியத்
தண்புனலைத் தாங்கித் தேவி
முலைபாகங் காதலித்த மூர்த்தி
யிடம்போலும் முதுவேய் சூழ்ந்த
மலைவாய் அசும்பு பசும்பொன்
கொழித்திழியும் மல்கு சாரல்
குலைவாழைத் தீங்கனியும் மாங்கனியுந்
தேன்பிலிற்றுங் குறும்பலாவே. 2.071.5
பலவு நீள்பொழில் தீங்கனி தேன்பலா
மாங்கனி பயில்வாய
கலவ மஞ்ஞைகள் நிலவுசொற் கிள்ளைகள்
அன்னஞ்சேர்ந் தழகாய
குலவு நீள்வயற் கயலுகள் கோட்டூர்நற்
கொழுந்தேயென் றெழுவார்கள்
நிலவு செல்வத்த ராகிநீள் நிலத்திடை
நீடிய புகழாரே. 2.109.4
2.110 - திருமாந்துறை - செம்பொ னார்தரு
கோலமா மலரொடு தூபமுஞ்
சாந்தமுங் கொண்டுபோற்றி
வாலியார் வழிபடப் பொருந்தினார்
திருந்துமாங் கனிகளுந்தி
ஆலுமா காவிரி வடகரை
யடைகுரங் காடுதுறை
நீலமா மணிமிடற் றடிகளை
நினையவல் வினைகள்வீடே. 3.091.6
ஏவடு சிலையி னாலே
புரமவை எரிசெய் தானே
மாவடு வகிர்கொள் கண்ணாள்
மலைமகள் பாகத் தானே
ஆவடு துறையு ளானே
ஐவரால் ஆட்டப் பட்டேன்
கோவடு குற்றந் தீராய்
கோடிகா வுடைய கோவே. 4.051.8
தலைசுமந் திருகை நாற்றித்
தரணிக்கே பொறைய தாகி
நிலையிலா நெஞ்சந் தன்னுள்
நித்தலும் ஐவர் வேண்டும்
விலைகொடுத் தறுக்க மாட்டேன்
வேண்டிற்றே வேண்டி எய்த்தேன்
குலைகொள்மாங் கனிகள் சிந்தும்
கோவல்வீ ரட்ட னீரே. 4.069.2
வரையின்மாங் கனியொடு வாழையின் கனியும்
வருடியும் வணக்கியும் மராமரம் பொருது
கரையுமா கருங்கடல் காண்பதே கருத்தாய்க்
காம்பீலி சுமந்தொளிர் நித்திலங் கைபோய்
விரையுமா காவிரித் துருத்தியார் வேள்விக்
குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்
உரையுமா றறிகிலேன் எம்பெரு மானை
உலகறி பழவினை அறவொழித் தானை. 7.074.7
மானும்மரை இனமும்மயில்
இனமுங்கலந் தெங்குந்
தாமேமிக மேய்ந்துதடஞ்
சுனைநீர்களைப் பருகிப்
பூமாமரம் உரிஞ்சிப்பொழி
லூடேசென்று புக்குத்
தேமாம்பொழில் நீழல்துயில்
சீபர்ப்பத மலையே. 7.079.1
மாவடு வகிரன்ன கண்ணிபங்
காநின் மலரடிக்கே
கூவிடு வாய்கும்பிக் கேயிடு
வாய்நின் குறிப்பறியேன்
பாவிடையாடு குழல்போற்
கரந்து பரந்ததுள்ளம்
ஆகெடு வேன்உடை யாய்அடி
யேன்உன் அடைக்கலமே. 8.024.8
வான்றோய் பொழிலெழின் மாங்கனி மந்தியின் வாய்க்கடுவன்
தேன்றோய்த் தருத்தி மகிழ்வகண் டாள்திரு நீள்முடிமேல்
மீன்றோய் புனற்பெண்ணை வைத்துடை யாளையும் மேனிவைத்தான்
வான்றோய் மதில்தில்லை மாநகர் போலும் வரிவளையே. 8.கோவை.257
தேமாம் பொழிற்றில்லைச் சிற்றம் பலத்துவிண் ணோர்வணங்க
நாமா தரிக்க நடம்பயில் வோனைநண் ணாதவரின்
வாமான் கலைசெல்ல நின்றார் கிடந்தநம் அல்லல்கண்டால்
தாமா அறிகில ராயினென்னாஞ் சொல்லுந் தன்மைகளே. 8.கோவை.263
வாழும் படியொன்றுங் கண்டிலம் வாழியிம் மாம்பொழில்தேன்
சூழும் முகச்சுற்றும் பற்றின வால்தொண்டை யங்கனிவாய்
யாழின் மொழிமங்கை பங்கன்சிற் றம்பலம் ஆதரியாக்
கூழின் மலிமனம் போன்றிரு ளாநின்ற கோகிலமே. 8.கோவை.322
கணம்விரி குடுமிச் செம்மணிக் கவைநாக்
கறையணல் கட்செவிப் பகுவாய்ப்
பணம்விரி துத்திப் பொறிகொள்வெள் ளெயிற்றுப்
பாம்பணி பரமர்தம் கோயில்
மணம்விரி தருதே மாம்பொழில் மொழுப்பில்
மழைதவழ் வளரிளம் கமுகம்
திணர்நிரை அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த்
திருவளர் திருச்சிற்றம் பலமே. 9.008.1
தெள்ளுநீ றவன்நீ(று) என்னுடல் விரும்பும்
செவியவன் அறிவுநூல் கேட்கும்
மெள்ளவே அவன்பேர் விளம்பும்வாய் கண்கள்
விமானமேநோக்கி வெவ் வுயிர்க்கும்
கிள்ளைபூம் பொதும்பிற் கொஞ்சிமாம் பொழிற்கே
கெழுவுகம் பலைசெய்கீழ்க் கோட்டூர்
வள்ளலே மணியம் பலத்துள்நின் றாடும்
மைந்தனே !என்னும்என் மனனே. 9.010.4
பூட்டொத்து மெய்யிற் பொறிபட்ட வாயுவைத்
தேட்டற்ற வந்நிலஞ் சேரும் படிவைத்து
நாட்டத்தை மீட்டு நயனத் திருப்பார்க்குத்
தோட்டத்து மாம்பழந் தூங்கலு மாமே 10.3.09.7
வித்திடு வோர்க்கு அன்றி மேலோர் விளைவில்லை
வித்திடு வோர்க்கு அன்றி மிக்கோர் அறிவில்லை
வித்தினில் வித்தை விதற உணர்வரேல்
மத்தில் இருந்ததோர் மாங்கனி யாமே. 10.07.21.10
தோட்டத்தில் மாம்பழம் தோண்டி விழுந்தக்கால்
நாட்டின் புறத்தில் நரியழைத்து என்செயும்
மூட்டிக் கொடுத்த முதல்வனை முன்னிட்டுக்
காட்டிக் கொடுத்தவர் கைவிட்ட வாறே. 10.09.22.68
வாழைக் கனிபல வின்கனி
மாங்கனி தாஞ்சிறந்த
கூழைச் சுருள்குழை அப்பம்எள்
ளுண்டைஎல் லாந்துறுத்தும்
பேழைப் பெருவயிற் றோடும்
புகுந்தென் உளம்பிரியான்
வேழத் திருமுகத் துச்செக்கர்
மேனி விநாயகனே. 11.021.4
சுடர்ப்பிழம்பு தழைத்த அழற்றனி நெடுவேல்
சேய்மூ வுலகம் வலம்வர வேயக்
கொன்றையம் படலை துன்றுசடைக் கிடந்த
ஓங்கிருந் தாதையை வளாஅய் மாங்கனி
அள்ளல் தீஞ்சுவை அருந்திய
வள்ளற் கிங்கென் மனங்கனிந் திடுமே. 11.026.13
வளர்தரு கவட்டின் கிளரொளிக் கற்பகப்
பொதும்பர்த் தும்பி ஒழிகின் றோச்சும்
பாரிடைக் குறுநடைத் தோடி ஞாங்கர்
இட்ட மாங்கனி
முழுவதும் விழுங்கிய முளைப்பனைத் தடக்கை
எந்தை அல்லது மற்று யாவுள
சிந்தை செய்யும் தேவதை நமக்கே. 11.026.19
கொம்பனைய வள்ளி
கொழுநன் குறுகாமே
வம்பனைய மாங்கனியை
நாரையூர் - நம்பனையே
தன்னவலம் செய்துகொளும்
தாழ்தடக்கை யாய்என்நோய்
பின்னவலம் செய்வதெனோ பேசு. 11.032.3
வையகத்தார் ஏத்த
மதில்நாரை யூர்மகிழ்ந்து
பொய்யகத்தார் உள்ளம்
புகலொழிந்து - கையகத்தோர்
மாங்கனிதன் கொம்பண்டம்
பாசமழு மல்குவித்தான்
ஆங்கனிநஞ் சிந்தைஅமர் வான். 11.032.17
ஆறுமண் டப்பண்டு செஞ்சொல்
நடாத்தி அமண்முழுதும்
பாறுமண் டக்கண்ட சைவ
சிகாமணி பைந்தடத்த
சேறுமண் டச்சங்கு செங்கயல்
தேமாங் கனிசிதறிச்
சாறுமண் டும்வயல் சண்பையர்
காவலன் சம்பந்தனே. 11.036.9
வடிக்கண்ணி யாளைஇவ்
வான்சுரத்தி னூடே
கடிக்கண்ணி யானோடும்
கண்டோம் - வடிக்கண்ணி
மாம்பொழில்சேர் வைகை
அமண்மலைந்தான் வண்காழிப்
பூம்பொழிலே சேர்ந்திருப்பார் புக்கு. 11.037.29
ஒரு மகள் கூந்தல் தன்னை
வதுவை நாள் ஒருவர்க்கு ஈந்த
பெருமையார் தன்மை போற்றும்
பெருமை என் அளவிற்றாமே
மருவிய கமரிற் புக்க மா
வடு விடேல் என் ஓசை
உரிமையால் கேட்க வல்லார் திறம்
இனி உரைக்கல் உற்றேன். 12.018.37
மின்னும் செஞ்சடை வேதியர்க்காம் என்று
செந் நெல் இன்னமுதோடு செங்கீரையும்
மன்னு பைந்துணர் மாவடுவும் கொணர்ந்து
அன்ன என்றும் அமுது செய்விப்பாரால். 12.019.6
முன்பு போல் முதல்வனாரை
அமுது செய்விக்க மூளும்
அன்பு போல் தூய செந்நெல்
அரிசி மாவடு மென் கீரை
துன்புபோம் மனத்துத் தொண்டர்
கூடையில் சுமந்து போகப்
பின்புபோம் மனைவியார் ஆன் பெற்ற
அஞ்சு ஏந்திச் சென்றார். 12.019.14
நல்ல செங்கீரை தூய
மாவடு அரிசி சிந்த
அல்லல் தீர்த்தாள வல்லார் அமுது
செய்து அருளும் அப்பேறு
எல்லையில் தீமையேன் இங்கு
எய்திடப் பெற்றிலேன் என்று
ஒல்லையில் அரிவாள் பூட்டி
ஊட்டியை அரியல் உற்றார். 12.019.16
மாசறு சிந்தை அன்பர் கழுத்து
அரி அரிவாள் பற்றும்
ஆசில்வண் கையை மாற்ற
அம்பலத்து ஆடும் ஐயர்
வீசிய செய்ய கையும் மாவடு
விடேல் விடேல் என்ற
ஓசையும் கமரில் நின்றும்
ஒக்கவே எழுந்த அன்றே. 12.019.18
பாங்குடைய நெறியின்கட்
பயில்பரம தத்தனுக்கு
மாங்கனிகள் ஓரிரண்டு
வந்தணைந்தார் சிலர்கொடுப்ப
ஆங்கவைதான் முன்வாங்கி
அவர்வேண்டுங் குறையளித்தே
"ஈங்கிவற்றை இல்லத்துக்
கொடுக்க"என இயம்பினான். 12.030.16
இல்லாளன் "வைக்க"எனத்
தம்பக்கல் முன்னிருந்த
நல்லநறு மாங்கனிகள்
இரண்டினில்ஒன் றைக்கொண்டு
வல்விரைந்து வந்தணைந்து
படைத்துமன மகிழ்ச்சியினால்
அல்லல்தீர்ப் பவர்அடியார்
தமைஅமுது செய்வித்தார். 12.030.20
மூப்புறும்அத் தளர்வாலும்
முதிர்ந்துமுடு கியவேட்கைத்
தீப்பசியின் நிலையாலும்
அயர்ந்தணைந்த திருத்தொண்டர்
வாய்ப்புறுமென் சுவைஅடிசில்
மாங்கனியோ டினிதருந்திப்
பூப்பயில்மென் குழல்மடவார்
செயல்உவந்து போயினார். 12.030.21
இன் அடிசில் கறிகள் உடன்
எய்தும் முறை இட்டு அதன்பின்
மன்னிய சீர்க் கணவன் தான்
மனை இடை முன் வைப்பித்த
நல் மதுர மாங்கனியில்
இருந்ததனை நறும் கூந்தல்
அன்ன மனையார் தாமும் கொடு
வந்து கலத்து அளித்தார். 12.030.23
மற்றதனைக் கொடு வந்து மகிழ்ந்து
இடலும் அயின்று அதனில்
உற்ற சுவை அமுதினும் மேல்
பட உளதாயிட இது தான்
முன் தரு மாங் கனி
அன்று மூவுலகில் பெறர்க்கு அரிதால்
பெற்றது வேறு எங்கு என்று
பெய் வளையார் தமைக் கேட்டான். 12.030.26
பாங்கு அகன்று மனைவியார் பணி
அணிவார் தமைப் பரவி
ஈங்கு இது அளித்து அருளீரேல்
என் உரை பொய்யாம் என்ன
மாங்கனி ஒன்று அருளால் வந்து
எய்துதலும் மற்று அதனை
ஆங்கு அவன் கைக்
கொடுத்தலுமே அதிசயித்து வாங்கினான். 12.030.30
வணிகனும் தன் கைப் புக்க
மாங்கனி பின்னைக் காணான்
தணிவரும் பயம் மேற்கொள்ள
உள்ளமும் தடுமாறு எய்தி
அணி குழல் அவரை வேறு ஓர்
அணங்கு எனக் கருதி நீங்கும்
துணிவு கொண்டு எவர்க்கும் சொல்லான்
தொடர்வின்றி ஒழுகு நாளில். 12.030.31