logo

|

Home >

hindu-hub >

temples

திருக்கச்சிஅனேகதங்காவதம் (காஞ்சிபுரத்தில் உள்ள திருக்கோயில்)

இறைவர் திருப்பெயர்: அனேகதங்காவதேஸ்வரர், அனேகபேஸ்வரர்.

இறைவியார் திருப்பெயர்:

தல மரம்:

தீர்த்தம் : விட்டுணு தீர்த்தம்

வழிபட்டோர்:குபேரன், விநாயகர், சம்பந்தர், சுந்தரர் , சேக்கிழார்

Sthala Puranam

kacci anekatangavadam temple
கச்சி அனேகதங்காவதேஸ்வரர் திருக்கோயில் 
  • அனேகதம் - யானை. யானை முகத்தையுடைய விநாயகர் சிவலிங்கத் திருமேனியை பிரதிஷ்டை செய்து வழிபட்ட தலம்.
  • அனேகதங்காபதம் என்ற பெயரில் இமயமலைச் சாரலில் ஒரு தலமிருப்பதால், அதனின்றும் வேறுபாடு அறிய இத்தலத்தை "கச்சி அனேகதங்காவதம்" என்றழைக்கப்படுகிறது.
  • விநாயகப் பெருமான், இரணியபுரம் நகரத்திலுள்ள அசுரர்களை அழித்து, அவர்கள் கருவில் தங்கியிருந்த "வல்லபை" என்னும் அவர்களின் சத்தியைப் பிரித்து மணம் புரிந்து கொண்டார். அசுரர்களை அழிப்பதற்கு புறப்படுமுன் தம் பெயரில் "அனேகபேஸ்வரர்" என்று சிவலிங்கம் ஸ்தாபனம் செய்து வழிபட்டுப் புறப்பட்டுச் சென்றார். விநாயகர் பிரதிஷ்டை செய்த அம்மூர்த்தியே இன்று அனேகதங்காவதேஸ்வரர் என்று திருநாமம் கொண்டு விளங்குகிறார். (அனேகபம் = யானை).
  • குபேரன் தான் செய்த வழிபாட்டுப் பலனாக அளகைக்கு அரசனானான். அசுரகுருவான சுக்கிரன் அவன் மீது பொறாமை கொண்டு தொல்லைகள் கொடுக்க, குபேரன் இங்கு சிவபெருமானைத் தன்னைக் காக்கும்படி வேண்டினான். சிவபெருமான் அவனுக்காக சுக்கிரனை விழுங்கி சுக்கிரனின் கர்வத்தை அடக்கினார். குபேரனைக் காத்தார்.
  • இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது.

 

திருமுறைப் பாடல்கள் : பதிகங்கள்   :   சுந்தரர்     -   1. தேனெய் புரிந்துழல் செஞ்சடை (7.10); பாடல்கள்    :  சேக்கிழார்   -      நீடு திருப் பொலிகாஞ்சி (12.28.1000) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்,                                     அங்கண் அமர்வார் (12.29.192) ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்.

 

 

Specialities

  • சுந்தரர் பாடியுள்ள இத்தலப்பதிகம் - ' தேனெய் புரிந்துழல்' என்று தொடங்குவது; அழகான கும்மிமெட்டில் அமைந்துள்ளது. பாடி அனுபவிக்கும்போது அச்சுவை வெளிப்படுகின்றது.
  • மூன்று கல்வெட்டுக்கள் இருக்கின்றன. முதற் குலோத்துங்க சோழனின் முப்பத்து நான்காம் ஆட்சியாண்டில் தோன்றிய கல்வெட்டு, திருக்கோயிலுக்கு இரண்டுவேலி நிலம் கொடுத்ததைக் குறிப்பிடுகின்றது. இந்நிலம் காஞ்சீபுரத்தில் இராஜ சிம்மேஸ்வரம் அல்லது கைலாசநாதர் கோயிலுக்கு வடக்கில் உள்ளது. குலோத்துங்க சோழனின் இருபதாம் ஆண்டுக் கல்வெட்டு, தாமர்க்கோட்டத்து தாமர்நாட்டுத் தாமர் (தாமல்) அல்லது நித்தவிநோதநல்லூரில், அரசன் மூன்றுவேலி நிலத்தை இறைவர்க்குக் கொடுத்ததைக் குறிப்பிடுகின்றது. மூன்றாவது கல்வெட்டு அநேகதங்காபதக்கோயில் அதிகாரிகள், கோயிலுக்குரிய கைக்கோளர்களுக்கு 1400 குழி நிலத்தைக் கொடுத்ததைக் குறிப்பதாகும்.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து, புத்தேரித் தெரு வழியாகக் கயிலாயநாதர் கோயிலுக்குச் செல்லும் வழியில் சென்று இக்கோயிலை அடையலாம். தொடர்பு : 044-2722 2084

Related Content

திருக்கச்சியேகம்பம் தல புராணம் (காஞ்சிபுரம்)

திருக்கச்சிமேற்றளி (திருமேற்றளீஸ்வரர் கோயில், பிள்ளையார்பாள

ஓணகாந்தன்தளி (காஞ்சிபுரத்தில் உள்ள திருக்கோயில்) தலவரலாறு

திருக்கச்சிநெறிக்காரைக்காடு (திருக்காலிமேடு) காஞ்சிபுரத்தில

திருமாற்பேறு தலவரலாறு (திருமால்பூர்)