இறைவர் திருப்பெயர்: மயூரநாதர்.
இறைவியார் திருப்பெயர்: அபயாம்பிகை.
தல மரம்:
தீர்த்தம் : பிரம தீர்த்தம், காவிரி, ரிஷப தீர்த்தம்.
வழிபட்டோர்: சம்பந்தர், அப்பர், சேக்கிழார், இந்திரன், பிரமன், வியாழபகவான், அகத்தியர், சப்தமாதாக்கள், உமாதேவி, , அக்கினி, எமன், நிருதி, வருணன், வாயு ஆகியோர்.
Sthala Puranam
அம்பாள் இறைவனை மயில் வடிவில் வழிபட்டதாலும்; மயில் வடிவாகவே ஆடியதாலும் இத்தலம் மயிலாடுதுறை என்றாயிற்று. அம்மை அவ்வாறு ஆடிய தாண்டவம் கௌரி தாண்டவம் எனப்படும்; இதனால் இத்தலம் "கௌரி மாயூரம்" என்றும் பெயர் பெற்றது.
தேவாரப் பாடல்கள் : பதிகங்கள் : சம்பந்தர் - 1. கரவின் றிநன்மா மலர் (1.38), 2. ஏனவெயி றாடரவோ (3.70); அப்பர் - 1. கொள்ளுங் காதன்மை பெய் (5.39); பாடல்கள் : அப்பர் - கயிலாய மலையுள்ளார் (6.51.1), சடையேறு (6.59.4), கயிலாயமலை (6.71.11), மற்றாருந் (6.81.4), சேக்கிழார் - மேவு புனல் பொன்னி (12.21.190) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம், மூவலூர் உறை முதல்வரைப் (12.28.437 & 438) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.
Specialities
ஆயிரம் ஆனால் மாயூரம் ஆகுமா? (மாயூரம் - மயிலாடுதுறை) என்னும் முதுமொழி இதன் சிறப்பை விளக்கும்.
சூதவனம், சிகண்டிபுரம், பிரமபுரம், தென்மயிலை என்பன இத்தலத்தின் வேறு பெயர்களாம்.
கோயில் உட்சுற்றில் இந்திரன், அக்கினி, எமன், நிருதி, வருணன், வாயு வழிபட்ட லிங்கங்கள் உள்ளன.
இத்தலத்துக் காவிரித் துறையில் (ஐப்பசி) துலா நீராடுதல் மிகவும் விசேஷமாக சொல்லப்படுகிறது.
கந்தபுராணத்தில் வழிநடைப் படலத்தில் இத்தலம் பற்றிய குறிப்பு வந்துள்ளது சிறப்புடையது.
மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளையவர்கள் தலபுராணம், அபயாம்பிகை மாலையும், அபயாம்பிகை அந்தாதியும் பாடியுள்ளார்.
கல்வெட்டில் இத்தல இறைவன் "மயிலாடுதுறை உடையார் " என்று குறிக்கப் பெறுகின்றார்.
Contact Address