இறைவர் திருப்பெயர்: சர்ப்பப்புரீஸ்வரர், நாகநாதர்.
இறைவியார் திருப்பெயர்: அமிர்தநாயகி.
தல மரம்:
தீர்த்தம் : நாக தீர்த்தம்.
வழிபட்டோர்:சம்பந்தர், சேக்கிழார் ஆதிசேஷசன் (தனஞ்சய முனிவராய்),சுகல முனிவர் ஆகியோர்.
Sthala Puranam
மக்கள், இத்தலத்தை வழக்கில் "பாமணி" என்று வழங்குகிறார்கள்.
இத்தலத்தின் பெயரான 'பாம்பணி' என்பது மருவி "பாமணி" என்றாயிற்று. (சம்பந்தர் பாட்டில் 'பாதாளேசசுரம்' என்று குறிக்கப்படும் பெயர், பிற்காலத்தில் சுந்தரர் 'பாம்பணி' என்று மாறி வருவதை நோக்குங்கால் அக்காலத்திலேயே இப்பெயர் மாறிப்போய் விட்டிருப்பதை அறியமுடிகிறது.)
பாதாளத்திலிருந்து ஆதிசேஷன் வெளிப்பட்டு (தனஞ்சய முனிவராய்) வழிபட்டத் தலமாதலின் பாதாளீச்சுரம் எனப்பட்டது.
சுகல முனிவர் வளர்த்த காமதேனு பால் சொரிந்து சிவலிங்கத்தை வழிபடுவதைக் கண்டு, முனிவர் தமக்குப் பால் குறைந்து விடுமே என்று கோபித்து அடித்தார் - அதுகண்டு வருந்திய காமதேனு ஓடிச் சென்று; வழிபட்டதனால் தனக்கு நேர்ந்த நிலையை உணர்த்துவது போலச் சிவலிங்கத்தின்மீது முட்டி ஓடி - (வடக்கு வீதியில் உள்ள) பசுபதி தீர்த்தத்தில் விழுந்து இறந்தது. அப்போது இறைவன் காட்சித் தந்து பசுவை உயிர்ப்பித்தார். காமதேனு முட்டியதால் மூலத்திருமேனி மூன்று வடுக்களையுடையதாய் - முப்பிரிவாகக் காட்சித் தருகின்றது.
தேவாரப் பாடல்கள் :
பதிகங்கள் : சம்பந்தர் - 1. மின்னியல் செஞ்சடைமேல் (1.108);
பாடல்கள் : சேக்கிழார் - பொன்னி வளம் தரு நாடு (12.28.896) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.
Specialities
பாம்பணி, சர்ப்பபுரம் என்பன இத்தலத்தின் வேறு பெயர்கள்.
மூலவர் - சுயம்பு மூர்த்தி; முப்பிரிவாக அமைத்து செப்புத் தகட்டால் ஒன்றாகப் பொருத்தப்பட்டு விளங்குகிறது.
பாம்பு வழிபட்டமையால் பாம்புபோன்ற வடுவும் மூலவரின் முன்புறத்தில் உள்ளது.
ஆதிசேஷன், தனஞ்சயர் வடிவில் தோன்றி, பிரதிஷ்டை செய்து இறைவனை வழிபட்ட நாள் ஐப்பசி முதல் நாளாகும். எனவே அந்நாளில் நம் உணவு போலவே சோறு, குழம்பு, காய்கறி வகைகள், வடை, பாயசம் சமைத்து சுவாமிக்கு அபிஷேகம் செய்து நிவேதித்தால் தோஷம் நிவர்த்தியாகிறது என்ற நம்பிக்கை மக்களிடையயே உள்ளது.
இராஜராஜன் காலக் கல்வெட்டில் இத்தலம் "சுற்ற வேலி வளநாட்டு பாம்பணி கூற்றத்துப் பாமணி" என்று குறிக்கப்படுகிறது.
Contact Address