இறைவர் திருப்பெயர்: அகஸ்தீஸ்வரர்
இறைவியார் திருப்பெயர்: ஆனந்தவல்லி.
தல மரம்:
தீர்த்தம் : அகத்திய தீர்த்தம். தேவ தீர்த்தம், புண்டரீகத் தீர்த்தம்
வழிபட்டோர்:
Sthala Puranam
திருக்கயிலையில் சிவ-பார்வதியரின் திருமணம் நடந்தபோது, வடதிசை தாழவே, பூமியைச் சமன் செய்யும் பொருட்டு, அகத்திய முனிவரைத் தென்திசைக்கு அனுப்பினார் சிவபெருமான். அதன்படி பொதிகையை நோக்கி வந்த முனிவர் நாகையில் தங்கி, காயாரோகணத்தின் வடக்கே ஓர் சிவலிங்கத்தை ஸ்தாபித்து, பூஜித்து வந்தார். அதன் கிழக்கில் ஓர் தீர்த்தமும் ஏற்படுத்தினார்; அத்தீர்த்தம் அகத்திய தீர்த்தம் எனப்படுகிறது.
கடலில் மறைந்திருந்த வண்ணம் அசுரர்கள் தேவர்களை தாக்கும்போது துன்பப்பட்ட தேவர்கள் அகத்தியரை அணுகினர்; அகத்திய முனிவரும் கடல் நீரைப் பருகிவிட்டார்; அதனால் வெளிவந்த அசுரர்களைத் தேவர்கள் வென்றனர். இவ்வாறு தர்மத்தை நிலை நிறுத்துகையில், அகத்தியர் தங்கி பூஜித்த ஆலயம் இது என்பர்
Specialities
இத்தலத்தில் ஸ்ரீஆனந்தவல்லி சமேத ஸ்ரீஅகஸ்தீசுவரசுவாமியை அகத்தியமுனிவர் வழிபட்டுள்ளார்.
Contact Address