இறைவர் திருப்பெயர்: | ஓணேஸ்வரர், காந்தேஸ்வரர். |
---|---|
இறைவியார் திருப்பெயர்: | |
தல மரம்: | |
தீர்த்தம் : | விட்டுணு தீர்த்தம் |
வழிபட்டோர்: | ஓணன், காந்தன் (இவர்கள் வாணாசுரனின் சேனாதிபதிகளாவர்), சலந்தரன், சுந்தரர் , சேக்கிழார் முதலியோர் |
தலவரலாறு - வாணாசுரனுடைய சேனாதிபதிகளான ஓணன், காந்தன் என்னும் இருவர் வழிபட்ட தலம்; ஆதலின் இது ஓணகாந்தன்தளி என்று பெயர் பெற்றது.
இவ்விருவரும் வழிபட்ட ஓணேஸ்வரர், காந்தேஸ்வரர் ஆகிய இரு சிவலிங்கத் திருமேனிகளும் கோயிலில் அடுத்தடுத்து தனிச் சந்நிதிகளாக உள்ளன.
சலந்தரன் வழிபட்டதாக சொல்லப்படும் சலேந்தரேஸ்வரர் சிவலிங்கத் திருமேனி தனியே உள்ளது; இக்கோயிலுக்கு வெளியேயிருந்த, சலந்தரன் வழிபட்ட சிவலிங்கத் திருமேனியை எடுத்துவந்து இங்கு தனிக்கோயிலாக ஸ்தாபனம் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதுவே சலந்தரேசம் எனப்படுகிறது; இது பிற்கால பிரதிஷ்டையாகும்.
இங்கு வந்த சுந்தரர், இறைவனிடம் அடிமைத் திறம் பேசி, 'நெய்யும் பாலும் தயிரும் கொண்டு' என்று தொடங்கும் பதிகம் பாடி பொன் பெற்றார் என்பது வரலாறு.
மேற்படி பதிகத்தில் ஐந்தாவது பாடலைத் தொடங்கிப் பாடும்போது, இறைவன் பக்கத்தில் உள்ள புளிய மரத்தில் சென்று ஒளிந்து கொண்டதாகவும்; அஃதறிந்த சுந்தரர் அங்குச் சென்று பதிகத்தை தொடரவே, இறைவன் அப்புளிய மரத்துக் காய்களையே பொன் காய்களாக விழுமாறு உதிர்க்க, சுந்தரர் அவற்றைப் பெற்றார் என்பதாக இப்பகுதியில் செவிவழிச் செய்தியாகச் சொல்லப்படுகிறது.
தேவாரப் பாடல்கள் : பதிகங்கள் : சுந்தரர் - 1. நெய்யும் பாலுந் தயிருங் (7.5); பாடல்கள் : சேக்கிழார் - ஓண காந்தன் தளி மேவும் (12.29.191) ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்.
அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு காஞ்சிபுரம் - அரக்கோணம் பேருந்து சாலையில் (கோயில் உள்ள பகுதி பஞ்சுப்பேட்டை எனப்படும்) உள்ளது. தொடர்பு : 098944 43108