இறைவர் திருப்பெயர்: அவிநாசி லிங்கேஸ்வரர், அவிநாசிஈஸ்வரர், அவிநாசிநாதர், பெருங்கேடிலியப்பர்.
இறைவியார் திருப்பெயர்: கருணாம்பிகை, பெருங்கருணை நாயகி.
தல மரம்:
தீர்த்தம் : காசிக் கங்கை, காசிக்கிணறு, நாகக்கன்னிகைத் தீர்த்தம், ஐராவதத்தீர்த்தம்.
வழிபட்டோர்:சுந்தரர் - எற்றான் மறக்கேன், மாணிக்கவாசகர், சேக்கிழார் முதலியோர்
Sthala Puranam
பழைய பதியாகிய புக்கொளியூர் நத்தம் தற்போது அழிந்து வெட்டவெளியாகவுள்ளது. பிற்காலத்தில் தோன்றிய நகரமே தற்போதுள்ள அவிநாசியாகும்.
அவிநாசி - விநாசம் இல்லாதது. ஊர்ப்பெயர் - புக்கொளியூர், இறைவன் - அவிநாசி, இறைவன் பெயரே இன்று ஊர்ப்பெயராயிற்று.
இக்கோயிலில் முதலில் உள்ள வழிகாட்டி விநாயகரை தரிசித்து, பிறகு தவத்திலிருக்கும் (பாதிரி மரத்து) அம்பாளைத் தரிசித்து, பிறகுதான் சுவாமியைத் தரிசிக்க வேண்டும்.
திருமுறை பாடல்கள் : பதிகங்கள் : சுந்தரர் - 1. எற்றான் மறக்கேன் (7.92); பாடல்கள் : மாணிக்கவாசகர் - நரியைக் குதிரைப் பரியாக்கி (8.50.7) ஆனந்தமாலை; சேக்கிழார் - மைந்தன் தன்னை (12.72.9 & 13) வெள்ளானைச் சருக்கம்.
Specialities
கல்லாலான தீபஸ்(துவஜ)தம்பத்தின் கீழ் தனியே சுந்தரர் உருவம், முதலை பிள்ளையை வெளிப்படுத்தும் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது.
காலபைரவர் சந்நிதி உள்பிரகாரத்தில் இருப்பது இங்கு மட்டும் தான்; இவருக்கு வடைமாலை அணிவிப்பது விசேஷமான பிரார்த்தனையாம்.
சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் இத்தலம் சென்ற போது, ஒரு வீட்டில் மங்களவாத்திய கோஷமும், எதிர் வீட்டில் அழுகுரலும் கேட்டது. இருமறை சிறுவர்கள் ஒரு மடுவில் நீராடச் சென்ற போது ஒருவனை முதலை விழுங்கிற்றென்றும், மற்றவனுக்கு உபநய சடங்கு வாத்திய கோஷத்தோடு நடக்கிறதென்றும், எதிர் வீட்டில் மாண்ட சிறுவனின் தாய், தன் மகனும் உயிரோடிருந்தல் அவனுக்கும் உபநயம் சிறப்பாக நடைபெறும் என நினைத்து அழுகிறாள் என்றும்,அங்குள்ள முதியோர் கூறக் கேட்டார்.இறந்த சிறுவனின் தாய் தந்தையர் சுந்தரரை விழுந்து வணங்கினர்.
இரக்கம் மிக்க சுந்தரர் மடுவிற்குச் சென்று, அதில் முதலையை வரவழைத்து, வளர்ச்சி பெற்ற மறைச்சிறுவனை அது தரும்படியாகக் காலனுக்குக் கட்டளையிடுமாறு அவிநாசியப்பனுக்கு பதிகம் பாடி வேண்டுகோள் விடுத்தார்.உடனே முதலை மறைச்சிறுவனை மடுக்கரையிற் சேர்த்தது.அவனுக்கும் அப்பொழுதே உபநயம் செய்து வைத்தார்.
கோயிலுக்குப் பக்கத்தில் ஒரு கி.மீ. தொலைவில் முதலையுண்ட பாலனை மீட்ட ஏரியும், கரையில் சுந்தரர் சந்நிதியும் உள்ளது.
ஹரதத்தாசாரிய ஸ்வாமிகள் "ஹரிஹரதாரத்ம்யம்" என்ற வடமொழி நூலில் ஒரு ஸ்லோகத்தில் இதை புகழ்கிறார்.
1695-ல் வாழ்ந்த சிக்கதேவராய உடையார் காலத்திய கல்வெட்டுக்கள் சுற்றுப்புற மண்டபச் சுவர்களிலும்; சந்நிதித்தூண்களிலும் உள்ளன.
Contact Address