logo

|

Home >

thala-marangalin-sirappukal >

temple-trees-jackfruit-tree

Om symbol

temple-trees-தலமரச் சிறப்புகள் பலா மரம் (The Jackfruit Tree)

Om symbol

தலமரச் சிறப்புகள்


பலா Atrocarpus integrifolia. Linn.; Moraceae

பலா / palaa / Atrocarpus integrifolia
பலா மரம்

நாட்பலவுஞ் சேர்மதியஞ் சூடிப் பொடியணிந்த நம்பான் நம்மை
ஆட்பலவுந் தானுடைய அம்மா னிடம்போலு மந்தண் சாரல்
கீட்பலவுங் கீண்டு கிளைகிளையன் மந்திபாய்ந் துண்டு விண்ட
கோட்பலவின் தீங்கனியை மாக்கடுவ னுண்டுகளுங் குறும்ப லாவே.

                                                                                                                        - திருஞானசம்பந்தர்.

திருக்குற்றாலம திருக்குறும்பலா,  திருநாலூர்,திருவாய்மூர்,தலையாலங்காடு, கடிக்குளம், திருக்காறாயில்,திருவாலங்காடு , திருஇன்னம்பர் , திருக்கொடுங்குன்றம் (பிரான்மலை) , திருப்பூவணம் , திருபறியலூர் (பரசலூர்), திருப்பூவனூர் முதலிய பத்துக்கும் மேற்பட்ட சிவத் திருகோயில்களில் தலமரமாக விளங்குகிறது. பளபளப்பான கரும்பச்சை இலையும், உருளை வடிவான புறத்தே முள்ளுள்ள இனிய சுளைகளுடைய பெருங்கனிகளையும், பளிச்சிடும் மஞ்சள் நிறக் கட்டையையும் உடைய பசுமையான பெருமரம். தமிழகமெங்கும் கனிகளுக்காகப் பயிரிடப் பெறுகிறது; காடுகளில் தானேயும் வளர்கிறது. திருக்குற்றாலத்துத் தலமரத்துப் பலாப்பழம் உண்ணப்படுவதில்லை. பலாப்பழம் உடல் நலத்திற்கு ஏற்றதன்று என்பதைக் குறிக்கவே இம்மரபு ஏற்பட்டிருக்கலாம். இலை, பிஞ்சு, காய், பால், வேர் ஆகியவை மருத்துவப் பயனுடையவை.

 

பொதுவாக சதை நரம்புகளைச் சுருங்கச் செய்யும் தன்மை உடையது. பழம் மலமிளக்கும், உள்ளழல் ஆற்றும், உடலை உரமாக்கும்.

Artocarpus heterophyllus, Lam. <=> Jackfruit Tree

 

Canopy

 

Jackfruit tree canopy

NameJackfruit Tree
FamilyMoraceae
GenusArtocarpus
SpeciesHeterophyllus
AuthorityLam.
TypeEvergreen
Common FamilyMulberry
NativeIndia
SizeMedium
Height20 m

 

Reference

 

Wikiwikipedia
Linksflowersofindia
ars-grin
theplantlist
Language HindiKatthal, kantthal
DescriptionJackfruit is a tree which is unique in the fact that it produced huge fruits directly from its stem. Jackfruit is most probably native of the rain-forests of the Western Ghats. In fact, the name Jackfruit is derived from the malayalam name chakka. The tree is handsome and stately, 30-70 ft tall, with evergreen, alternate, glossy, somewhat leathery leaves to 9 in long, oval on mature trees, sometimes oblong or deeply lobed on young shoots. All parts contain a sticky, white latex. Short, stout flowering twigs emerge from the trunk and large branches, or even from the soil-covered base of very old trees. Tiny male flowers are borne in oblong clusters 2-4 in in length; the female flower clusters are elliptic or rounded. Largest of all tree-borne fruits, the jackfruit may be 8-to 3 ft long and 6-20 in wide, and the weight ranges from 10-50 kg. The "rind' or exterior of the compound or aggregate fruit is green or yellow when ripe and composed of numerous hard, cone-like points attached to a thick and rubbery, pale yellow or whitish wall. The interior consists of large "bulbs" of yellow, banana-flavored flesh, massed among narrow ribbons of thin, tough undeveloped perianths, and a central, pithy core. Each bulb encloses a smooth, oval, light-brown "seed" covered by a thin white membrane. There may be 100 or up to 500 seeds in a single fruit. When fully ripe, the unopened jackfruit emits a strong disagreeable odor, resembling that of decayed onions, while the pulp of the opened fruit smells of pineapple and banana.
WhereLalbagh, Bangalore

 

Bark

 

Jackfruit tree bark

ColorGrey
Texturecracked

 

Flowers

 

Jackfruit tree flower

ShapeWhite
SeasonOct-Dec

 

Fruits

 

Jackfruit tree fruit

SizeGigantic
ShapePear Shaped, barrel
ColorYellowish green

 

Leaves

 

Jackfruit tree leaf

TypeOval
Size20 cm
Textureglossy

 

Picture Carousel (23)

 

Jackfruit Tree

Jackfruit Tree - Flower Bud 1

‹›

திருமுறைகளில் பலா பற்றிய குறிப்பு :-

நெற்குன்றம் ஓத்தூர் நிறைநீர் மருகல்
 நெடுவாயில் குறும்பலா நீடுதிரு
நற்குன்றம் வலம்புரம் நாகேச்சுரம்
 நளிர்சோலை உஞ்சேனை மாகாளம் வாய்மூர்
கற்குன்ற மொன்றேந்தி மழைதடுத்த
 கடல்வண் ணனுமாமல ரோனுங்காணாச்
சொற்கென் றுந்தொலைவிலாதா னுறையுங்
 குடமூக்கென்றுசொல் லிக்குலா வுமினே.  2.039.9 

2.071 - திருக்குறும்பலா - திருந்த மதிசூடித்

பலவு நீள்பொழில் தீங்கனி தேன்பலா            
 மாங்கனி பயில்வாய            
கலவ மஞ்ஞைகள் நிலவுசொற் கிள்ளைகள்            
 அன்னஞ்சேர்ந் தழகாய            
குலவு நீள்வயற் கயலுகள் கோட்டூர்நற்            
 கொழுந்தேயென் றெழுவார்கள்            
நிலவு செல்வத்த ராகிநீள் நிலத்திடை            
 நீடிய புகழாரே.  2.109.4 

கானமுறு மான்மறியன் ஆனையுரி
 போர்வைகன லாடல்புரிவோன்
ஏனஎயி றாமையிள நாகம்வளர்
 மார்பினிமை யோர்தலைவனூர்
வானணவு சூதமிள வாழைமகிழ்
 மாதவிப லாநிலவிவார்
தேனமுது வுண்டுவரி வண்டுமருள்
 பாடிவரு தேவூரதுவே.   5  

தாங்கருங் காலந் தவிரவந் திருவர் 
 தம்மொடுங் கூடினா ரங்கம் 
பாங்கினால் தரித்துப் பண்டுபோ லெல்லாம் 
 பண்ணிய கண்ணுதற் பரமர்
தேங்கொள்பூங் கமுகு தெங்கிளங் கொடிமாச் 
 செண்பகம் வண்பலா இலுப்பை
வேங்கைபூ மகிழால் வெயில்புகா வீழி 
 மிழலையா னெனவினை கெடுமே.   4  

தெள்ளும் புனற்கெடில வீரட்டமுந் 
திண்டீச் சரமுந் திருப்புகலூர்
எள்ளும் படையான் இடைத்தானமும்
ஏயீச் சரமுநல் லேமங்கூடல்
கொள்ளு மிலயத்தார் கோடிகாவுங் 
குரங்கணில் முட்டமுங் குறும்பலாவுங்
கள்ளருந்தத் தெள்ளியா ருள்கியேத்துங்
காரோணந் தம்முடைய காப்புக்களே.   8  

பாடார்ந் தனமாவும்
 பலாக்க ளும்சாடி 
நாடார வந்தெற்றி
 யோர்பெண்ணை வடபால் 
மாடார்ந் தனமாளி
 கைசூழுந் துறையூர் 
வேடா உனைவேண்டிக்
 கொள்வேன் தவநெறியே.   5  

உழைதரு நோக்கியர் கொங்கைப்
 பலாப்பழத்து ஈயினொப்பாய்
விழைதரு வேனை விடுதிகண் 
 டாய்விடின் வேலைநஞ்சுண்
மழைதரு கண்டன் குணமிலி 
 மானிடன் தேய்மதியன்
பழைதரு மாபரன் என்றென்று
 அறைவன் பழிப்பினையே.   46  

அமுதச் சசிவிந்து வாம்விந்து மாள
அமுதப் புனலோடி அங்கியின் மாள 
அமுதச் சிவயோகம்1 ஆதலால் சித்தி
அமுதப் பலாவனம் ஆங்குறும் யோகிக்கே.

பா-ம் : 1 சிவபோகம்   23  

ஆத்த மனையாள் அகத்தில் இருக்கவே
காத்த மனையாளைக் காமுறுங் காளையர்
காய்ச்ச பலாவின் கனியுண்ண மாட்டாமல்
ஈச்சம் பழத்துக்கு இடருற்ற வாறே.   1  

கனைய பலாங்கனிகள் 
 கல்லிலையர் தொக்க
நனைய கலத்துரத்தில் 
 ஏந்தி - மனைகள்
வரவிரும்பி ஆய்பார்க்கும் 
 ஈங்கோயே பாங்கார்
குரவரும்பு செஞ்சடையான் குன்று.   21  

பற்றார் தம் புரங்கள் மலைச் சிலையால் 
 செற்ற பரமனார் திருப்புத்தூர் பணிந்து போந்து 
புற்று ஆரும் பணி பூண்ட புனிதனார் தம் 
 பூவணத்தைப் புக்கு இறைஞ்சிப் புகழ்ந்து பாடிக் 
கற்றார்கள் தொழுது ஏத்தும் கானப் பேரும் 
 கைதொழுது தமிழ் பாடிச் சுழியல் போற்றிக் 
குற்றாலம் குறும்பலாக் கும்பிட்டு ஏத்திக் 
 கூற்று உகைத்தார் நெல்வேலி குறுகினாரே.   886  

குற்றாலத்து இனிது அமர்ந்த கூத்தர் 
 குரை கழல் வணங்கிச்
சொல்தாம மலர் புனைந்து குறும் 
 பலாத் தொழுது இப்பால்
முற்றா வெண்மதி முடியார் 
 பதிபணிந்து மூவெயில்கள்
செற்றார் மன்னிய செல்வத் 
 திருநெல் வேலியை அணைந்தார்.   107  

 

< PREV <
பராய்மரம்
Table of Content> NEXT >
பவளமல்லிகை

 

 

Related Content

Pictures of Sthala vruksham or Temple Trees

temple-trees-தலமரச் சிறப்புகள் மாமரம் - Mango Tree

தலமரச் சிறப்புகள் - வாழை மரம் - Banana or Plantain Tree