பராய் Streblus asper, Lour.; Moraceae.
நெருப்ப ராய்நிமிர்ந் தாலொக்கு நீள்சடை மருப்ப ராய்வளைந் தாலொக்கும் வாண்மதி திருப்ப ராய்த்துறை மேவிய செல்வனார் விருப்ப ராயிருப் பாரை அறிவரே.
. - திருநாவுக்கரசர்.
திருப்பராய்த்துறை திருக்கோயிலின் தலமரமாக விளங்குவது பராய் மரமாகும். இது பிராய், பிறாமரம், குட்டிப்பலா என்றெல்லாம் குறிக்கப்பெறுகிறது. சுரசுரப்பான கரும்பச்சை இலைகளையுடைய வெள்ளை நிற மரம். புதர்க்காடுகளில் காணப்படும். இலை, பால், பட்டை முதலியன மருத்துவப் பயனுடையன.