இறைவர் திருப்பெயர்: தாருகவனேஸ்வரர், பராய்த்துறைநாதர்.
இறைவியார் திருப்பெயர்: ஹேமவர்ணாம்பாள், பசும்பொன்மயிலாம்பாள்.
தல மரம்:
தீர்த்தம் : காவிரி.
வழிபட்டோர்:சம்பந்தர், அப்பர், மாணிக்கவாசகர், பட்டினத்துப் பிள்ளையார், சேக்கிழார், இந்திரன், குபேரன், சப்தரிஷிகள் ஆகியோர்.
Sthala Puranam
பராய் மரக்காட்டில் இறைவன் எழுந்தருளியிருப்பதால் இத்தலம் 'பராய்த்துறை' எனப்படுகிறது. இத்தலத்திற்கு 'தாருகாவனம்' என்றும் பெயருண்டு. (பராய் மரம், சமஸ்கிருதத்தில் 'தாருகா விருக்ஷம்' எனப்படுகிறது.)
இறைவன் பிட்சாடனராய்ச் சென்று தாருகாவனத்து முனிவர்களின் செருக்கை அகற்றி அவர்கட்கு அருள்புரிந்தார்.
தேவாரப் பாடல்கள் :
பதிகங்கள் : சம்பந்தர் - 1. நீறுசேர்வதொர் (1.135);
அப்பர் - 1. கரப்பர் கால (5.30);
பாடல்கள் : சம்பந்தர் - கோலக் காவிற் (4.15.5);
அப்பர் - செழுநீர்ப் புனற்கெடில (6.007.5),
இடிப்பான்காண் (6.008.2),
நஞ்சடைந்த (6.013.6),
பகலவன்றன் (6.33.10),
வெண்காட்டார் (6.51.4),
வீழி மிழலைவெண் காடு (6.70.7),
கயிலாயமலை (6.71.11),
படமாடு (6.81.8),
விண்ணோர் (6.82.2),
ஐந்தலைய (6.86.8);
மாணிக்கவாசகர் - பராய்த் துறை மேவிய பரனே போற்றி (8.04.153) போற்றித் திருவகவல்,
அன்பராகி (8.23.4) செத்திலாப்பத்து;
பட்டினத்துப் பிள்ளையார் - நண்ணிப் பரவும் (11.30.62) திருஏகம்பமுடையார் திருவந்தாதி;
சேக்கிழார் - பன்னெடும் குன்றும் (12.28.340 & 341) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.
தல மரம் : பராய் மரம்
Specialities
இங்குள்ள நவகிரகங்களுள் சனிபகவானுக்கு மட்டுமே வாகனம் உள்ளது; ஏனையோருக்கு வாகனமில்லை.
முதற் பராந்தக சோழன் காலத்தில் கட்டப்பட்டது இத்திருக்கோயில்.
கல்வெட்டில் இத்தலம், "உத்தம சீவிச் சதுர்வேதிமங்கலத்துத் திருப்பராய்த்துறை" என்றும்; இறைவன் பெயர் "பராய்த்துறை மகாதேவர் " என்றும்; "பராய்த்துறைப் பரமேஸ்வரன்" என்றும் குறிக்கப்படுகிறது.
Contact Address