இறைவர் திருப்பெயர்: | புஷ்பவனேஸ்வரர், பூவணநாதர். |
---|---|
இறைவியார் திருப்பெயர்: | சௌந்தரநாயகி, மின்னனையாள். |
தல மரம்: | பலா. |
தீர்த்தம் : | வைகை |
வழிபட்டோர்: | சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், கருவூர்த்தேவர், பரணதேவ நாயனார், பட்டினத்துப் பிள்ளையார், சேக்கிழார் முதலியோர் |
மூவர் பெருமக்களுக்கும் வைகை மணல் சிவலிங்கமாகத் தோன்றியமையால் மூவரும் மறுகரையிலிருந்தே-இத்தலத்தை மிதிக்க அஞ்சி-வணங்க, இறைவன்அவர்கள் தம்மை நேரே கண்டு வணங்குவதற்கு ஏதுவாக நந்தியை விலகச் செய்தருளினார். இதனால் நந்தி சாய்ந்துள்ளதை காணலாம்.
பொன்னனையாள் என்னும் ஒருத்திக்காக இறைவன் சித்தராக வந்து இரசவாதம் செய்து பொன் கொடுக்க, அவள் இதனால் சிவலிங்கம் அமைத்து வழிபட, அது மிகவும் அழகாயிருப்பதைக் கண்டு ஆசையுடன் அச்சிவலிங்கத் திருமேனியை கிள்ளி முத்தமிட்டாளாம். கிள்ளி அடையாளம் சிவலிங்கத்தில் இன்றும் காணலாம்.
.
தேவாரப் பாடல்கள் : பதிகங்கள் : சம்பந்தர் - 1. அறையார்புனலு மாமலரும் (1.64), 2. மாதமர் மேனிய னாகி (3.20); அப்பர் - 1. வடிவேறு திரிசூலந் தோன்றுந் (6.18); சுந்தரர் - 1. திருவுடை யார்திரு மாலய (7.11); கருவூர்த்தேவர் - 1. திருவருள் புரிந்தாள் (9.14) திருவிசைப்பா; பாடல்கள் : சம்பந்தர் - கோவண ஆடையும் (1.07.7), பொதியிலானே பூவணத்தாய் (1.50.10), குலாவுதிங்கட் (2.39.8); அப்பர் - புத்தூ ருறையும் (4.15.10), கோவண முடுத்த (4.77.2), பூவணத்தவன் (5.22.1), தேனார் புனற்கெடில (6.07.11), கோவணமோ (6.25.4), பொன்னலத்த (6.30.8), பொருங்கைமதக் (6.33.1), புன்கூரார் புறம்பயத்தார் (6.51.11), பொன்னிலங்கு (6.59.10), புலிவலம் புத்தூர் (6.70.11), ஐந்தலைய (6.86.8); மாணிக்கவாசகர் - பூவணம் அதனில் (8.02.50 வது வரி பாடல்) கீர்த்தித் திருவகவல், பொருப்பு அமர் பூவணத்து அரனே போற்றி (8.04.192 வது வரி பாடல்) போற்றித் திருவகவல்; பரணதேவ நாயனார் - ஆர்துணையா (11.23.45) சிவபெருமான் திருவந்தாதி; பட்டினத்துப் பிள்ளையார் - நினைவார்க் கருளும் (11.30.61) திருஏகம்பமுடையார் திருவந்தாதி; சேக்கிழார் - ஆவணம் பறிக்கச் சென்ற (12.05.44) தடுத்தாட்கொண்ட புராணம், திரு ஆலவாய் (12.21.406 & 407) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம், பற்றார் தம் புரங்கள் (12.28.886) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம், அந் நாளில் மதுரை நகர் (12.37.97,98 & 99) கழறிற்றறிவார் நாயனார் புராணம்.
புஷ்பவனகாசி, பிதுர்மோக்ஷபுரம், பாஸ்கரபுரம், லட்சுமிபுரம், பிரமபுரம், ரசவாதபுரம் என்பன வேறு பெயர்கள்.
திருப்பூவணப் புராணம் | கந்தசாமிப் புலவர் |
அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு இத்தலம் மதுரை - மானாமதுரை இருப்பு பாதையில் உள்ளது. பேருந்துகளும் நிறைய உள்ளன. இவ்வூர் நான்கு பகுதிகளில் 'கோட்டை' பகுதியில் கோயில் உள்ளது. தொடர்புக்கு :- 04575 - 265 082 , 265 084.