logo

|

Home >

hindu-hub >

temples

திருக்கொடுங்குன்றம் - (பிரான்மலை)

இறைவர் திருப்பெயர்: உமாமகேஸ்வரர், மங்கைபாகர். / கொடுங்குன்றநாதர், கடோரகிரீஸ்வரர்.

இறைவியார் திருப்பெயர்: தேனாம்பிகை, தேனாம்பாள். / குயிலமுதநாயகி, அமிர்தேஸ்வரி.

தல மரம்:

தீர்த்தம் : தேனாழிதீர்த்தம்.

வழிபட்டோர்:சம்பந்தர், அப்பர், சுந்தரர், கபிலதேவ நாயனார், சேக்கிழார் முதலியோர்

Sthala Puranam

Kodunkunram temple

  • மலைக்கு கீழே உள்ள கோயிலான கொடுங்குன்றநாதர் சந்நிதியே பாடல் பெற்ற பதி.

     

  • இக்கோயிலில் மேற்புறம், நடுப்புறம், இடப்புறம் ஆகிய மூன்று அமைப்புகள் சொர்க்கம் - (மங்கைபாகர்), அந்தரம் - (பைரவர்), பூமி - (கடோரகிரீஸ்வரர்) என்று அழைக்கப்பட்டு சுவாமி எழுந்தருளியுள்ளார்.

 

தேவாரப் பாடல்கள்	: 

பதிகங்கள்     :    சம்பந்தர்    -   1. வானிற்பொலி வெய்தும்மழை (1.14);

பாடல்கள்      :    சம்பந்தர்    -      அண்ணாமலை (2.39.2); 

                     அப்பர்       -      மலைவளர்த்த (6.24.9); 

                     சுந்தரர்      -      நிறையனூர் (7.31.5); 

                மாணிக்கவாசகர் -      மாற்றே னெனவந்த (8.14.3) திருக்கோவையார்;  

            கபிலதேவ நாயனார் -      நட்டம்நீ ஆடும் (11.22.27) சிவபெருமான் திருஇரட்டை மணிமாலை; 

                 சேக்கிழார்      -      மன்றல் மலர்ப் (12.28.629 & 630) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.  

 

 

 

Specialities

 

  • மலை மேலே உள்ள மூலவர் உருவங்கள் கல்யாண கோலத்தில் உள்ளன.

     

  • மலை மேலே காரணாகம முறையிலும், கீழே காமிகாகம முறையிலும் பூஜைகள் நடைபெறுகின்றன.

     

  • "பெயரில்லா மரம்" மலைமீது சுவாமி (மங்கைபாகர்) சந்நிதிக்கு அருகில் உள்ளது. இதுகாறும் இம்மரத்தை எவராலும் பெயர் தெரிந்து சொல்லப்படாமையால் "பெயரில்லா மரம்" என்றே அழைக்கின்றனர்.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு மதுரை அண்ணா பேருந்து நிலையம் - பொன்னமராவதி சாலையில் உள்ளது இத்தலம். சிங்கம்புணரி மற்றும் மேலூரிலிருந்து பேருந்துகள் உள்ளன. தொடர்புக்கு :-9443191300 , 04577 - 246170.

Related Content