logo

|

Home >

hindu-hub >

temples

தலையாலங்காடு கோயில்

இறைவர் திருப்பெயர்: நடனேஸ்வரர், ஆடவல்லநாதர்.

இறைவியார் திருப்பெயர்: பாலாம்பிகை.

தல மரம்:

தீர்த்தம் : சங்கு தீர்த்தம், கடுவாய் நதி.

வழிபட்டோர்:அப்பர், கபிலதேவ நாயனார், சேக்கிழார்

Sthala Puranam

  • சங்க காலத்தில் இவ்வூர் தலையாலங்கானம் என்னும் பெயரில் விளங்கியது. (தலையாலங்கானப் போரும், தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் பெயரும் அனைவரும் அறிந்ததே.)

     

  • தமது தவ வலிமையால் அகந்தை கொண்ட தாருகாவன முனிவர்கள் ஆபிசார வேள்வி செய்து ஏவிவிட்ட முயலகனை அடக்கிய சிவபெருமான், அம்முயலகன் மீது நடனம் ஆடிய தலம் இது. எனவேதான், சுவாமிக்கு நர்த்தனபுரீஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது.
  • கிருத யுகத்தில் கபில முனிவர் பூஜித்து, தை அமாவாசை தினத்தில் சிந்தாமணியைப் பெற்றுக்கொண்டார். 

     

  • சரஸ்வதி தேவிக்கு இறைவர் சோதிர்லிங்கமாகக் காட்சி வழங்கி அருள்பாளித்த திருத்தலம்.

 

Sri Nataneswarar temple, Thalaiyalangadu.

 

தேவாரப் பாடல்கள்	: 

பதிகங்கள்    :      அப்பர்   -    1. தொண்டர்க்குத் தூநெறியாய் (6.79);

பாடல்கள்          :      அப்பர்       -             நல்லூரே நன்றாக (6.25.10), 

                                                                     கொண்டலுள்ளார் (6.51.9),  

                                                                     இடைமரு தீங்கோ (6.70.3), 

                                                                     மலையார்தம் மகளொடு (6.71.6) 

         கபிலதேவ நாயனார்       -             தலையாலங் காட்டிற் (11.22.93) சிவபெருமான் திருவந்தாதி     

                             சேக்கிழார்     -             நீடு திரு வாஞ்சியத்தில் (12.28.573) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.

Specialities

  • கோயிலின் முன்புள்ள தீர்த்தத்தில் நீராடி இறைவனுக்குத் தீபமிட்டு உறுதியுடன் வழிபட்டால் வெண்குஷ்ட நோய் நீங்கப்பெறும் என்பது இன்றும் மக்களின் அசையாத நம்பிகையாக உள்ளது.

  • ஆண்டு தோறும் பங்குனி மாதத்தில் கடைசி இரு நாட்களும்,  தொடரும் சித்திரை மாதத்து முதல் இரு நாட்களும் விடியற்காலை  சூரியோதயத்தின் போது, சூரியனின் ஒளிக்கதிர்கள் சுவாமியின் மீது விழும்போது சூரியபூஜை நடத்தப்படுகிறது.

  • இங்குள்ள பைரவர் மிகவும் சக்தி வாய்ந்த மூர்த்தி. தீராத பகைகளையும் பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பவர். எனவே, தேய்பிறை அஷ்டமியின்போது மக்கள் இவருக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து, நலம் யாவும் பெறுகின்றனர்.

  • கல்வெட்டுக்கள்: .ராஜராஜனின் ஆறாவது ஆண்டு ஆண்டில் அளிக்கப்பட தேவ தானங்களும் அருமை உடையார் குமாரன் செண்டானாதர் உடையார் மகாமண்டபம் கட்டித்தந்த செய்தியும், அம்பர் அருவந்தை அரயன் சிவதவனப் பெருமானான காளிங்க ராஜன் என்பவர்  இக் கற்றளியைத் திருப்பணி செய்த தகவலும் கல்வெட்டுக்கள் மூலம் அறிய முடிகிறது.

  • தை அமாவாசையை முன்னிட்டு இரு தினங்கள் சுவாமி புறப்பாடாகி, சங்க தீர்த்தத்தில் தீர்த்தவாரி நடைபெறுகிறது.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு திருவாரூர் - கும்பகோணம் பேருந்துச் சாலையில் (18-கி.மீ.) தலையாலங்காடு அடைந்து (இரண்டு வாய்க்கால்களை கடந்து சென்றால்) கோயிலை அடையலாம். தொடர்புக்கு : 9443500235 , 04366 - 269235.

Related Content