logo

|

Home >

thala-marangalin-sirappukal >

temple-trees-palm-tree

temple-trees-தலமரச் சிறப்புகள் பனை மரம் (Palm Tree)

தலமரச் சிறப்புகள்


பனை Borassus flabelliber, Linn.; Palmae.

 

ஏடுலா மலர்மிசை அயனெழில் மாலுமாய் 
நாடினார்க் கரியசீர் நாதனார் உறைவிடம் 
பாடெலாம் பெண்ணை யின்பழம்விழப் பைம்பொழில் 
மாடெலாம் மல்குசீர் மாமழ பாடியே.

                                                                                                  - திருநாவுக்கரசர்.

 

 

திருப்பனந்தாள்,திருப்புறவார் பனங்காட்டூர்,திருப்பனையூர்,திருமழபாடி, திருவோத்தூர், திருவன்பார்த்தான் பனங்காட்டூர், திருவலம்புரம் , திருப்பாலைத்துறை, திருக்கன்றாப்பூர முதலிய சிவத் தலங்களில் பனை மரம் தலமரமாக விளங்குகின்றது. இவற்றுள் திருக்கன்றாப்பூர் தலத்தில் இம்மரம் தற்போதில்லை.  கைவடிவமான விசிறி போன்ற தனியிலைகளையும் புறவயிரமுடைய நெடிதுயர்ந்து கிளையிலாது வளரும் புல்லின மரமாகும். தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் தானே வளர்வது. குருத்து, ஓலை, பாளை, பூ, மது, கள், நுங்கு, பழம் ஆகியவை மருத்துவப் பயனுடையதாகும்.

 

ஓலை சதை நரம்புகளைச் சுருங்கச் செய்து குருதி சீழ்க்கசிவைத் தடுக்கும். நுங்கு சிறுசீர்ப் பெருக்கி அகவெப்பத்தைத் தணித்து உடலை உரமாக்கும்; மது சிறுநீர் பெருக்கி குளிர்ச்சி உண்டாக்கும். கள் நாடி நடையை மிகுத்து உடல் வெப்பம் தரும்; நீர்விடாய்த் தணிக்கும்.

 

 

< PREV <
பன்னீர்மரம்
Table of Content > NEXT >
பாதிரிமரம்

 

Related Content