logo

|

Home >

hindu-hub >

temples

கன்றாப்பூர் (கோயில்கண்ணாப்பூர்)

இறைவர் திருப்பெயர்: வஸ்ததம்பபுரீஸ்வரர், நடுதறியப்பர், நடுதறிநாதர்.

இறைவியார் திருப்பெயர்: ஸ்ரீ வல்லிநாயகி, மாதுமையம்மை.

தல மரம்:

தீர்த்தம் : சிவகங்கை.

வழிபட்டோர்:அப்பர், சேக்கிழார், இடும்பன்.

Sthala Puranam



 

Kanrappur temple

  • சைவப் பெண் ஒருத்தி வைணவன் ஒருவனுக்கு மனைவியாகி, மாமியார் வீட்டார் காணாதவாறு சிவலிங்க வழிபாடு செய்ய, கணவன் அது கண்டு அவ்லிங்கத்தைக் கிணற்றில் எறிந்து விட, அப்பெண் வேறுவழியின்றி கன்று கட்டியிருந்த முளை (ஆப்பு)யையே சிவபெருமானாகப் பாவித்து வழிபட; ஒரு நாள் கணவன் அதையும் கண்டு, கோபித்து அம்முளையைக் கோடரியால் வெட்ட இறைவன் வெளிப்பட்டு அருள்புரிந்த தலம். (கன்று + ஆப்பு + ஊர் = கன்றாப்பூர்).

 

தேவாரப் பாடல்கள்		: 

பதிகங்கள்   :   அப்பர்   -   1. மாதினையோர் கூறுகந்தாய் (6.61); 

பாடல்கள்    :   அப்பர்   -      நறையூரிற் சித்தீச் சரம் (6.70.10), 
                                  கரும்பிருந்த கட்டிதனைக் (6.79.8); 

பாடல்கள்    : சேக்கிழார் -      நீர் ஆரும் சடை முடியார் (12.21.228) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்.

 

 

Specialities

  • இங்குள்ள நால்வர்களுள் இருவர் சம்பந்தராகவும், இருவர் அப்பராகவும் காட்சி தருகின்றனர். (மற்றிருவர் இல்லை)

     

  • மூலவர் - பாணத்தில் (தலவரலாற்றுக் கேற்ப) வெட்டிய தழும்புள்ளது; சதுர பீடம்.

     

  • இவ்வூரில் உள்ள எல்லா நிலங்களும் அ/மி. நடுதறிநாதர் பெயரிலேயே பட்டாவாக உள்ளன. தனிப்பட்ட எவருக்கும் சொந்தமாக வேறு பட்டா நிலங்கள் இல்லையாம்.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு (1) நாகப்பட்டினம் - திருத்துறைப்பூண்டி சாலையில் வருவோர் சாட்டியக்குடி வந்து, அக்கூட்டுரோடில் பிரியும் சாலையில் 2 கி. மீ. சென்று, ஆதமங்கலம் தாண்டி, "கோயில் கண்ணாப்பூர் கூட்டுரோடு" என்று கேட்டு அவ்விடத்தில் வலப்புறமாக பிரியும் உள்சாலையில் 1 கி. மீ. சென்றால் தலத்தையடையலாம். (2) திருவாரூர் - திருத்துறைப்பூண்டி சாலையில் வருவோர் மாவூர் கூட்டுரோடு வந்து அங்குப் பிரியும் சாலையில் மருதூர் வந்து, அதற்கு அடுத்துள்ள "கோயில் கண்ணாப்பூர் கூட்டுரோடு" என்று கேட்டு அவ்விடத்தையடைந்து அங்கு (இடப்புறமாக) பிரியும் உள்சாலையில் 1 கி. மீ. சென்றால் தலத்தையடையலாம். கோயில் வரை வாகனங்கள் செல்லும். (கீழ கண்ணாப்பூர் என்று ஊர் ஒன்றுள்ளது; தலம் அதுவன்று. எனவே, "கோயில் கண்ணாப்பூர் " என்று கேட்க வேண்டும்.)

Related Content