இறைவர் திருப்பெயர்: பனங்காட்டீசர்.
இறைவியார் திருப்பெயர்: புறவம்மை, சத்யாம்பிகை.
தல மரம்:
தீர்த்தம் : பத்ம தீர்த்தம். சடா கங்கை
வழிபட்டோர்:சம்பந்தர், சேக்கிழார், சூரியன், சிபிச்சக்கரவர்த்தி.
- இது, பனை மரத்தைத் தலமரமாகக் கொண்டதாலும், சிபிச் சக்கரவர்த்தி (புறாவின் பொருட்டு தன் தசையை அரிந்தவர்) வழிபட்டதாலும்(புறவார்), இப் பெயர் பெற்றது.
- சூரியன், பூசித்துப் பேறுபெற்றத் தலம். சிவபெருமானை நிந்தித்துத் தக்கன் செய்த வேள்விக்குச் சென்று அவிர்ப்பாகம் உண்ட அனைத்துத் தேவர்களும் சிவ அபராதத்துக்கு ஆளாயினர். அவர்களில் சூரியனும் ஒருவன். அகோர வீரபத்திரர் சிவபெருமான் கட்டளைப்படி தக்கனது வேள்விச் சாலைக்குச் சென்று தேவர்களுக்குத் தண்டனை தந்தார். தண்டனையால் சூரியன் ஒளியிழந்தான். தான் செய்த தவறுக்கு வருந்தி சூரியன் சிவபெருமானைப் பல தலங்களிலும் வழிபாடுகள் செய்து உலகனைத்திற்கும் ஒளியூட்டும் தனது பழைய உருவத்தை இறைவனிடம் வேண்டிப் பெற்றான். சூரியன் வழிபட்ட தலங்களில் புறவார் பனங்காட்டூர் என்ற இத்தலமும் ஒன்றாகும். ஆண்டுதோறும் சித்திரைத் திங்கள் முதல் ஏழு நாட்களில் ஒவ்வொரு நாள் காலையிலும் சூரியக் கதிர்கள் முதலில் சுவாமி மீதும், பின்பு அம்பிகை மீதும் விழுகின்றன.
தேவாரப் பாடல்கள் :
பதிகங்கள் : சம்பந்தர் - 1. விண்ணமர்ந்தன மும்மதில் (2.53);
பாடல்கள் : சேக்கிழார் - அரசிலியை (12.28.53) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
இது, விழுப்புரம் இரயில் நிலையத்திற்கு வடக்கேயுள்ள முண்டியம்பாக்கம் இரயில் நிலையத்திற்கு வடகிழக்கே 2-கி. மீ. தூரத்தில் உள்ளது. விழுப்புரம் - பாண்டிச்சேரி (திருக்கனூர் - வழி) செல்லும் பஸ்களில் இக்கோவிலை அடையலாம். பனையபுரம் என வழங்கப்படுகின்றது.
தொடர்பு :
09942056781