இறைவர் திருப்பெயர்: மாத்ருபூதேஸ்வரர், தாயுமானேஸ்வரர், தாயுமானவர்.
இறைவியார் திருப்பெயர்: மட்டுவார்குழலி, சுகந்தகுந்தளாம்பிகை.
தல மரம்:
தீர்த்தம் : காவிரி, சிவகங்கை
வழிபட்டோர்:சம்பந்தர், அப்பர், மாணிக்கவாசகர், சேக்கிழார், பிரமன், இந்திரன், சடாயு, சப்தரிஷிகள், திரிசிரன், சாரமாமுனிவர், மௌனகுரு, தாயுமானவர் முதலியோர்.
Sthala Puranam

தற்போது மக்களால் திருச்சிராப்பள்ளி, திருச்சி என்று வழங்குகிறது.
எல்லா உயிர்க்கும் தந்தையாகவுள்ள இறைவன் ஒரு பெண்ணுக்கு மகப்பேறு காலத்தில் தாயாக வந்து உதவி செய்தமையால் தாயுமானவர் (தாயும் ஆனவர்) என்று பெயர் பெற்றார்.
திரிசிரன் (மூன்று தலைகளை கொண்ட அசுரன்) வழிபட்டதாலும்,ஆதிசேஷனுக்கும், வாயுதேவனுக்கும் ஏற்பட்ட சச்சரவினால் வாயு வன்மையால் திருக்கைலாயத்திலிருந்து மூன்று துண்டுகளுள் ஒரு சிகரம் இங்கு வந்து மலையயின்மையாலும் தலப்பெயர் என்று 'திரிசிராப்பள்ளி' பெயர் பெற்றது.
ஆதிசேஷனுக்கும், வாயுதேவனுக்கும் ஏற்பட்ட சச்சரவினால் வாயு வன்மையால் திருக்கைலாயத்திலிருந்து மூன்று துண்டுகளுள் ஒரு சிகரம் இங்கு வந்து மலையானமையாலும் தலப்பெயர் ஏற்பட்டதென்பது புராண வரலாறு.
தேவாரப் பாடல்கள் : பதிகங்கள் : சம்பந்தர் - 1. நன்றுடையானைத் தீயதிலானை (1.98); அப்பர் - 1. மட்டு வார்குழ லாளொடு (5.85); பாடல்கள் : சம்பந்தர் - அறப்பள்ளி (2.39.4); அப்பர் - புறம்ப யத்தெம் (4.15.4), செல்வப் புனற்கெடில (6.7.1), உலர்ந்தார்தம் (6.20.5), பொன்மணியம் (6.22.7), வெண்காட்டார் (6.51.4), தில்லைச் சிற்றம்பலமுஞ் (6.70.1); சுந்தரர் - தேங்கூ ருந்திருச் சிற்றம் (7.12.4); மாணிக்கவாசகர் - சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி (8.4.154 வது வரி; ஐயடிகள் காடவர்கோன் - கழிந்தது நென்னற்றுக்
; சேரமான் பெருமாள் - இருள்புரி கூந்தலும், வந்தார் எதிர்சென்று ; கபிலர் - தெருளிலார் என்னாவார் ;
பரணர் - தாளார் கமல, இடமாய எவ்வுயிர்க்கும் ; பட்டினத்துப்பிள்ளையார் - மணியார் அருவித் சேக்கிழார் - சிலந்திக்கு அருளும் (12.21.302) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம், கற்குடி மாமலை (12.28.343 & 344) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.
Specialities
Contact Address