logo

|

Home >

thala-marangalin-sirappukal >

temple-trees-arasa-maram

temple-trees-தலமர சிறப்புகள் அரச மரம்

தலமர சிறப்புகள்



அரசு Flcus religiosa, Linn.; Moraceae.

அலைபுனல் ஆவடு துறையமர்ந்த
இலைநுனி வேற்படையெம் இறையை 
நலம்மிகு ஞானசம் பந்தன்சொன்ன
விலையுடை யருந்தமிழ் மாலைவல்லார் 
	வினையாயின நீங்கிப்போய் விண்ணவர் வியனுலகம் 
	நிலையாகமுன் னேறுவர் நிலமிசை நிலையாரே.
						              - திருஞானசம்பந்தர்.

 

 

   

 இம்மரம் திருவாவடுதுறை, திருநல்லம், திருப்பரிதிநியமம்ஆவூர்ப்பசுபதீச்சுரம் , திருஅரசிலி , திருவியலூர்திருவெண்காடு , திருச்சுழியல்  முதலிய சிவத்தலங்களில் தலமரமாக விளங்குகிறது. தமிழகமெங்கும் காணப்படும் கூரிய இலைகளையுடைய பெருமரம் (இது திருவாவடுதுறை தலத்தில் படர்ந்து காணப்படுவதால், படர் அரசு எனப்படுகிறது). இம்மரத்தைத் திருமரம் என்றும் கூறுவதுண்டு. ஏரி, குளக்கரைகளில் வேம்புடன் இணைத்து வளர்க்கப்பெறுவதுண்டு; இவ்விணை மரங்களை வலம் வருவதால் மகப்பேறு வாய்க்கும் என்று மக்களால் நம்பப்படுகிறது. இந்நம்பிக்கை அரச விதையால் ஆண்மலடு நீங்கும் என்பதையும், வேப்பிலையால் பெண்மலடு நீங்கும் என்பதையும் குறிப்பால் உணர்த்தியதேயாம். இம்மரத்தில் துளிர், பட்டை, வேர், விதை ஆகிய பாகங்கள் மருத்துவக் குணமுடையது.

 

 

      கொழுந்து வெப்பு அகற்றி தாகந்தணிக்கவும், விதை காமம் பெருக்கவும், வேர், பட்டை ஆகியவை வீக்கம் குறைக்கவும் மருந்தாகப் பயன்படுகிறது.


 

< PREV <
அத்திமரம்
Table of Content > NEXT >
அலரிசெடி

 

Related Content

Pictures of Sthala vruksham or Temple Trees

temple-trees-தலமரச் சிறப்புகள் அத்தி மரம் (Cluster Fig Tree)

temple-trees-தலமர சிறப்புகள் அகில் மரம்

temple-trees-தலமரச் சிறப்புகள் அலரிச் செடி (Oleander Plant)

temple-trees-தலமர சிறப்புகள் ஆமணக்குச் செடி