இறைவர் திருப்பெயர்: உமாமகேஸ்வரர், பூமீஸ்வரர், பூமிநாதர்.
இறைவியார் திருப்பெயர்: தேகசௌந்தரி, அங்கவளநாயகி.
தல மரம்:
தீர்த்தம் : பிரம தீர்த்தம். சக்தி தீர்த்தம்
வழிபட்டோர்: சம்பந்தர்,அப்பர், பட்டினத்துப் பிள்ளையார், சேக்கிழார்
Sthala Puranam
இங்கு இறைவன் (வைத்தியநாதர்), புரூரவமன்னனின் குட்டநோயைத் தீர்த்ததாக சொல்லப்படுகிறது. (இச்சந்நிதியில் ஜபம் செய்தால் பலமடங்கு பயனுண்டு என்று சொல்லப்படுகிறது).
தேவாரப் பாடல்கள் : பதிகங்கள் : சம்பந்தர் - 1. கல்லால் நிழல்மேய (1.85); அப்பர் - 1. கொல்லத் தான்நம னார்தமர் (5.43); பாடல்கள் : அப்பர் - சீரார் புனற்கெடில (6.007.9); பட்டினத்துப் பிள்ளையார் - நண்ணிப் பரவும் (11.30.62) திருஏகம்பமுடையார் திருவந்தாதி, சேக்கிழார் - வைகல் நீடு மாடக் கோயில் (12.28.433 & 434) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.
Specialities
இங்குள்ள கல்வெட்டுக்கள் இராசராசன், இராசேந்திரன், முதலாம் இராசாதிராசன், இரண்டாம் இராசேந்திரன், முதலாம் குலோத்துங்கன் காலத்தியவை.
வேங்கிபுரம் முதலிப்பிள்ளை என்பவன் நன்கொடையால் கோயில் கட்டப்பட்டதாகவும், 'நக்கன் நல்லத் தடிகள்' என்பவனால் சண்டேசுவரர் உற்சவத் திருமேனி செய்து தரப்பட்டது என்றும், குந்தவை பல நன்கொடைகளைக் கோயிலுக்குத் தந்துள்ளாள் என்றும் பல செய்திகள் கல்வெட்டு வாயிலாக தெரிய வருகின்றன.
Contact Address