இறைவர் திருப்பெயர்: திருமேனிநாதர், சுழகேசர், பிரளயவிடங்கர், தனுநாதர், மணக்கோலநாதர், கல்யாணசுந்தரர், பூமீஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர்: துணைமாலையம்மை, சகாயவல்லி, சொர்ணமாலை, முத்துமாலையுமையாள், மாணிக்கமாலை.
தல மரம்:
தீர்த்தம் : பாவகிரி நதி, கவ்வைக்கடல் (ஒலிப்புணரி), பூமிதீர்த்தம், சூலதீர்த்தம்.
வழிபட்டோர்:அப்பர், சுந்தரர், சேரமான் பெருமான், சேக்கிழார். திருமால், இந்திரன், பிரமன், சூரியன், பூமிதேவி, கௌதமர், அகலிகை, கண்வமுனிவர்,அருச்சனன், சித்திராங்கதை.
Sthala Puranam
சிவபெருமான் ஒருசமயம் பிரளயத்தைச் சுழித்துப் பூமிக்குள் புகச் செய்தார் ஆதலின் (திருச்)சுழியல் என்று பெயர் பெற்றது.
தேவாரப் பாடல்கள் : பதிகங்கள் : சுந்தரர் - 1. ஊனாய்உயிர் புகலாய் (7.82); பாடல்கள் : அப்பர் - திருநீர்ப் புனற்கெடில (6.7.12); சுந்தரர் - சுற்றுமூர் சுழியல் (7.31); சேக்கிழார் - பற்றார் தம் புரங்கள் (12.28.886) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம், திரு இராமேச்சரத்துச் (12.37.110,111 & 114) கழறிற்றறிவார் நாயனார் புராணம்.
Specialities
அம்பாள் சந்நிதியில் உட்புறத்தில் அம்பாளுக்கு எதிரில் ஸ்ரீ சக்கரம் கல்லில் வடிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.
அம்பாள்; திரிபங்கி லட்சண அமைப்பில், இடுப்பு, கழுத்து, இடக்கால் சற்று சாய்ந்து நடன அமைப்பில் தரிசனம்.
Contact Address